இடுகைகள்

உலகம்- ஐரோப்பா சூழல் பாதுகாப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிளாஸ்டிக் ரூல்ஸ்!

படம்
பிளாஸ்டிக் ரூல்ஸ் ! ஐரோப்பிய நாடுகளில் ஆண்டுதோறும் 25 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன . இதில் மறுசுழற்சிக்கு செல்பவை 30% தான் . " நிலம் , நீர் , காற்று , கடல் , உணவு என அனைத்தையும் மாசுபடுத்தும் பிளாஸ்டிக் ஐரோப்பாவுக்கு மிகப்பெரும் பிரச்னை " என்கிறார் ஐரோப்பிய யூனியனின் துணைத்தலைவர் ஃபிரான்ஸ் டிம்மர்மன்ஸ் . ஸ்ட்ரா , பிளாஸ்டிக் கரண்டிகள் , பலூன்கள் , டெட்ராபேக் உள்ளிட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளுக்கு தடைவிதிக்க ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது . 2025 க்குள் 90 சதவிகித பிளாஸ்டிக் பொருட்களை சேகரிப்பது இதில் அடக்கம் . கடற்கரைகளில் சேகரிக்கப்படும் 27 சதவிகித பிளாஸ்டிக் கழிவுகளில் 1.5% மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது . கார்பன் வெளியீட்டால் ஏற்படும் 25 பில்லியன் டாலர்கள் நஷ்டத்தை குறைத்து 7.5 பில்லியன் டாலர்களை மக்களுக்கு சேமித்து தரவும் ஐரோப்பிய யூனியன் திட்டமிட்டுள்ளது . இதற்கான மசோதா விரைவில் ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது .