இடுகைகள்

கிராமப்புற மாணவர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கிராமப்புற மாணவர்களுக்கு உதவும் சம்பார்க் பௌண்டேஷன் அமைப்பு!

படம்
வினீத் நாயர், நிறுவனர் சம்பார்க் அமைப்பு   கிராமப்புற தொடக்கப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களில் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.  கல்வியில் இந்திய அரசு கூடுதலாக கவனம் செலுத்தினாலும் கிராமப்புற மாணவர்களின் கற்றல் திறன் குறைவாகவே உள்ளது. ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 60 சதவீதம் பேருக்கு இரண்டாம் வகுப்பு பாடங்களை படிக்கத் தெரியவில்லை.  99க்கு பிறகுள்ள எண்களை சொல்லுவதில் தடுமாற்றம் உள்ளது. தொடக்க கல்வியில் வாசிப்பு, எழுத்தில் இத்தனை தடுமாற்றங்களை மாணவர்கள் கொண்டிருந்தால், அவர்கள் மேல்நிலைக்கல்வியில் எப்படி சாதிப்பார்கள்? இதில் மாணவர்களுக்குக் கற்றுத்தரும் பழமையான கற்றல்முறைகளின் பங்கும் உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் 36 சதவீதம் மாணவர்கள் தொடக்க கல்வியோடு நின்றுவிடுகிறார்கள். இதைத் தடுக்க தொழில்நுட்பத்தோடு இணைந்த ஆசிரியப்பணி ( Technology-driven pedagogy) தேவைப்படுகிறது. ஆங்கிலவழியில் மாணவர்களுக்கு கற்பித்தாலும்,கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் அம்மொழியை எப்படி பயிற்சி செய்வார்கள்? மொழிப்பாடங்களை திறம்பட கற்றுத்தரும் திறன் ஆசிரி...