பிளவுபட்ட மனதில் தோன்றும் கற்பனைகள்- ஸிசோபெரெனியா குறைபாடு


Cards, Different Personalities, Split Personality

ஸிசோபெரெனியா

ஸிசோபெரெனியா பாதிப்பு உலகிலுள்ள 1.1 சதவீத வயது வந்தோருக்கு இருக்கிறது. இந்த வார்த்தை கிரேக்கத்திலிருந்து வந்தது. இதற்கு பொருள், பிளவுபட்ட மனம். நேரடியாக பொருள் கொள்ளாதீர்கள்.

இக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர் கற்பனையில் பார்க்கும் விஷயங்களை நிஜம் என்று நம்புவார். அது சமூகத்திலிருந்து அவரது இருப்பை தூரமாக்கும். போதைப்பொருட்கள், மதுபான பழக்கம் கொண்டவர்களுக்கு நாளடைவில் இப்பிரச்னை ஏற்படும் வாய்ப்பு உள்ளது..

மரபணு ரீதியாக, தாயின் கருவறையில் இருக்கும்போது ஏற்படும் அசாதாரண மாற்றங்கள், சூழல் காரணங்கள் ஆகியவற்றை இக்குறைபாடு ஏற்படுவதற்கான காரணமாக சொல்லுகிறார்கள்.

மூளையிலுள்ள நியூரான்களில் அபரிமிதமாக சுரக்கும் டோபமைன், செரடோனின் ஆகியவற்றின் பாதிப்பினாலும் இக்குறைபாடு தீவிரமடைகிறது. குடும்பம் சார்ந்த பிரச்னைகளால் ஸிசோபெரெனியா ஏற்படுவதாக இருபதாம் நூற்றாண்டில் தொடக்கத்தில் கூறிவந்தனர். ஆனால் அதற்கு உறுதியான அறிவியல் ஆதாரங்கள் இல்லை.

இக்குறைபாட்டிற்கு மருந்துகள் கிடையாது. கட்டுப்படுத்த முடியும். அதனோடு வாழப்பழகிக்கொள்வது சிறப்பு.

 

நேர்மறை எதிர்மறை அறிகுறிகளைப் பார்ப்போம்.

தெரிந்தவர்களில் குரலில், அல்லது தெரியாத குரல்களாக காதில் கேட்கும்.

ரோஸ் கலரில் எருமை நிற்பது போல கண்களில் காட்சி தென்படும். பெரும்பாலானோர்க்கு வன்முறை காட்சிகள் தெரியும். இவை கற்பனைக் காட்சிகள்.

 

உடலில் எறும்புகள் ஊர்ந்து செல்வது போன்ற உணர்வுகள் உண்டாகும்.

உணவுப்பொருட்களிலிருந்து வரும் சுவைகளை, மணங்களை வேறுபடுத்தி அறியமுடியாது.

ஒரு மனிதர் தன்னை புகழ்பெற்றவராக நினைத்துக்கொள்வார். யாரோ தன்னை பின்தொடர்பாக, சதிவலைகளை பின்னுவதாக நினைத்துக்கொள்வது.

தன்னை யாரோ கட்டுப்படுத்துவதாக நினைத்துக்கொள்வது.

எதிர்மறை

தீவிரமான நிலையில் கீழ்க்கண்ட அறிகுறிகளை வெளிப்படுத்துவார்கள்.

இவர்களோடு தகவல்தொடர் கொள்வது கடினம். கண்களைப் பார்த்து பேச மாட்டார்கள். உடலுக்கு பேசுவதற்குமான தொடர்பு விடுபட்டுவிடும்.

உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது குறைவாக இருக்கும். காஞ்சனா படத்தைப் பார்க்கும்போதும், கிரி படம் பார்க்கும்போதும் ஒரே மாதிரியான உணர்ச்சிகளை வெளிப்படுத்துவார். மகிழ்ச்சியை முகத்தில் தேட வேண்டியிருக்கும்.

தூக்க நேரம் மாறும். அதிகநேரம் படுக்கையில் தூங்குவார்கள். நீண்டநேரமாக ஒரே நிலையில் அமர்ந்து இருப்பார்கள்.

நாகலட்சுமி சண்முகத்தின் மொழிபெயர்ப்பை படித்தாலும் அவரது ஆளுமை வகுப்பில் பங்கேற்றாலும் கூட இவருக்கு வாழ்க்கையில் நம்பிக்கையே வராது. தினசரி நடவடிக்கைகளும் படுமோசமாக இருக்கும்.

தான் பேசும் விஷயங்கள், அதையொட்டி செய்யும் செயல்பாடுகள் எதனையும் நினைவில் வைத்திருக்க மாட்டார்.

பொங்கலுக்கு வடகறியை வைத்து பார்சல் கட்டுவது போல செயல்பாடுகளுக்கு பொருத்தமே இருக்காது. ஆனால் அப்படித்தான் நடந்துகொள்வார்கள்.

 

சமூகம் சார்ந்த தனது நண்பர்கள் சார்ந்த விழாக்களில் பெரும்பாலும் பங்கேற்பதைத் தவிர்ப்பார்கள்.

சமூக தன்னார்வலர்கள், மருத்துவர்கள், மருந்தகங்கள் என அனைவரும் ஒன்றாகச்சேர்ந்து செயல்பட்டால் மட்டுமே இவர்களின் பாதிப்புகளை எதிர்மறையாக செல்ல முடியாதபடி தடுக்க முடியும்.

இவர்களுக்கான மனநிலையை சமப்படுத்தும் மருந்துகள் உண்டு. நோயைத் தீர்க்க முடியாது. கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளலாம்.

 

 

கருத்துகள்