யார் இந்திய குடியுரிமை கொண்டவர் என தீர்மானிக்க முயலும் தேர்தல் ஆணையம்!
யார் இந்திய குடியுரிமை கொண்டவர் என தீர்மானிக்க முயலும் தேர்தல் ஆணையம்! பீகாரில் தேர்தல் ஆணையம் சீர்திருத்தப் பணியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ளது. எஸ்ஐஆர் எனும் பெயரில் யார் வாக்காளர்கள் என்பதை அகழாய்வு செய்து வருகிறது. இவர்களின் பணியில் பல லட்சம் ஏழை, பட்டியலின, புலம்பெயர் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. பாசிச இயக்கத்தின் பின்புலத்தோடு இயங்கும் வலதுசாரி மதவாத கட்சிக்கு எதிர்ப்புகள் புதிதல்ல. முன்னரே குடியுரிமைச் சட்டம் என்பதைக் கொண்டு வந்து மக்களை இனம் பிரித்து கெட்டோ எனும் தனி இடத்தில் அடைக்க திட்டமிட்டனர். அவை சில மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையம் சுயாட்சி தன்மையில் இயங்கக்கூடியது. ஆனால் இப்போது பாசிச இயக்கத்தின் வழிகாட்டுதலின்படி ஆபத்து ஏற்படுத்தும் சீர்திருத்தங்களை செய்யத்தொடங்கியுள்ளது. 1991-96 காலகட்டம் தேர்தல் ஆணையத்தின் சிறந்த பணிக்காலம் என்று கூறலாம். அப்போது அதன் தலைமை தேர்தல் அதிகாரியாக டிஎன் சேஷன் என்பவர் இருந்தார். சுயாட்சி, நேர்மை, பாகுபாடற்ற தன்மை வெளிப்படையாக தெரிந்தது. சேஷனுக்குப் பிறகு எம்எஸ்...