இடுகைகள்

பெண்கல்வி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கல்வியால் பெண்களை முன்னேற்றுவதே லட்சியம் - சுதா வர்க்கீஸ்

படம்
  தீண்டப்படாத சாதி பெண்களை முன்னேற்றும் கல்வி! கேரளத்தில்  வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் சுதா. பள்ளிமாணவியாக இருந்த போது சுதா,  நாளிதழ் ஒன்றில் வெளியான புகைப்படத்தைப் பார்த்தார்.  பீகாரின் சாலையோரத்தில் உள்ள குடிசையின் புகைப்படம் அது.  ஏழை மக்களின் குடியிருப்பு என பார்க்கும் யாரும் புரிந்துகொள்ளலாம். அந்த நொடியில் பள்ளி மாணவியான சுதா தீர்மானித்தார். நான் ஏழை மக்களின் நிலையை மாற்றுவேன் என உறுதியெடுத்துக்கொண்டார். பெற்றோர் ஏற்காதபோதும், சமூகசேவையைச் செய்ய கன்னியாஸ்த்ரீ வாழ்க்கையை ஏற்றார். பிறகு, இப்பணியில் திருப்தி இல்லாமல், தனது பணியை விட்டுவிலகினார். நேராக பீகாருக்குச் சென்றார்.  சிறுவயதில், அவர் புகைப்படத்தில் பார்த்த குடிசை, முசாகர் (Musahar)எனும் மக்களுக்குச் சொந்தமானது.  தீண்டத்தகாதவர்களாக நடத்தப்பட்ட, முசாகர் மக்களின் குழந்தைகளுக்கு கல்வியறிவும் கிடைக்கவில்லை. இச்சமுதாய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காகவே, 2005ஆம் ஆண்டு ‘பிரேர்னா ’(Prerna)என்ற பெயரில் தானே பள்ளியைத் தொடங்கினார்.   சுதாவின் கல்வி உதவிகளால், 5 ஆயிரம் பெண் குழந்தைகள் படித்து பட்டம் பெற்றுள்ளனர். பீகாரில் முசாகர் இனப

உயர்கல்வியில் ஆர்வம் காட்டும் இந்தியப் பெண்கள்!

படம்
giphy.com உயர்கல்வியில் ஆர்வம் காட்டும் பெண்கள்!   இந்தியாவில் உயர்கல்வி கற்கும் பெண்களின் சதவீதம் அதிகரித்து வருவதாக இந்திய அரசின் AISHE ( All India Survey on Higher Education (AISHE)) ஆய்வுகள் கூறுகின்றன. இந்திய அரசு 2012 ஆம் ஆண்டு முதலாக உயர்கல்வித்துறையில் இணையும் மாணவர்களின் சேர்க்கை பற்றிய அறிக்கையை வெளியிட்டு வருகிறது.  அரசின் மனிதவளத்துறை இந்த அறிக்கை தயாரிப்பு பணியை ஏற்றுள்ளது. 2018-19 ஆம் ஆண்டிற்கான  உயர்கல்வி சேர்க்கை பற்றிய தகவல்களை அரசு வெளியிட்டுள்ளதில்  பெண்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது மகிழ்ச்சியான செய்தி. உயர்கல்வியில் சேர்ந்த 3.74 கோடிப் பேரில் 1.92 கோடி மாணவர்களும்,  1.82 கோடி மாணவிகளும்  உள்ளனர்.  2011-12 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது மாணவிகளின் எண்ணிக்கை 4.9 சதவீதம் அதிகரித்துள்ளது. இது உயர்கல்வியில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள ஆர்வத்தைக் காட்டுகிறது. உயர்கல்வியில் ஆண், பெண்களுக்கான பாலின இடைவெளி முன்னர் 0.88 சதவீதம் என்ற அளவிலிருந்து இன்று 1.0 சதவீதம் அளவுக்கு மாறியிருக்கிறது. ஒப்பீட்டில் 5 ஆயிரம் ஆண்கள் ஆண்டுதோறும் உயர்கல்விக்கு வருகிறார்கள் என்றால் தற்போ