இடுகைகள்

ஸிஸோபெரெனியா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாரனாய்ட்டும், ஸிஸோபெரெனியாவும் ஒரே குறைபாடா?

படம்
  ஆளுமை பிறழ்வு குறைபாட்டில் பாரனாய்ட் மற்றும் ஸிஸோய்ட் மற்றும் ஸிஸோடைபல் ஆகிய இரண்டுக்கும் சில ஒத்த அறிகுறிக்ள் உண்டு. அதாவது, நிகழ்காலம் மெல்ல மறந்துவிடும். புதிய பாத்திரங்கள், உலகத்தை உருவாக்கியபடி வாழ்வார்கள்.    ஸிஸோய்ட் குறைபாடு உள்ளவர்களுக்கு சமூக உறவுகள் குறைவாகவே இருக்கும். இவர்கள் தங்களது உணர்ச்சிகளையும் குறைவாகவே வெளிப்படுத்துவார்கள். தங்களுக்கே இப்படியென்றால் பிறரைப் பற்றி நீங்களே கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள். கவலையே பட மாட்டார்கள்.  ஸிஸோடைபல் குறைபாடு உள்ளவர்களுக்கு, நெருங்கிய உறவுகளைக் கையாள்வது கடினமாக இருக்கும். இவர்களை எதிர்கொண்டு புரிந்துகொள்வது நெருங்கிப் பழகுபவர்களுக்கு சவால். அப்படியெனில் புதிதான ஆட்களுக்கு எப்படி இருக்கும்?பீதியூட்டும் குணம் கொண்ட மனிதர்களாக தெரிவார்கள் என்று அர்த்தம்.  ஆளுமை பிறழ்வு விவகாரத்தில் ஒருவருக்குள் பல்வேறு மனிதர்கள் எந்த வித ஒற்றுமையும் இல்லாமல் இருப்பது சாத்தியம். மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸார்டர் என  இதைக் கூறலாம். மனம் குறிப்பிட்ட வாழ்க்கை சம்பவத்தில் காயமுற்று அதிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கும்போது உயிரை, உடலைக் காக்கும் நோக்கத்த

மனநல குறைபாடு கொண்ட அண்ணனைப் பழிவாங்கும் சுயநலமான தம்பி - கோப்ரா - அஜய் ஜானமுத்து

படம்
  கோப்ரா இயக்குநர் அஜய் ஞானமுத்து இசை ஏ ஆர் ஆர் ஸிஸோபெரெனியா குறைபாடு கொண்ட அண்ணனுக்கும், சுயநலமான தம்பிக்கும் நடக்கும் பழிக்குப்பழி சம்பவங்கள்தான். கதை.  மதியழகன், அனாதை ஆசிரம குழந்தைகளுக்கு உதவும் கணித ஆசிரியர். கணிதத்தில் சற்று மேம்பட்ட மனிதர். அதில் கற்ற கோட்பாடுகளை வைத்தே தன்னையும், ஆசிரம குழந்தைகளையும் காப்பாற்ற கொலைத்தொழில் செய்கிறார். இதற்கு நெல்லையப்பர் என்ற பத்திரிகையாளர் உதவி செய்கிறார். இந்த நிலையில் மதி செய்யும் கொலைச்செயல்கள் பற்றி தகவல்கள் மெல்ல இன்டர்போலுக்கு கசிகின்றன. எப்படி என அறியும்போதுதான் அதிர்ச்சி உருவாகிறது. மதியைப் போன்ற தோற்றத்தில் உள்ள இன்னொருவன்தான் தகவல்களை பிறருக்கு கொடுக்கிறான். ஏன் அப்படி செய்கிறான் என்பது ஃபிளாஷ்பேக்கிற்கான முன்னோட்டம்.  விக்ரமை விடுங்கள். அவர் சிறப்பாக நடிப்பார் என அனைவருக்குமே தெரியும். இதிலும் அப்படியேதான். அதைத்தவிர மற்றவர்களைப் பார்ப்போம். படத்தில் மதி, கதிர் என இரு பாத்திரங்களிலும் நடித்துள்ள சிறுவன் சிறப்பாக நடித்திருக்கிறான். அடுத்து, கல்லூரி பருவத்திலுள்ள மதி, கதிர் நடிகர் கூட நல்ல பங்களிப்புதான்.  ஆனால் படத்தில் ஆர்வம் தரும்

பிளவுபட்ட மனதில் தோன்றும் கற்பனைகள்- ஸிசோபெரெனியா குறைபாடு

படம்
ஸிசோபெரெனியா ஸிசோபெரெனியா பாதிப்பு உலகிலுள்ள 1.1 சதவீத வயது வந்தோருக்கு இருக்கிறது. இந்த வார்த்தை கிரேக்கத்திலிருந்து வந்தது. இதற்கு பொருள், பிளவுபட்ட மனம். நேரடியாக பொருள் கொள்ளாதீர்கள். இக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர் கற்பனையில் பார்க்கும் விஷயங்களை நிஜம் என்று நம்புவார். அது சமூகத்திலிருந்து அவரது இருப்பை தூரமாக்கும். போதைப்பொருட்கள், மதுபான பழக்கம் கொண்டவர்களுக்கு நாளடைவில் இப்பிரச்னை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.. மரபணு ரீதியாக, தாயின் கருவறையில் இருக்கும்போது ஏற்படும் அசாதாரண மாற்றங்கள், சூழல் காரணங்கள் ஆகியவற்றை இக்குறைபாடு ஏற்படுவதற்கான காரணமாக சொல்லுகிறார்கள். மூளையிலுள்ள நியூரான்களில் அபரிமிதமாக சுரக்கும் டோபமைன், செரடோனின் ஆகியவற்றின் பாதிப்பினாலும் இக்குறைபாடு தீவிரமடைகிறது. குடும்பம் சார்ந்த பிரச்னைகளால் ஸிசோபெரெனியா ஏற்படுவதாக இருபதாம் நூற்றாண்டில் தொடக்கத்தில் கூறிவந்தனர். ஆனால் அதற்கு உறுதியான அறிவியல் ஆதாரங்கள் இல்லை. இக்குறைபாட்டிற்கு மருந்துகள் கிடையாது. கட்டுப்படுத்த முடியும். அதனோடு வாழப்பழகிக்கொள்வது சிறப்பு.   நேர்மறை எதிர்மறை அறிகுறிகளைப் பார்ப்போம்