இடுகைகள்

புன்னகை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நட்பை வளர்த்துக்கொள்ள சில ஆலோசனைகள்!

படம்
  நட்பு நட்பை வளர்த்துக்கொள்ள மேற்குலகில் எப்போதும் போல ஏராளமான நூல்கள் உள்ளன. உண்மையில் மனிதர்கள் தனியாக இருக்கும்போது பல விஷயங்களையும் தானே கற்றுக்கொள்ள வேண்டியதிருக்கிறது. சுய உதவி, முன்னேற்ற நூல்களின் சாதனை விற்பனை அதைத்தான் விவரிக்கிறது. நட்பை துணையா கொள்ள என்ன செய்யலாம்… அதிர்ஷ்டம் உதவாது நட்பை உருவாக்குவதில் எதிர்பாராத விஷயங்கள், அதிர்ஷ்டம் என்பது உதவும் என ஒரு காலத்தில் மக்கள் நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால் அது உண்மையல்ல. நட்பு என்பது உருவாக்கப்படவேண்டியது. அது தானாக உருவாகாது என எழுத்தாளர் சாஸ்தா நெல்சன் கூறுகிறார். இவர் ஹவ் டு டீப்பன் ஃபிரண்ட்ஷிப் ஃபார் லைஃப்லாங் ஹெல்த் அண்ட் ஹேப்பினஸ் என்ற நூலை எழுதியிருக்கிறார். நம்பிக்கை அதுதான் எல்லாம் நம்பிக்கையோடு ஒருவரை சந்திப்பது, அவருக்கு சிறு பரிசுகளை அளிப்பது நட்பை புத்துயிர்ப்பு செய்யும் என பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் 2022ஆம் ஆண்டு ஆய்வு கூறுகிறது. பரிசு என்பதன் கூடவே பாராட்டையும் கூட சேர்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் இன்றைக்கு ஒருவரைப் பாராட்டுவதை கூட குழுவாதம் அடிப்படையில் தனக்குப் பிடித்தவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து வைத்த

மக்களை புன்னகைக்க செய்ய நினைத்தேன்! பாலகிருஷ்ண தோஷி, கட்டுமானக் கலைஞர்

படம்
பி.வி. பாலகிருஷ்ணா தோஷி கட்டுமான கலைஞர்  பிரைட்ஸ்கர் பிரைஸ் என்ற கட்டுமான கலையின் நோபல் என்று அழைக்கப்படும் பரிசைப் பெற்றிருக்கிறீர்கள். இதோடு ராயல் கோல்டு மெடல் பரிசும் கிடைத்துள்ளது. இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ரிபா அமைப்புடன் எனது தொடர்பு பல்லாண்டுகளாக இருந்து வருகிறது. கட்டுமானக் கல்வியை படித்தபோதிலிருந்து எனக்கு அந்த அமைப்புடன் நல்ல உறவு உண்டு.  நான் ரிபா அமைப்பின் நூலகத்தை பயன்படுத்தி வந்தேன். அங்கு படித்த நூல்களைப் பற்றிய நினைவுகள் எனக்கு இன்றும் இருக்கிறது.  அவை சிறப்பானவை. லே கார்பசியர் ரிபா தங்கமெடல் விருதை வாங்கும்போது நான் அவருடன் தான் இருந்தேன்.  லே கார்பசியரை எப்படி உங்களது குரு என்று சொல்லுகிறீர்கள்? ஒரு இடத்தில் வெளிச்சம் எப்படி இருக்கவேண்டும், அமைப்பு, மேசைகளின் இடம் பற்றியெல்லாம் விளக்கியிருக்கிறார். இதைப்பற்றி எழுதிய தாள் எனது மேசை டிராயரில் இப்போதும் உள்ளது. பின்னாளில் தான் அவர் வரைந்து வைத்த இடம் உண்மையில் கிடையாது என்றும், தாளில் மட்டும் தான் உருவானது என தெரிந்தது. ஆனால் அவரது கிரியேட்டிவிட்டி என்னை ஆச்சரியப்படுத்தியது என்று தனியாக கூறவேண்டுமா என்ன? விலை குறை

சிரிப்பு சமூகத்திற்கு உதவுமா?

