விவசாயிகளை பணியாற்ற அனுமதித்த முதல் இந்திய மாநிலம் எங்களுடையது! - ஜெய்ராம் தாக்கூர்


LIVE Jairam Thakur sworn in as Himachal CM; PM Modi Amit Shah ...



மொழிபெயர்ப்பு நேர்காணல்


ஜெய்ராம் தாக்கூர், இமாச்சலப்பிரதேச முதல்வர்.


உங்கள் மாநிலத்தில் கொரோனா பாதிப்பைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?


ஏப்ரல் 19 அன்று 39 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் பத்தொன்பது பேருக்கு முழுக்க சிகிச்சை அளித்து சரிசெய்யப்பட்டிருக்கின்றனர். நான்கு பேர் வேறு மாநிலங்களுக்கு சிகிச்சைக்காக சென்றிருக்கின்றனர். ஒருவர் இந்நோய்க்கு பலியாகியுள்ளார்.


மாநிலத்திலுள்ள மூன்று மையங்கள் மூலம் தினசரி 250 டெஸ்ட்டுகளை எடுத்து வருகிறோம். எங்களுடைய நோய் பாதிப்பு அளவு, தேசிய அளவை விட குறைவாகவே உள்ளது. இந்திய அரசிடம் நாங்கள் எங்களின் மாநிலத்தேவைக்காக 4, 800 பரிசோதனைக் கருவிகளைக் கேட்டுள்ளோம். இதற்கு முக்கியக் காரணம், நாங்கள் மார்ச் 24 அன்று மாநிலம் முழுவதும் ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்தி அனைத்து போக்குவரத்துகளையும் தடை செய்ததுதான். இதனால்தான் நோய்பரவல் சதவீதம் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.


மாநிலத்தில் முக்கியமான இடங்களைத் தவிர்த்து பிற இடங்களில் கட்டுப்பாட்டுகளை தளர்த்த நினைத்துள்ளீர்களா?


நோய்த்தொற்றுள்ள இடங்களான கன்க்ரா, சம்பா, சிர்மாவூர், சோலன், உனா ஆகிய இடங்களிலிருந்து பிற இடங்களிலிருந்து பரவுவதை தடுக்கத்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். அறுவடைக்காலம் என்பதால் விவசாயிகளுக்கு வெளியில் செல்வதற்கான பாஸ்களை வழங்கியுள்ளோம். உரங்களை அவர்களுக்கு கொடுப்பதற்கான செயல்பாடுகளையும் செய்துள்ளோம்.


சுற்றுலா, உங்கள் மாநிலத்திற்கான முக்கியமான வருமான ஆதாரம். இத்துறையை மீட்டு எடுப்பதற்கான முயற்சிகளை செய்து வருகிறீர்களா?


நீங்கள் கூறுவது உண்மைதான். மாநிலத்தின் முக்கியமான வருவாய் காலம் முழுக்க தொற்றுநோயை விரட்டுவதிலேயே போய்விட்டது. இதனால் மத்திய அரசிடம், சுற்றுலாத்துறைக்கு வரி விடுமுறை அளிக்க கேட்டுள்ளோம். இத்துறையை மீட்டெடுப்பதற்கான திட்டங்களை தீட்டியுள்ளோம்.


இதேகாலத்தில்தான் உங்கள் மாநிலத்திலிருந்து பூக்கள், பழங்களை வெளியே விற்பனை செய்வதும் நடைபெறும். இப்போது அதற்கு என்ன நடவடிக்கைகளை எடுத்திருக்கிறீர்கள்?


விவசாயிகளுக்கு முறையான பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்து, அவர்களின் வணிகத்தை முறைப்படுத்திய முதல் இந்திய மாநிலம் இமாச்சலப் பிரதேசம்தான். நாங்கள் சமூக விலகலைக் கவனமாக கடைபிடித்து இதனை சாதித்திருக்கிறோம். விவசாயிகளுக்கு சரியான விலையை வழங்க ஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம்.

மத்திய அரசிடம் உங்கள் எதிர்பார்ப்புகள் என்னென்ன? ஏதாவது துறை சார்ந்த உதவிகளைக் கேட்டிருக்கிறீர்களா?


மத்திய அரசு, ஏழைகளுக்காக 1.7 லட்சம் கோடி ரூபாயை அறிவித்திருக்கிறது. அனைத்து மாநிலங்களிலுள்ள தொழில்துறைகளும் சரிவைச் சந்தித்துள்ளன. எங்கள் மாநிலத்திற்கு உதவி கோரியுள்ள துறை சுற்றுலாத்துறை. மேலும் மாநிலத்திலுள்ள பல்வேறு சாலைத்திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பிரதமர் மோடி தலைமையில் இந்த பெருந்தொற்று பிர்ச்னையிலிருந்து நாடு மீண்டெழும் என்று நம்புகிறேன்.


பீகார், நேபாளத்திலிருந்து வந்து பணியாற்றிய தொழிலாளர்கள் இன்று இல்லை. இந்நிலையில் பணிகளை எப்படி தொடர்வீர்கள்?


தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், வெளிமாநில ஆட்களை உள்ளே அனுமதிக்க முடியாது. எங்கள் மாநிலத்திலேயே தினக்கூலி தொழிலாளர்கள் இயல்பு வாழ்க்கையைத் தொடங்க முடியாமல் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.


நன்றி: எகனாமிக் டைம்ஸ், ஸ்மிருதி காக் ராமச்சந்திரன்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்