ஆளுமைக் குறைபாடுகளை போக்கும் மனநல தெரபி முறைகள்!


Medicines, Disease, Doctor, Woman, Slim, Heal
pixabay



மையப்படுத்திய தெரபி

இதில் உளவியலாளர் நோயாளியை சுதந்திரமாக பேச வைக்கிறார். இதன் காரணமாக அவர் தனது மனதிலுள்ள அனைத்து விஷயங்களையும் வெளிப்படுத்துகிறார். இவற்றில் உளவியலாளர் பங்கு நோயாளி சொல்வதை முழுமையாக கவனித்து உள்வாங்குவது மட்டுமே. இதனால் தான் செய்தது சரி, தவறு என வாதிடுவதை மெல்ல நோயாளி கைவிடும் வாய்ப்பு ஏற்படுகிறது. தன் செயல்சார்ந்து வளர்ச்சி, மேம்பாடு ஆகியவற்றை இந்த தெரபி ஒருவருக்கு வழங்குகிறது.

தெரபி அளிப்பவர் நோயாளி மீதான கரிசனம், நேர்மறையான எண்ணதுடன் அவரை அணுகுகிறார். அவரின் கண்களின் வழியாக உலகைப் பார்ப்பதால் உளவியலாளருக்கும், நோயாளிக்கும் நம்பிக்கையான உறவு ஏற்படுகிறது. இதனால் சிகிச்சை சிறப்பாக பயனளிக்கும்  வாய்ப்பு பெருகிறது.

ரியாலிட்டி தெரபி

நோயாளிக்கு உறவுகளை பராமரிக்க பாதுகாக்க வளர்க்க தெரியாத சிக்கல் இருக்கும். இதனால் குறை, புகார், வசை பாடாமல் எப்படி உறவை வளர்ப்பது என இந்த தெரபி வழியாக உளவியலாளர் கற்றுத் தருகிறார். தன் வாழ்க்கையை நடத்துவதற்கான சுதந்திரம், பணி சார்ந்த அங்கீகாரம், குடும்பம், உறவுகள், நட்பு, உணவு உடை பாதுகாப்பு ஆகியவற்றை இந்த தெரபி உறுதி செய்கிறது.

எக்ஸிஸ்டென்ஷியல் தெரபி

நாம் உலகிற்கு தனியாக வருகிறோம். தனியாகவே செல்வோம். இடையில் மனித உறவுகளை ஏற்படுத்திக்கொள்கிறோம் என்பது போன்ற தத்துவ சாரத்தை இந்த தெரபி வழங்குகிறது. வாழ்க்கை, அதன் மதிப்பு, துன்பம் ஏற்படுவது ஏன்? உலகில் தனிமையாக இருப்பது நீங்கள் ஒருவர் மட்டுமா? என்பது போன்ற கேள்விகளுக்கு எக்ஸிஸ்டென்ஷியல் தெரபி பதில் அளிக்கிறது.

ஜெஸ்டால்ட் தெரபி

மது, போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள், பதற்றம், மன அழுத்தம் ஆகிய பிரச்னைகளை உள்ளவர்களுக்கு இம்முறையில் சிகிச்சை வழங்கப்படுகிறது. இதில் நோயாளி காலியாக உள்ள நாற்காலியில் தன் வாழ்க்கையில் முக்கியமான நபரை நிறுத்தி பேசுவது முக்கியமான பயிற்சி. சில அனுபவங்களை சொல்லி பிறகு எதிரே உட்கார்ந்திருப்பவரின் பார்வையில் வாழ்க்கையை பார்த்து பேச வேண்டும். இதன்மூலம் ஒருவரின் பார்வை விரிவடைகிறது. அவரின் வாழ்க்கை சுய விழிப்புணர்வு கொண்டதாக மாறுகிறது.

உணர்ச்சிகளை மையப்படுத்திய தெரபி

சிறுவயதில் உங்களை பாதித்த உணர்ச்சிகரமான சம்பவத்தை இன்றும் உங்களால் நினைவுகூர முடியும். அந்த சம்பவத்தின்போது நீங்கள் எந்த உணர்வுநிலையில் இருந்தீர்களோ அதே உணர்வுநிலை மீண்டும் உருவாகிறது. இது மூளையில் அற்புதமான வரமும் சாபமும் கூட. இந்த சம்பவங்கள் நேர்மறையாக அல்லது எதிர்மறையாக இருக்கலாம். ஆனால் இவை நிகழ்கால வாழ்க்கையை பாதிக்கும் வலிமை கொண்டவை. எனவே இவற்றை கட்டுப்படுத்துவது முக்கியம். இந்த தெரபி செய்வது இதனைக் கட்டுப்படுத்துவதைத்தான். நேர்மறையான எண்ணங்கள் மூலம் மகிழ்ச்சிகரமான அழுத்தமில்லாத தன்மையை மனத்தில் ஏற்படுத்த முயல்கிறார்கள்.

சோமாட்டிக் தெரபி

உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் தீர்க்க முடியாத குறைபாடுகளை குணமாக்க இந்த வகையான தெரபி பயன்படுகிறது. ஒருவரின் மனதிலுள்ள மன அழுத்தம், பதற்றம் ஒருவரின் உடல்ரீதியான நோய்களுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. பல்வேறு நோய்களை ஊக்குவிக்கிறது. இதனை சரிசெய்ய உடல் மசாஜ், யோகா, டாய் சி ஆகியவற்றை நோயாளிகள் கற்க உளவியலாளர்கள் ஊக்குவிக்கின்றனர்.

உணர்வு சுதந்திர நுட்பம்

உடலில் ஆற்றல் புள்ளிகள் இருப்பதை அறிவீர்கள். முறையான அக்குபஞ்சர் மருத்துவரிடம் சென்று இத்தெரபியை செய்துகொள்ளலாம். குறிப்பிட்ட ஆற்றல் புள்ளிகளை தொடும்போது எதிர்மறையான விஷயங்களை நினைத்தால் அவை மெல்ல குறையத்தொடங்கும். உடலுக்கும் மூளைக்கும் தொடர்பு இருப்பதால் இச்செயல்பாடு உடலையும் மனதையும் நெகிழ்த்தி ஓய்வுகொள்ளச் செய்கிறது.

தீர்வு தரும் தெரபி

தொழில்துறையில் சாதிக்க நினைக்கும் பலரும் நிறைய கனவுகள், லட்சியங்களை வைத்திருப்பார்கள். ஆனால் அதனை நடைமுறைப்படுத்தும்போது வரும் சிறிய சிக்கல்கள், தடைகளால் மனம் சோர்ந்து விடுவார்கள். அவர்களை தேற்றி அவர்களின் லட்சியத்தை அடைய வைக்க இந்த தெரபி உதவுகிறது. இதில் சாத்தியமான கனவுகள், திட்டத்தை அடைவதற்கான திட்டம்., செயல்பாடு, உழைப்பு ஆகியவற்றை உளவியல் வல்லுநர்கள் உருவாக்குகின்றனர். இவற்றை சரிசெய்து கேள்விகளுக்கு பதில் சொல்லுவது நோயாளியைப் பொறுத்தது.

கருத்துகள்