இந்துஸ்தான் உதயமாகிறதா? - குடியுரிமை மசோதாவின் விளைவுகள்!
குடியுரிமைச் சட்ட மசோதா
அரசியலமைப்புச் சட்டத்தில் பிரிவு 14யை புறக்கணிக்கும் மசோதா விரைவில் குடியரசுத்தலைவரின் கையெழுத்தைப்பெற்று சட்டமாகவிருக்கிறது. இதன்மூலம், இந்திய முஸ்லீம்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இம்மசோதாவின் அமலாக்கத்திலேயே அவர்கள் இரண்டாம்தர குடிமக்களாக மாறும் அபாயம் உள்ளது.
டிச.11 அன்று மக்களவையில் கடுமையான எதிர்ப்புகளையும் மீறி பாஜக எம்பிகள் அதிமுக எம்பிகள் ஆதரவளிக்க மசோதா தாக்கலானது. இதன்மூலம் 2014 டிச.31க்குள் இந்தியாவுக்குள் குடியேறியவர்கள், முஸ்லீம்கள் நீங்கலாக பிற மதத்தவர்கள் குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம்.
நூற்றாண்டு கால இந்தியப் பெருமையை மீட்டு எடுத்துவிட்டோம் என பிரதமர் மோடி, டுவிட்டரில் நெகிழும் போது அசாமில் மூன்றுபேர் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் பலியாகி இருக்கிறார்கள். உள்நாட்டுப்போரை பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கும் முன்னதாகவே ஆர்எஸ்எஸ் தொடங்கிவிட்டது. இனி அவர்களுக்கு வேலையே இல்லை.
இதுபற்றி சமூக நல ஆர்வலர் ஹர்ஷ்மந்தர், நான் பிறப்பால் முஸ்லீம்,. இச்சட்டத்தை அரசு கொண்டுவந்தால் நான் எனக்கான ஆவணங்களைக் கொண்டு பதிவு செய்யப்போவதில்லை. இதனால் நேரும் பிரச்னைகளை சந்திக்க சட்டமறுப்பு போராட்டத்தை நடத்தப்போகிறேன். என்று கூறியுள்ளார். இந்தியாவிற்குள் இரண்டு நாடுகள் உண்டு. ஒன்று இந்துக்களுக்கானது, மற்றொன்று முஸ்லீம்களுக்கானது எனும் இந்துத்துவ கருத்துகளுக்கு செயல்வடிவம் கொடுத்துள்ளது வலதுசாரி அரசான பாஜக.
நன்றி- குளோபல் வாய்ஸ்