கருப்பின குழந்தைகளை கொன்ற அசுரன்! - வேய்ன் வில்லியம்ஸ்






Wayne Williams In 2006




1979 ஆம் ஆண்டு தொடங்கி 1981ஆம் ஆண்டுவரை அமெரிக்காவின் அட்லாண்டாவில் நடந்த கொலைகள் 29க்கும் அதிகம். அதனை குறிப்பிட்ட வரிசையில் பார்த்தால், இறந்தவர்கள் பெரும்பாலானோர் கருப்பின  சிறுவர்கள். இவர்களைக் கொன்றது யார் என போலீஸ் ஆராய்ந்ததில் சிக்கியர், வேய்ன் வில்லியம்ஸ். இரண்டு கொலைகளுக்காக தண்டனை பெற்றார். ஆனால் ஆதாரம் கிடைக்கவில்லை என்றாலும் இருபதிற்கும் மேற்பட்ட கொலைகளை செய்தார் என்று அமெரிக்க காவல்துறை அடித்துச் சொல்கிறது.


அட்லாண்டாவில் பதிமூன்று, பதினான்கு வயது சிறுவர்கள் இருவர் காணாமல் போனார்கள். பெற்றோர் புகார் கொடுத்தார்கள். அரசு அமைப்பு அல்லவா? அதற்காக அசதியுடன் போங்கள் கண்டுபிடித்து தகவல் சொல்கிறோம் என போலீஸ் சொன்னது. இருவரின் உடல்களும் சில நாட்களுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்டது. ஒருவன் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டிருந்தார். இன்னொருவன் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்தான்.

சீரியசான விவகாரம் போல என்று முட்டை ப ப்சை சாப்பிட்டு போலீசார் சாப்பிட்டு முடிக்கும் முன்னரே செய்தி வந்துவிட்டது. மூன்று சிறுவர்களின் உடலை யாரோ பார்த்தார்களாம். அப்புறம்தான், ஆஹா.. நம்மை பரபரப்பாக வைக்கவே வேலை பார்க்கிறான் போல என்று போலீசார் கொலைகளை பின்பற்றத் தொடங்கினர். 

அப்போது அந்த வட்டாரத்தில் குற்றவாளிகளின் ஜாதகங்களை ஆராய்ந்து மணிமேகலை பிரசுரம் போல புத்தகங்களைப் போட்டுக் கொண்டிருந்தவர், ராபர்ட் டக்ளஸ். இவர் கொலைகளின் தன்மையைப் பார்த்து, கொலையாளி கருப்பினத்தவர் என்று சொல்லி விட்டார்.  1981ஆம் ஆண்டு மே மாதத்தில்  போலீசார் 29 சிறுவர்களின் உடல்களை பொறுக்கி எடுத்து ஓய்ந்து போயிருந்தனர். சட்டஹூச்சி எனும் ஆற்றுப்பகுதியில் சில உடல்களை போலீஸ் கைப்பற்றியது. அந்த ஆற்றில் மீது உள்ள பாலங்களில் இருந்து உடல்கள் வீசப்படுவதாக போலீசார் சந்தேகப்பட்டனர். அதனைக் கண்காணித்த போது, மே 22 ஆம் தேதி பாலத்தில் நின்றது ஒரு கார். அதிலிருந்து ஏதோ ஒரு பொருள் ஆற்றில் வீசப்பட்டது. பின் அக்கார் வேகமாக அங்கிருந்து கிளம்பியது. அதில் இருந்தவர்தான் வேய்ன் வில்லியம்ஸ்.

இரண்டு கொலையாளிகளின் அருகே வில்லியம்சின் முடி கிடைத்தது. அதை வைத்து போலீசார், வழக்கு போட்டு அவருக்கு  இரண்டு ஆயுள் தண்டனை வாங்கிக் கொடுத்தனர். பல வழக்குகளை வில்லியம்சோடு இணைக்க முடியவில்லை.


இதுபற்றி நீங்கள் அறிய விரும்பினால், இணையத்தில் பாட்காஸ்ட்டுகள் கிடைக்கின்றன. நெட்பிளிக்ஸ் இணையதளத்தில் மைண்ட் ஹன்டர் வலைதொடர்  வருகிறது. அதில் இவரைப் பற்றியும்  வருகிறது. வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள்.

நன்றி - ஆல்தட் இன்ட்ரஸ்டிங் வலைத்தளம்
கில்லர்ஸ் நூல் 



பிரபலமான இடுகைகள்