இடுகைகள்

பிழைத்திருப்போம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிழைத்திருப்போம் - எங்கே செல்லும் இந்தப்பாதை?- தங்குவதற்கான இடம், அவசியமான பொருட்கள்

படம்
    இறுதிப்பகுதி     பிழைத்திருப்போம் எங்கே செல்லும் இந்தப்பாதை? பேரிடர், கலவரம், வதந்தி, பொய் வழக்கு என எதுவாகவேண்டுமானாலும் இருக்கலாம். நிம்மதியாக இருக்க தலைக்கு மேலே கூரை வேண்டும். அதாவது தங்குவதற்கு இடம்வேண்டும். அது பாதுகாப்பாக இருக்கவேண்டும். அதேசமயம் அதற்கான செலவும் குறைவாக இருக்கவேண்டும். இடங்களை முன்னமே கண்டுபிடித்து வைத்துக்கொள்ளுங்கள். தூரம் போகும் தூரம் குறிப்பிட்ட தொலைவில் இருக்கவேண்டும். வண்டியில் நீங்கள் போய்க்கொண்டே இருக்கமுடியாது அல்லவா? பெட்ரோலும் வண்டியில் குறைவாக இருக்கும்போது ஏதாவது ஒரு இடத்தை உறுதி செய்து அதை நோக்கி சென்றே தீரவேண்டும். அல்லாதபோது உங்கள் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகிவிடும். பல்வேறு இடங்கள் ஒரு கெட்ட விஷயம் நடக்கும்போது, வீட்டின் கதவை மட்டும் திறக்காது, ஜன்னல்களையும் திறந்துகொண்டு வரும் என்பார்கள். மோசமான விஷயங்கள் நடைபெறும்போது, உடனே தப்பிக்க நான்கு திசைகளுக்கு நான்கு இடங்கள் என தயாரித்து வைத்துக்கொண்டால் உதவியாக இருக்கும். ஒரே இடத்தை மட்டுமே நம்பியிருக்க முடியாது. அது ஆபத்தும் கூட. தனிக்குரல் கலைஞரான குணால் கம்ரா, தனது பகடி...

பேரிடர் காலத்தை எதிர்கொள்ள எப்படி தயாராவது? பொருட்கள், ஆலோசனைகள்

படம்
  பிழைத்திருப்போம் பேரிடர் காலங்களில் உயிர் தப்பிப் பிழைப்பது எப்படி? வடக்கு நாட்டில் தென்னாட்டில் உள்ளவர்கள் பற்றி தெரியாது. தெரிந்துகொள்ளவும் விரும்பவில்லை. அதனால் யாருக்கென்ன நஷ்டம்? என வாழ்கிறார்கள். தென்னாட்டினர். வடநாட்டினர் பற்றி தெரிந்ததால் அவர்களின் மோசடிகளை அறிந்து பத்திரமாக வாழ்கிறார்கள். ஆக, தகவல்களை முடிந்தளவு சேகரித்து வைத்துக்கொள்வது நன்மைதான். அது வளர்ச்சிக்கு உதவும், குறிப்பாக ஆபத்துக்காலங்களில் தட்பவெப்பநிலை தகவல், வானிலை தகவல், ஏன் கல்லூரிகள் நடத்தும் சமுதாய வானொலி கூட பயன் தரும்தான். சில நாடுகளில் வானிலைக்கென தனி வானொலி அலைவரிசையே இயங்குகிறது. அந்தளவு இந்தியா வளரவில்லை என்பதால், உள்ளூர் அளவில் சமூக வலைதளத்தில் பகிரும் தகவல்களை பார்த்து எச்சரிக்கையாக இருக்கலாம். பேரிடர், மதக்கலவரம், மதவாதிகள் ஏற்படுத்தும் வன்முறை, கொள்ளை ஆகியவற்றில் இருந்து தப்பிக்கவும் தகவல்கள் உதவும். உலகத்தைப் பற்றி அறிவது சிறப்பு. அப்படி இல்லையென்றால் உங்கள் ஏரியா பற்றியேனும் அறிவது நல்லது. அப்போதுதான் திடீரென லாக்டௌன் என்று அரச தகராறு செய்தால் முன்னமே பாதிப்பிலிருந்து நம்மையும் குடும்பத்தினர...