சாகாவரம் பெற்ற குரங்கு ராஜா! - அட்டகாசமான 3 பாகங்கள்!








Image result for monkey king 3


Image result for monkey king


மங்கி கிங் 1, 2 அண்ட் 3

சீனாவின் பதினாறாம் நூற்றாண்டுக் கதை. நம் ஜங்கிள் புக் போல. தேவதை ஒன்றின் தியாகத்தால் கிரிஸ்டல் உருவாகிறது. சொர்க்கத்தை தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்க அத்தேவதை தன் முழு உடலையும் கிரிஸ்டல் கற்களாக மாற்றுகிறு. அதில் ஒரு கல்லில் பிராண சக்தி இருக்கிறது. அது குரங்காக உருவம் பெற, அதுதான் மங்கி கிங்.

முதிர்ச்சியான அறிவு இல்லாத குரங்கு ராஜாவிற்கு மனித உடல், குரங்கின் முடி, அதன் உடல் திறன் என அனைத்தும் மாமி மெஸ் கலந்த சாதம் போலவே இருக்கிறது. குரங்கு ராஜா செய்யும் அமர்க்களம்தான் மூன்று படங்களுமே.

Image result for monkey king



முதல் பாகம்.

இதில் சொர்க்கத்தை சூறையாட வரும் வில்லனை குமட்டில் குத்தி வீழ்த்துகிறார் சொர்க்க ராஜா. வில்லன் சும்மா இல்லை. கடுமையாக உழைத்து ராஜாவின் தங்கையை உஷார் செய்தது அந்த சண்டையில்தான் சொர்க்க ராஜாவிற்கு தெரிகிறது. சரி பிழைச்சுப் போ என்று தீயசக்தியை கொல்லாமல் விடுகிறார். வில்லனுக்கு சொர்க்க ராஜாவின்இருக்கைதான் குறி. அதாவது அதில் அமர்ந்து ஆள வேண்டும். ஆனால் கிடைத்தது வௌவால் பறக்கும் குகை. எனவே காலத்திற்காக காத்திருக்கிறார். அப்போதுதான் குரங்கு ராஜா பிறக்கிறார். அவரை தனக்கு பயன்படுத்திக்கொள்ள வில்லன் நினைக்கிறார்.

ஆனால் அதற்குள் தேவதைகள் குரங்கு ராஜாவிற்கு ஒழுக்கம், சண்டைக் கலை கற்பிக்க குருவை தேர்ந்தெடுத்து விடுகின்றனர். இறுதியில் யார் வென்றது? குபீரென கோபம் கொள்ளும் குரங்கு ராஜா என்ன செய்தார்? என்பதுதான் இறுதிக்காட்சி. விசுவல் எஃபக்ட்ஸ் பின்னியிருக்கிறார்கள். ரசித்துப் பார்க்கலாம்.

Image result for monkey king



 பாகம் 2

இதில் ஊரே சூனியக்காரி என்று ஒதுக்கிய பெண் எப்படி ரத்தம் குடிக்கும் அல்லது ஆன்மா குடிக்கும் காட்டேரியாக மாறினாள் என்பதை சென்டிமென்டாக சொல்கிறார்கள். இதில் குரங்கு ராஜாவை சாபத்திலிருந்து பௌத்த துறவி விடுவித்து, அவரை கன்ட்ரோல் செய்ய க்ரீடம் ஒன்றை தலையில் சூடிவிடுகிறார். குரங்கு ராஜாவின் சேட்டை அதிகமாகும்போது மந்திரம் ஜபித்தால், மயக்கம் என்ன தனுஷ் போல ஒடுங்கிவிடுகிறார்.

துறவிக்கும், குரங்கு ராஜாவுக்குமான வேறுபாடு, யோசிக்கும் விதம் ஆகிய விஷயங்கள் பிரமாதமாக காட்டியிருக்கிறார்கள். துறவி மிகவும் மென்மையானவராக இருக்கிறார். அடிக்கடி பொலபொலவென அழுகிறார். இறுதியில் அவர் தான் செய்யும் செயலுக்கு வருந்து குரங்கு ராஜாவின் கையாலே இறக்கிறார். ஏன் அப்படி என்று தெரிந்தால் நீங்களும் நெகிழ்ந்துபோவீர்கள். படம் பாருங்கள். ரசியுங்கள்.


Image result for monkey king 3 movie

பாகம்  3


துறவியின் காதல் அத்தியாயம். பெண்கள் தீவு இளவரசி, பௌத்த துறவியைப் பார்த்ததும் நீங்கள் ஆணா என்று கேட்கிறார். நமக்கே பகீர் என்கிறது. என்ன ஒரு டைப்பான பெண்ணோ? என்று அப்புறம்தான் தெரிகிறது . அவர்களின் தீவு ஆண்வாசனை இல்லாத அல்லி ராணி கோட்டை என. துறவி, குரங்கு ராஜா, பன்றி, நீலமனிதன் ஆகியோருக்கு வாய்தாவே வழங்காமல் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இளவரசி தன் காதலால் அனைவரின் உயிரையும் காப்பாற்றுகிறார். துறவி அந்த தீவின் இளவரசியை மணந்தாரா, தண்டனையிலிருந்து தப்பினாரா என்பதை சூப்பரான சண்டைகளுடன் சொல்லியிருக்கிறார்கள் அதோடு இளவரசியின் தாய்க்கும் காதல் அத்தியாயங்கள் உண்டு. அதையும் நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார்கள்.

கோமாளிமேடை டீம்