இடுகைகள்

மாயன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காதலர் தினத்திற்கு சாக்லெட்டுகள் எதற்கு தருகிறார்கள் தெரியுமா?

படம்
giphy மிஸ்டர் ரோனி காதலர் தினத்திற்கு சாக்லெட் கொடுப்பது எதற்கு? முக்கியமான தினத்தில் ரோஜா பூக்களை கொடுப்பது ஒருவகை. ஆனால் இன்றுதான் நெஸ்லே, ஐடிசி முதற்கொண்டு கடைவிரித்து சல்லீசு ரேட்டில் சாக்லெட்டுகளை விற்கிறார்கள். அப்புறமென்ன சாப்பாட்டு பிரியைகளான பெண்களுக்கு இதைவிட வேறென்ன வேண்டும்? வரலாறைப் பார்ப்போம். கி.மு. 500இல் மாயன்கள் காலத்திலேயே காபி கொட்டைகளை நீரில் போட்டு காய்ச்சி குடித்து வந்தனர். மாயன்களின் திருமணத்தில் இந்த சூடான சாக்லெட் பானங்களை திருமணமான தம்பதிகள் குடித்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். ஆஸ்டெக் இன மன்னரான இரண்டாம் மான்டெசுமா, கைத்தொழில் மன்னனாக படுக்கையில் பெண்களை வீழ்த்தி சிருங்கார சாகசங்களை செய்திருக்கிறார். இதற்காக காபி கொட்டைகளை அரைத்து குடித்து களித்திருக்கிறார். இதில் உள்ள ட்ரிப்டோபான், பெனிலெத்திலாமைன் ஆகிய பொருட்கள் காதல் உணர்வு, காம உணர்வு இரண்டையும் இமயமலை உயரத்திற்கு எழுப்பும் என்று அவர் நம்பினார். ஆனால் பின்னாளில் ஆராய்ச்சியாளர்கள் அப்படியெல்லாம் கிடையாது. அந்தளவுக்கு இந்த வேதிப்பொருட்கள் இப்பொருளில் இல்லை என அறிக்கை விட்டனர். 18