இடுகைகள்

பூக்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உலக நாடுகளில் காலநிலை மாற்றத்தில் ஏற்படும் விளைவுகள்!

படம்
  உலகமெங்கும் மாறும் காலநிலை!  ஆண்டுதோறும் ஜப்பானின் ஒகினாவா நகரில், வசந்தகாலத்தின் போது செர்ரி மரங்கள் பூத்துக்குலுங்கும். பூக்கள் மெல்ல மலர்வது ஒகினாவாவில் தொடங்கி டோக்கியோ நகரம் வரை நீளும். அந்நாட்டில் மலர்ந்த பூக்களைக்  காண்பதை ஹனாமி (Hanami festival)என்ற பெயரில் விழாவாக கொண்டாடுகின்றனர். ஜப்பானில், மார்ச் இறுதியில் தொடங்கி மே மாதம் வரை  செர்ரி பூக்கள் மலர்ந்து வந்தன. ஆனால், கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதியே, ஜப்பானின் கியோட்டோ நகரில் செர்ரி பூக்கள் முழுமையாக மலர்ந்துவிட்டன. இப்படி பூக்கள் வேகமாக மலர, காலநிலை மாற்றமே காரணம். பருவகாலங்களில் மாற்றம் ஏற்படுவது, உயிரினங்களின் வாழ்விலும் பாதிப்பை ஏற்படுத்தும்.  “சூழலின் இசைவு நிலைக்கு, காலம் முக்கியமான காரணி” என்றார் கென்யாவிலுள்ள  ஐ.நா. சூழல் திட்டத்தைச் (UNEP) சேர்ந்த மார்டென் கப்பெல்லெ.   தாவரங்கள், பறவைகள் ஆகியவற்றின் சூழல் பங்களிப்பு பற்றிய அறிவியல் ஆய்வுகளுக்கு பினாலஜி (Phenology) என்று பெயர். 1853ஆம் ஆண்டு பெல்ஜியம் நாட்டு தாவரவியலாளர் சார்லஸ் மோரென் (Charles morren), பினாலஜி என்ற வார்த்தையை ...

காற்றில் மிதக்கும் மகரந்தத்தால் ஏற்படும் ஒவ்வாமை!

படம்
  மகரந்தத்தின் ஆபத்து ஒவ்வாமையை ஏற்படுத்துவதில் தாவரங்களின் மகரந்தம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த மகரந்தம் காற்றிலுள்ள கார்பன் டை ஆக்சைடு, வெப்பம் ஆகியவற்றுடன் இணைந்து மக்களை பாதிக்கிறது. இது குறிப்பிட்ட பருவத்தில்தான் மக்களை பாதிக்கிறது என்பது உண்மை. ஆனால் பாதிப்பு கடுமையாக இருக்கும். பொதுவாக ஒரு பொருளிலுள்ள புரதம்தான் ஒவ்வாமைக்கு முக்கியமான காரணமாக இருக்கும்.  கிராமங்களில்தான் அதிகளவு தாவரங்கள், மரங்கள் உள்ளன. ஆனால் ஒவ்வாமையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால், நகரத்தினர்தான் அதிகமாக இருக்கிறார்கள். இதற்கு முக்கியமான காரணம், நகர்ப்புறங்களில் பசுமைப்பரப்பு குறைந்துபோனதும், மாசுபாடு அதிகரித்து வருவதும்தான்.  இதற்கு தீர்வு ஒன்றே ஒன்றுதான். சுற்றுப்புறத்தையும் உங்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் அவ்வளவேதான். மரங்களிலிருந்து மகரந்தம் உருவாகி ஒருவரைத் தாக்குவதற்கு வாய்ப்பிருக்கிறது. இதனால் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் கவனமாக இருக்கவேண்டும். ஆப்பிள், பேரிக்காய் செர்ரி, பெர்ரி போன்றவை கூட ஒவ்வாமையைக் கூட்ட வாய்ப்புள்ளது. எனவே இவற்றிலிருந்த...

பூனைகள் கருப்பு வெள்ளை நிறத்தை மட்டுமே பார்க்குமா?

படம்
pixabay  பதில் சொல்லுங்க ப்ரோ? வின்சென்ட் காபோ பறவைகள் பொதுவாக குரல் கொடுப்பது இணையைக் கவர்வதற்கும், தனது பகுதியை கூறுவதற்கும்தான். பறவைகளுக்கு குரல் கொடுப்பதற்கென உள்ள உறுப்பின் பெயர் சைரின்க்ஸ். இது மனிதர்களின் குரல் அமைப்பான லாரினக்ஸ் என்பது போலத்தான். நுரையீரலிருந்து கிளம்பும் காற்று தசை, மற்றும் சைரின்க்ஸ் இழைகளின் வழியாக வெளிப்படுகிறது. சில பறவைகள் பறக்கும்போது கூட பாடுவது உண்டு. ஆனால் அப்படி செயல்படும் பறவைகளின் எண்ணிக்கை மிக குறைவு. ஸ்டார்லிங் எனும் பறவை தான் கேட்கும் ஒலியை அப்படியே நகல் செய்து ஒலிக்கும். உதாரணமாக காரின் ஹார்ன் ஒலி போலீஸ் வாகன சைரன் ஒலி, டெலிபோன் ரிங்டோன். அவை பாடும் இசையும் பிரமாதமாக இருக்கும். பூனைகள் கருப்பு வெள்ளை நிறத்தை மட்டுமே பார்க்குமா? முதலில் அப்படி நினைத்து வந்தனர். ஆனால் இப்போது அறிவியல் வளர்ந்துவிட்டது. எனவே, ஆராய்ச்சி மூலம் பூனைகள் சில குறிப்பிட்ட நிறங்களை பார்க்கமுடியும் என்பதை உறுதிசெய்துள்ளனர். சிவப்பு, நீலம், மஞ்சள், பச்சை, சிவப்பு ஆகிய நிறங்களை அவை அடையாளம் கண்டு கொள்கின்றன. மனிதர்களைப் போல பூனைகளுக்கு நிறம் அவ்வளவு துல்லியமாக தெரியாது. ...