சிரிப்பு சமூகத்திற்கு உதவுமா?
giphy |
மிஸ்டர் ரோனி
சிலரைப் பார்த்து நாம் பற்கள் தெரியாமல் புன்னகைக்கிறோம். சிலரோடு வெடித்து சிரிக்கிறோம். இது எதனால் நேருகிறது?
வி.ஐ.பி உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு பில் கொடுக்க பணம் நீட்டுகிறீர்கள். சரவணபவன் விலையில் அவ்வளவு திருப்தி தராத உணவு அது என உங்கள் மனசு சொல்லுகிறது. தினசரி அங்கு வந்து சாப்பிட்டாலும அது உங்கள் மனதில் குறையாக இருக்கிறது. கல்லாப்பெட்டியில் உட்கார்ந்திருப்பவரிடம் காசு கொடுத்துவிட்டு மீதிச் சில்லறையை வாங்கிவிட்டு லைட்டாக புன்னகைத்து விட்டு தலையாட்டிவிட்டு நகர்கிறீர்கள்.
இது வற்புறுத்தலாக புன்னகை. கிரிக்கெட் வீரர் தோனியைப் பார்த்திருப்பீர்கள். சிரிக்காத சூழலில் அவர் முறைப்பது போல தெரியும். இதனால் அவர் புன்னகையுடன் இருப்பதை வாடிக்கையாக்கிக் கொண்டார். பொதுவாக உளவியல் ரீதியாக பாருங்களேன். உங்களுக்குப் பிடித்த ஒருவருடன் பேசும்போது இயல்பாக உதடுகளைப் பிரித்து பற்கள் தெரிய சிரிப்பீர்கள். ஆனால் அதுவே பொதுவான ஒருவருடன் பேசும்போது அது சாத்தியமில்லை. மரியாதையான எளிய புன்னகை மட்டுமே செய்வீர்கள். காரணம் சமூகரீதியாக புன்னகை என்பது பிறருடன் பழகுவதற்கு அடிப்படையானது. அங்கு போய் ராஜ்கிரண் மாதிரி மூக்கைப் புடைப்பாக வைத்து தோள்பட்டையை உயர்த்தினால் என்னாகும்? அதற்குத்தான்.
நன்றி - பிபிசி