2020 இல் இந்தியா கவனம் செலுத்த வேண்டிய 5 விஷயங்கள்!








Image result for d shivakumar aditya birla

2020இல் இந்தியா

டி.சிவக்குமார், குழுமத் தலைவர் ஆதித்ய பிர்லா குழுமம்


கல்வி!

நாம் மதிய உணவத்திட்டத்தில் நிறைய புதுமைகளை செய்திருக்கிறோம். இதனால் 96.5 சதவீத மாணவர்கள் மதிய உணவைப் பெறுகிறார்கள். இதேபோல எதிர்கால சூழல்கள், சவால்களை சந்திக்க ஆசிரியர்களும் தயாராக அவர்களுக்கு பயிற்சி அளிப்பது அவசியம். ஆசிரியர்கள் தம் வாழ்க்கை முழுவதும் கற்பவர்களாக இருந்து மாணவர்களுக்கு வழிகாட்டுவது அவசியம். வளர்ந்து தொழிலதிபர்களாக, வாழ்வில் சிறந்த மனிதர்களாக உள்ளவர்கள் அனைவரும் தங்களுக்கு முன்மாதிரியாக கூறுவது ஆசிரியர்களை என்பதை மறந்துவிடாதீர்கள்.

ஏற்றத்தாழ்வுகள் நீக்கப்பட வேண்டும்

அரசு அதிகாரிகளை மக்கள் சந்திக்க முடியாத தடைகள் நிறைய உள்ளன. மனதளவிலும், நடைமுறையிலும்தான். நாம் அவற்றைக் களைந்தால்தான் மக்களின் சிந்தனைகளைப் பெற்றுக்கொண்டு அவற்றை செயலாக்கம் செய்ய முடியும். 2000க்கும் மேல் பிறந்தவர்கள் இனி செயல்படுவது முழுக்க இதை நோக்கி இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.

கூட்டாளிகள் தேவை

இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்களில் சிறப்பாக செயற்படும் நிறுவனங்கள் நிறைய உள்ளன. இவை உலகளவில் சரியான நிறுவனங்களை இணைத்துக்கொண்டு செயல்பட்டால் இந்தியாவின் தொழில்துறை வளரும்.


பரந்த மனப்பான்மை தேவை


இந்தியர்கள் திறமைசாலிகள்தான். ஆனால் அதனை நிரூபிப்பதற்கான களங்களை அமைத்துக்கொடுப்பதில் ஏனோ குறுகிய மனப்பாங்கு கொண்டவர்களாக இருக்கிறோம். முதலில் கிரிக்கெட் விளையாடி புகழ், பணம் பெறுவது என்றால் அது இந்திய கிரிக்கெட் அணியில் மட்டுமே என்று ஓர் நிலைமை இருந்தது. ஆனால் இன்று அந்நிலைமை மாறியிருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆட்களை ஐபிஎல்லிலிருந்து எடுத்துக்கொள்கிறார்கள். நான் கூறும் இந்த உதாரணம் எளிமையானது. நம்மை நிரூபிப்பதற்காக தொழில்நுட்பங்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

சுதந்திரமான ஊடகங்கள்

இணையம் போல கட்டற்ற, முக்கியமான பிரச்னைகளைப் பேசுவதாக ஊடகங்கள் இருக்க வேண்டும். இத்தன்மையில் ஊடகங்கள் இருக்கவேண்டும் என நான் விரும்புகிறேன். இவற்றால் மட்டுமே அரசு, காவல் ஆகியவற்றுக்கு பயப்படாமல் உண்மையைப் பேச முடியும்.

நன்றி - லிவ் மின்ட்