இடுகைகள்

போலி செய்திகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

2030 இல் உலகத்தை மாற்றுவது எது?

படம்
2030 இல் உலகம் என்னவாகும்? என்ன வேண்டுமானாலும் ஆகலாம். காரணம் தொழில்நுட்பம் அனைத்தும் எது உண்மை, பொய் என கணிக்கமுடியாதபடி மாறியிருக்கிறது. அரசின் கண்காணிப்பு, வணிகத்தின் உலகமயமாக்கம். இயற்கை வளங்கள் சுரண்டல், வன்முறை விளையாட்டுகள், இணையம் சார்ந்த நிதிபரிமாற்றம், கணினி பாதுகாப்பு, ஸ்மார்ட்போன் மேம்பாடு என பல்வேறு விஷயங்கள் மாற விருக்கின்றன. நிஜம் எது நிழல் எது? அண்மையில் அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சிந்தடிக் ஒபாமா வீடியோவை உருவாக்கியுள்ளனர். இதற்கு செலவான நேரம் பதினான்கு மணி நேரம்தான். இன்னொருவர் பேசிய வார்த்தைகளை ஒபாமாவின் உதட்டசையில் பேசிவிட முடியும் என்பதுதான் இவர்கள் நிரூபணம். இதனை ஒபாமாவின் பழைய வீடியோக்களோடு ஒப்பிட்டாலும் உங்களால் எந்த வித்தியாசத்தையும் கண்டுபிடிக்க முடியாது. கீழேயுள்ள வீடியோவைப் பாருங்கள். https://www.youtube.com/watch?time_continue=86&v=AmUC4m6w1wo சாப்பிடுவதை இனி நீங்கள் தீர்மானிக்க முடியாது உங்களின் டிஎன்ஏ பற்றி தகவல்களை எடுத்து சேமித்து விடுவதால், அதற்கு பொருத்தமான வெஜ், நான்வெஜ், வீகன் உணவுவக

பொய்களை உலகிற்கு சொல்வதே எங்கள் கடமை!

படம்
bbc இந்தியாவில் மோடி, பிரேசிலில் பொல்சனாரோ, ஹங்கேரியில் விக்டர் ஆர்பன்  உள்ளிட்ட உள்ளிட்ட வலதுசாரி தலைவர்கள் அரசியல் சூழலையே மாற்றியுள்ளனர். இவர்களின் தலைமையிலான இந்த அரசுகளுக்கு இடையிலுள்ள பொதுவான தன்மை, மக்களுக்கு ஆதாரமில்லாத பொய்களை, கட்டுக்கதைகளை கூறுவது. எதற்காக? தங்களுடைய நிர்வாகச் செயலின்மையை மறைப்பதற்காகத்தான். அதனை அம்பலப்படுத்துபவர்களும் இவர்களுக்கு இணையாகச் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களில் சிலரைப் பார்ப்போம். கோவிந்தராஜ் எத்திராஜ் பூம் லைவ் பாகிஸ்தான் இணையத்தளமாக வேர்ல்டு நியூஸ் அப்ஸர்வர், சொன்ன பொய்யை அம்பலப்படுத்தினார். அதில் அமெரிக்க தளவாட நிறுவனமான லோக்கீத் மார்ட்டின் இந்தியா மீது  தவறான செய்திகளை பரப்பியதற்காக வழக்கு தொடரவிருப்பதாக செய்தி வெளியிட்டது வேர்ல்ட் நியூஸ் வலைத்தளம். ஃபேக்ட்செக்கர்.இன் கடந்த நான்கு ஆண்டுகளில் பிரதமர் மோடி 35 விமானநிலையங்களை கட்டியதாக கூறியதை சூப்பர் டூப் என நிரூபித்தார்.  2014 -2018 ஆம் ஆண்டில் வெறும் ஏழு விமானநிலையங்களை மட்டும் கட்டியுள்ளதை வெளிப்படுத்தியது இந்த இணையதள சாதனை. இந்தியாஸ்பென்ட் எனும் தளத்தை