படம்
giphy மிஸ்டர் ரோனி சிலரைப் பார்த்து நாம் பற்கள் தெரியாமல்  புன்னகைக்கிறோம். சிலரோடு வெடித்து சிரிக்கிறோம். இது எதனால் நேருகிறது? வி.ஐ.பி உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு பில் கொடுக்க பணம் நீட்டுகிறீர்கள். சரவணபவன் விலையில் அவ்வளவு திருப்தி தராத உணவு அது என உங்கள் மனசு சொல்லுகிறது. தினசரி அங்கு வந்து சாப்பிட்டாலும அது உங்கள் மனதில் குறையாக இருக்கிறது. கல்லாப்பெட்டியில் உட்கார்ந்திருப்பவரிடம் காசு கொடுத்துவிட்டு மீதிச் சில்லறையை வாங்கிவிட்டு லைட்டாக புன்னகைத்து விட்டு தலையாட்டிவிட்டு நகர்கிறீர்கள். இது வற்புறுத்தலாக புன்னகை. கிரிக்கெட் வீரர் தோனியைப் பார்த்திருப்பீர்கள். சிரிக்காத சூழலில் அவர் முறைப்பது போல தெரியும். இதனால் அவர் புன்னகையுடன் இருப்பதை வாடிக்கையாக்கிக் கொண்டார். பொதுவாக உளவியல் ரீதியாக பாருங்களேன். உங்களுக்குப் பிடித்த ஒருவருடன் பேசும்போது இயல்பாக உதடுகளைப் பிரித்து பற்கள் தெரிய சிரிப்பீர்கள். ஆனால் அதுவே பொதுவான ஒருவருடன் பேசும்போது அது சாத்தியமில்லை. மரியாதையான எளிய புன்னகை மட்டுமே செய்வீர்கள். காரணம் சமூகரீதியாக புன்னகை என்பது பிறருடன் பழகுவதற்கு அடிப்படையா

கணினிகளுக்கு ஜோக் சொல்ல கற்றுத்தருகின்றனர்!

படம்
கணினிகளுக்கு சிரிப்பைக் கற்றுத்தர முடியுமா? கூகுளின் கணினி சிக்கலான விளையாட்டுகளில் பல்வேறு திறன் வாய்ந்த வீர ர்களை வென்றது. பிற திறன் பெற்ற கணினிகள்,செஸ் விளையாண்டன. கவிதை பாடின. ஓவியங்களை வரைந்தன. இன்னும் பல்வேறு ஆய கலைகளிலும் தன் கால்களை பதித்தன. இத்தகவல்களை வைத்து விகடன் இதழில் தொடரே எழுதி பயமுறுத்தினர். ஆனால் அவை கற்காத முக்கியமான ஒன்று, சிரிப்பு. தான் கூறும் அல்லது தன்னிடம் கூறப்படும் வாக்கியங்களின் பொருளைப் புரிந்துகொண்டு அது என்ன என்று உள்வாங்கிக்கொள்ளும் திறனை செயற்கை நுண்ணறிவு இன்னும் கற்கவில்லை. எடின்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் கிரேசிம் ரிச்சியின் கணினியின் பெயர் சிரிப்பு கணினி. இக்கணினி, தினசரி ஓரு ஜோக்கை பர்வீன் யூனூஸ் போல ட்விட்டரில் பதிவிட்டு வருகிறது. இருப்பதிலேயே ஜோக்கை சிம்பிளாக சொல்லி புரியவைப்பதுதான் கடினம். அதனை ஏ.ஐ.க்கு சொல்லி, அதற்கு புரியவைத்து பிறரை சிரிக்க வைப்பது மிக கடினம். ”கணினிகள் ஜோக்கைப் புரிந்துகொள்வது ஒரு ரகம் என்றால், அவையே ஜோக்கை தயாரிப்பது மற்றொரு ரகம். இதற்கு நீங்கள் வழக்கம்போல  கணினிக்கு பயிற்சி அளிக்க வேண்டும். மேலும், இதற்