பேசுவதிலும் கேட்பதில் ஏற்படும் பாதிப்புகள் ஒருவருக்கு ஏற்படுத்தும் சிக்கல்கள் இவைதான்!


Dispute, Man, Woman, Child, Silhouettes, Education
pixabay



தகவல்தொடர்பு குறைபாடுகள்

குழந்தைகள் பேசுவதற்கான முயற்சி அதன் சிறுவயதிலிருந்தே தொடங்குகிறது. அப்போது அவர்கள் பேச முடியாவிட்டாலும் தாயின் குரல், அவளின் உடல் வெப்பம் ஆகியவற்றை உணர்ந்துகொள்கிறார்கள். பின்னாளில் பேசுவதற்கு அடிப்படையான விஷயங்களை காதில் கேட்டுக்கொள்கிறார்கள். இச்சமயத்தில் அவர்களுக்கு காது கேளாமை, மூளை வளர்ச்சியில் ஏதேனும் பிரச்னை – டவுன் சிண்ட்ரோம், செரிப்ரல் பால்சி போன்ற குறைபாடுகள் இருந்தால் வளர்ந்தபிறகும் இவர்களால் பேச முடியாது. எதிரே இருப்பவர் வெளிப்படுத்தும் உடல்மொழி, வார்த்தைகளை புரிந்துகொள்ள மாட்டார்கள்.

இதற்கு மரபணு ரீதியான காரணங்களும் இருக்கின்றன. இக்குழந்தைகளின் நடவடிக்கை பேசும் சொற்கள் ஆகியவற்றை பெற்றோரும், உளவியல் வல்லுநர்களும் கவனித்து வரவேண்டும். இதில் மாற்றங்களை செய்து அவர்களின் மொழித்திறனை வளர்க்க முடியும். கூடவே பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கான தெரபி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.

மொழிக்குறைபாடு உள்ள குழந்தைகள் பெற்றோரை அடையாளம் கண்டாலும் புன்னகைக்க மாட்டார்கள். பெரும்பாலும் தனியாகவே விளையாடுவார்கள். இவர்களுக்கு பேசுவதில் தடுமாற்றம் இருக்கும். குழந்தை பிறந்த பதினெட்டு மாதங்களில் சில வார்த்தைகளை பேசுவது அவசியம்.

பேச்சு மற்றும கேட்டல் குறைபாடு கொண்டு குழந்தைகளுக்கு எட்டு வயது வரையிலும் பேசுவது, புரிந்துகொள்வது என அனைத்தும் சிரமமாக இருக்கும். இவர்கள் பேசுவது பெற்றோருக்கும் புரியாது. பெற்றோர் அல்லது பிறர் பேசினாலும் சில ஒலிக்குறிப்புகளுக்கு மட்டும் எதிர்வினை செய்வார்கள். பிற ஒலிக்குறிப்புகளை சரியாக புரிந்துகொள்ள இயலாமைதான் இதற்கு காரணம்.

சிறுவர்களாக இருக்கும்போது ஏற்படும் மொழிப்பிரச்னை உண்டு. இதில் மூச்சு விடுவதே சிரமம் எனும்படிதான் பேசுவார்கள். பேசுவது சிரமம் என தெரிந்தபிறகு அதனை மறைக்க தொடங்குவார்கள். பிறரிடமே பேச தடுமாறுபவர்கள், பொது இடத்தில் அனைவருக்கும் முன்னால் எங்கே பேசுவது? பேச சொன்னால் ஓடி மறைவார்கள்.

எஸ்சிடி என்ற பிரச்னை ஏற்பட்டால் ஒருவர் பேசினால் அதனை புரிந்துகொள்ளும் தன்மை குறைவாக இருக்கும். சைகை செய்தாலும் இவர்களுக்குப் புரியாது. வீட்டுக்கு யார் வந்தாலும் வாங்க என்று கூட சொல்ல மாட்டார்கள். அல்லது அப்படி வரவேற்கும் உணர்வே இல்லாமல் இருப்பார்கள். இக்குறைபாடு ஆட்டிசத்தோடு இணைத்து பார்க்கப்படுகிறது. ஆனால் ஆட்டிசத்தில் ஒரு செயலை திரும்ப திரும்ப செய்வார்கள்., ஆனால் எஸ்சிடி குறைபாடு கேட்பது, பேசுவது சார்ந்து ஏற்படுகிறது. குறிப்பிட்ட உறுப்புகள் செயல்படாதபோது, அதில் குறைபாடு ஏற்பட்டால் என்பதை புரிந்துகொண்டால் குழப்பம் இருக்காது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கருத்துகள்