இடுகைகள்

ஜோகன்னா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆண், பெண் சம்பள உரிமைக்காக குரல் கொடுத்த ஆட்சியாளர்!

படம்
மாற்றுப்பாலின சாதனையாளர்கள் ஜோகன்னா சிகுர்டர்டோடிர் ஐஸ்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர். அரசு சேவைகளில் பெரிய மாற்றத்தை இவர் உருவாக்கவில்லை. ஆனால் மாற்றுப்பாலினத்தவர் திருமணம் செய்வதற்கான சட்டத்திருத்தங்களை உருவாக்கினார்.  அதன் மூலம் தனது திருமணத்தை நடத்திக்கொண்டார். ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்வதற்கான சட்டத்தை முதன்முதலில் உருவாக்கியது இவர் தலைமையிலான அரசுதான். 1942 ஆம் ஆண்டு பிறந்த ஜோகன்னா, ஐஸ்லாந்தின் முதல் பெண் பிரதமர். மேலும் தன்னை ஓரினச்சேர்க்கையாளர் என்று சொல்லி ஆட்சி நடத்தினார். 1962-71 ஆம் ஆண்டு விமானநிறுவனத்தில் பணிப்பெண்ணாக பணிபுரிந்தார். தொழிலாளர் சங்கத்தின் தீவிரமாக இயங்கியவர் இவர். 1978 ஆம் ஆண்டு சமூக தொழிலாளர் கட்சியில் உறுப்பினரானார். 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 அன்று ஐஸ்லாந்தின் பிரதமரானார். ஐரோப்பிய யூனியனில் உறுப்பினர் என்ற உரிமையை முதலில் உறுதிப்படுத்தினார். பின்னர் 2010 ஜூலை 27 அன்று, ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்தை சட்டப்பூர்வமாக்கினார். ஐஸ்லாந்தில் 1978 முதல் 2013 ஆம் ஆண்டு வரை உறுப்பினராக இருந்த ஒரே அரசியல்வாதி இவர்தான். இவரைக்