கோவிட் -19 இறப்பைக் கணக்கிடுவதில் ஏன் சிக்கல்?

Envato, Covid, Corona Virus, Corona, Virus, Gloves
pixabay




கோவிட் 19 நோயும், இறப்பும்!


இந்தியாவில் கோவிட் -19 பாதிப்பும் இறப்பும் மக்களை பயமுறுத்தி வருகிறது. நூறுபேரை கொரோனா தாக்கினால் அதில் மூன்று பேருக்கு இறப்பு நிச்சயம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.. 

இப்போது சோதனையில் குறைவான ஆட்கள் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. பரவலான அளவில் சோதனைகள் நடந்தால் மட்டுமே உண்மையாக பாதிக்கப்பட்ட கோவிட் -19 நோயாளிகளை கண்டறிய முடியும்.
உலகளவில் பதினான்கு நாடுகளில் நூற்றுக்கணக்கானோர் வைரஸ் பாதிப்பிற்கு பலியாகியுள்ளனர். இருப்பதிலே குறைவான பலிகளைக் கொண்ட நாடு ஜெர்மனிதான். அந்நாட்டில் நூறு பேர்களுக்கு 0.69 பேர் மட்டுமே இறப்பை சந்திக்கின்றனர். இதில் அதிகபட்சமாக இத்தாலி நாடு நூறு பேர்களுக்கு 10.69 என்ற எண்ணிக்கையில் இறப்பைச் சந்தித்து வருகிறது. தென்கொரியா இந்த விதத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
சீனாவிலிருந்து வைரஸ் பரவினாலும் அதனை கட்டுப்படுத்துவதில் அந்நாடே முன்னிலையில் உள்ளது. ஏறத்தாழ பாதிக்கப்பட்டவர்களை பெரும்பாலும் காப்பாற்றிவிட்டனர். ஆனால் இதில் ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம், நெதர்லாந்து ஆகியவை அதிகளவு இறப்பைச் சந்தித்துள்ளன.
கொரோனாவால் நிறைய மக்கள் இறப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் குறைவான மக்களே இறப்பதாகவும் இரு பிரிவினர் கூறிவருகின்றனர். இதில் எது உண்மை என்று பார்ப்போம். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களையும், அதில் இறப்பவர்களையும் பின்வரும் ஃபார்முலா மூலமே கணக்கிடுகிறார்கள்.

10/1000x100 = 1% அதாவது, ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டால் அதில் இறப்பவர்களின் எண்ணிக்கை 1.  நூறில் ஒருவர் நிச்சயமாக இறந்துவிடுகிறார்.
பாதிக்கப்பட்டவர்கள் தானாக முன்வந்து சோதனை செய்தபிறகுதான் அரசு அவர்களை கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்லி எண்ணிக்கையை அதிகரிக்கிறது. ஆனால் இதனை பரவலாக்கினால்தான் சோதனைக்கு வராதவர்களின் எண்ணிக்கை தெரியவரும். அதன்மூலம் கொரோனா பாசிட்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. 

அரசு தனது செய்தியில் கூறும் நோயாளிகள் பலரும் தீவிரமான பாதிப்பு கொண்டவர்கள். ஆனால் அவர்கள் தவிர்த்து ஆரம்பநிலை அறிகுறிகளைக் கொண்டவர்களும் இப்பட்டியலில் இடம்பெறுவது அவசியம். அரசிடம் அவர்களை சோதிக்கும் சாதனங்கள், திட்டங்கள் கிடையாது என்பதே அடுத்தகட்ட அபாயமாக உள்ளது.

பிரபலமான இடுகைகள்