தடுமாறும் மாநிலங்களின் வருமானம்!




Credit Squeeze, Taxation, Purse, Tax, Economic Stress





சர்வதேச ரேட்டிங் நிறுவனமான மூடி, இந்தியாவின் வளர்ச்சிவீதத்தைக் குறைத்துள்ளது. இதனால் மத்திய அரசின் பட்ஜெட் பற்றாக்குறை 3.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் மாநிலங்களின் பங்களிப்பு இதில் குறைந்துபோனதுதான். நவம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய் ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டினாலும் தொடர்ச்சியாக இந்த வருவாய் கிடைத்தால் மட்டுமே இந்திய அரசு பற்றாக்குறை பிரச்னையில் இருந்து தப்பிக்கும்.

2019ஆம் ஆண்டு இந்திய அரசு 6.7 சதவீதம் அளவுக்கு உற்பத்தி பற்றாக்குறையை எதிர்பார்த்தது. மாநில அளவில் இது 3.7 சதவீதம் அளவுக்கு உள்ளது.

ஜிஎஸ்டி உதவாதது ஏன்?

நேர்முகம், மறைமுகமாக பல்வேறு வரிகள் இருந்தன. மத்திய அரசு அதனை மாற்றி 2017 இல் ஜிஎஸ்டியை கொண்டு வந்தது. இதில் நேரும் இழப்பீடுகளுக்கு மாநிலங்கள் மத்திய அரசை நம்பியுள்ளன. இந்த இழப்பீட்டையும் அரசு ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே தரும், அதற்கு பிறகு வரி பங்கீடு படி கிடைக்கும் தொகை மட்டுமே மாநிலங்களுக்குச் சேரும்.

மாநிலங்களில் உற்பத்தி குறைந்து போனதால், ஆண்டுதோறும் பத்து சதவீதம் என வரிவருவாய் குறைந்து வருகிறது. இதன் விளைவாக, மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சியும் குறைந்துவருகிறது. கேரளம், ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் பெற்றுள்ள கடன் தொகையின் அளவு அதிகரித்து வருகிறது.

நன்றி - டைம்ஸ்