பிளாஸ்டிக் ரூல்ஸ்!



Image result for europe plastic ban



பிளாஸ்டிக் ரூல்ஸ்!


Image result for europe plastic ban


ஐரோப்பிய நாடுகளில் ஆண்டுதோறும் 25 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன. இதில் மறுசுழற்சிக்கு செல்பவை 30% தான். "நிலம், நீர், காற்று, கடல், உணவு என அனைத்தையும் மாசுபடுத்தும் பிளாஸ்டிக் ஐரோப்பாவுக்கு மிகப்பெரும் பிரச்னை" என்கிறார் ஐரோப்பிய யூனியனின் துணைத்தலைவர் ஃபிரான்ஸ் டிம்மர்மன்ஸ்.

ஸ்ட்ரா, பிளாஸ்டிக் கரண்டிகள், பலூன்கள், டெட்ராபேக் உள்ளிட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளுக்கு தடைவிதிக்க ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது. 2025 க்குள் 90 சதவிகித பிளாஸ்டிக் பொருட்களை சேகரிப்பது இதில் அடக்கம். கடற்கரைகளில் சேகரிக்கப்படும் 27 சதவிகித பிளாஸ்டிக் கழிவுகளில் 1.5% மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. கார்பன் வெளியீட்டால் ஏற்படும் 25 பில்லியன் டாலர்கள் நஷ்டத்தை குறைத்து 7.5 பில்லியன் டாலர்களை மக்களுக்கு சேமித்து தரவும் ஐரோப்பிய யூனியன் திட்டமிட்டுள்ளது. இதற்கான மசோதா விரைவில் ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.