ஓராண்டுக்குள் தடுப்பூசியைக் கண்டுபிடித்தால் அது சாதனைதான்! சௌமியா சுவாமிநாதன், WHO
TIE |
மொழிபெயர்ப்பு நேர்காணல்
சௌம்யா சுவாமிநாதன், உலக சுகாதார நிறுவனத்தின் மூத்த அறிவியலாளர்
அமெரிக்கா உலக சுகாதார அமைப்பிற்கான நிதியை தடை செய்திருக்கிறதே?
அமெரிக்கா உல்க சுகாதார நிறுவனத்திற்கு நிதி மட்டுமன்றி பல்வேறு தொழில்நுட்ப உதவிகளையும் முன்னர் அளித்து வந்த நாடு. எதிர்காலத்தில் அமெரிக்கா, உலக சுகாதார நிறுவனத்தோடு இணைந்து செயல்படும் என நம்புகிறோம்.
கோவிட் -19 நோய்த்தொற்று ஏற்கெனவே இங்கு உள்ளது. புதிதாக நோய்த்தொற்று பரவல் அதிகரிக்கவில்லை என்கிறார்கள். இது அறிவியல்ரீதியான கருத்துதானா?
இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் நோய்த்தொற்று பரவல் எப்படி குறைவாக இருக்கிறது என பல்வேறு அறிவியலுக்கு மிஞ்சிய கருத்துகள் உலவி வருகின்றன. இவற்றுக்கு சரியான பதில்கள் கிடையாது என்பதே உண்மை. மேற்சொன்ன நாடுகளில் ஊரடங்கு உத்தரவும், சமூக தனிமைப்படுத்தலும் அமலில் இருக்கலாம். இதன் காரணமாக வைரஸ் தொற்று பரவாமல் இருக்கவும் வாய்ப்புள்ளது. அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இதை ஏன் இப்படி கூறுகிறேன் என்றால் இந்த வைரஸ் தொற்றை இயல்பை நம்மால் முழுமையாக கணிக்க முடியவில்லை என்பதால்தான். ஊரடங்கு காலம் தளர்த்தப்பட்டவுடன் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். அல்லது குறையலாம் இரண்டுக்குமே வாய்ப்புள்ளது. அடுத்து வரும் பனிக்காலத்தில் கூட இந்த வைரஸ் மீண்டும் பரவலாகி மக்களைத் தாக்கலாம்.
கோவிட் -19க்கும் விரைவிலேயே நம்மால் தடுப்பூசி அல்லது மருந்துகள் கண்டுபிடித்துவிட முடியுமா?
பொதுவாக ஒரு தடுப்பூசியை கண்டுபிடிப்பது என்பது சாதாரணமல்ல. அதற்கு பத்து ஆண்டுகள் தேவை. எபோலா வைரஸிற்கான தடுப்பூசி கண்டறிய ஐந்து ஆண்டுகளாயின. ஜிகா வைரஸிற்கான தடுப்பூசி கண்டறிய இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டன. இப்போது நாம் கோவிட் -19க்கு ஓராண்டில் தடுப்பூசி கண்டுபிடித்தால் அது வரலாற்றுச் சாதனையாகவே மாறும். மருந்து நிறுவனங்களின் போட்டியின்றி அனைத்து நாடுகளும் இதில் ஈடுபடும்போத இப்பணி வேகமாக நடைபெறும். இப்பணிகள் சரியான பாதையில் நடந்தால் மனிதர்களுக்கு கொடுத்து சோதித்து 2021ஆம் ஆண்டு சந்தைக்கு கொண்டு வந்துவிட முடியும்.
இந்த கோவிட் -19 பரவல் எங்கிருந்து தொடங்கியிருக்க முடியும்?
எங்களுக்கு கிடைத்துள்ள ஆதாரங்கள் படி இந்த வைரஸ், விலங்குகளிடமிருந்துதான் பரவியிருக்கிறது. வைரஸின் மரபணுக்களை ஆராய்ந்து பார்த்து இதனை கண்டுபிடித்திருக்கின்றனர். வௌவால்களிடமிருந்து பரவியிருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. இதுதொடர்பாக சீன வல்லுநர்களிடம் இருந்த பல்வேறு உதவிகளைக் கோரி ஆய்வுகளை செய்து வருகிறோம். இவற்றின் மூலம் நாங்கள் கோவிட் -19 தொற்றைத் தடுத்து அதன் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று கருதுகிறோம்.
நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஏப்ரல் 29, 2020
ஆங்கிலத்தில்: ஷிமோனா கன்வார்
தமிழில்: அன்பரசு சண்முகம்
கருத்துகள்
கருத்துரையிடுக