இடுகைகள்

குழந்தைகள் சினிமா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தொப்பி போட்ட பூனை செய்யும் சேட்டை! - தி கேட் இன் தி ஹேட்!

படம்
தி கேட் இன் தி ஹேட் 2003 இயக்கம் போ வெல்ச் மூலக்கதை - தியோடர் சியஸ் தி கேட் இன் தி ஹேட் ஒளிப்பதிவு இம்மானுவேல் லூபெஸ்கி இசை டேவிட் நியூமன் ஆன்வில்லே என்ற ஊரில் நடைபெறும் கதை. குழந்தைகளுக்கான படம். ஜோன்ஸ் என்ற கணவர் இல்லாத பெண், ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவருக்கு ஆண், பெண் என இரு பிள்ளைகள்(கான்ராட், சாலி) இருக்கின்றனர். இதில் கான்ராட் என்ற சிறுவன் சேட்டைக்காரன். இவனைக் கட்டுப்படுத்த அவன் தாய் அரும்பாடுபடுகிறார். இவரது தாய்க்கு ஸ்கெட்ச் போட்டு தன் கடன்களை அடைத்துவிட பக்கத்துவீட்டு ஆண் நண்பர் திட்டமிடுகிறார். ஜோன்ஸ் வீட்டில் அன்று ஆபீஸ் சந்திப்பு நடத்துவதாக ஏற்பாடு. அன்று அவர்களின் வீட்டிற்கு வரும் புதிய விருந்தினர் அனைத்து விஷயங்களையும் மாற்றிவிடுகிறார். அந்த சந்திப்பு நடைபெற்றதா, கான்ட்ராக்ட் குறும்புகள் செய்யாமல் இருந்தானா?என்பதுதான் கதை.  ஆஹா படத்தில் வரும் விஷயங்கள் அனைத்தும் ஃபேன்டசி என்பதால் ஜாலியாக ரசிக்கலாம். முடிந்தளவு தமிழில் பார்த்தால் சந்தோஷமாக நிறைய காட்சிகளை ரசிக்க முடியும். பெரிய பூனை வரும் காட்சிகள் அனைத்தும் பிரமாதமாக

"குழந்தைகள் எதையும் தூக்கி எறிவதில்லை"

படம்
ஒரு படம் ஒரு ஆளுமை ! - லிஜி ‘ சூடானி ஃப்ரம் நைஜீரியா ’ வறுமையில் தடுமாறும் நைஜீரிய அகதி கால்பந்து வீரர் சாமுவேலுக்கு  கேரளாவின் மலப்புரத்தில் பிரபல கால்பந்து அணியில் விளையாட சாமுவேலுக்கு ஸ்பான்சர்ஷிப் கிடைக்கிறது . போலி பாஸ்போர்ட்டுடன் கேரளத்துக்கு வந்து தனது கால்பந்தாட்ட திறமையின் மூலம் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளையடித்து சூடானி என செல்லப்பெயரைப் பெறுகிறார் . சாமுவேல் அணியின் மேனேஜர் மஜீத் . திருமணம் செய்ய பெண் கிடைக்காமல் அலைபாய்கிறார் . தாயின் இரண்டாவது மணத்தில் கிடைக்கும் தந்தைக்கும் மஜீத்துக்கும் சுமூக சூழல் இல்லை . இச்சூழலில் எதிர்பாராத விபத்தில் சாமுவேலின் கால் உடைந்துவிடுகிறது .  சாமுவேலைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு மஜீத்தின் தலையில் விழுகிறது . மஜீத் என்ன செய்தார் ? என்பதை நகைச்சுவையான திரைக்கதையோடு மனித நேயம் மிளிர கவித்துவமாகச் சொல்கிறது இந்த மலையாளப் படம் . இயக்கம் சக்காரியா . அரவிந்த் குப்தா கான்பூர் ஐ . ஐ . டியில் பொறியியல் பட்டதாரி அரவிந்த் குப்தா , குழந்தைகளிடம் அறிவியலைக் கொண்டு செல்ல உயர்பதவிகளைத் த