பூனைகள் கருப்பு வெள்ளை நிறத்தை மட்டுமே பார்க்குமா?

Cat, Animals, Cats, Portrait Of Cat, Cat Face
pixabay

 பதில் சொல்லுங்க ப்ரோ?

வின்சென்ட் காபோ

பறவைகள் பொதுவாக குரல் கொடுப்பது இணையைக் கவர்வதற்கும், தனது பகுதியை கூறுவதற்கும்தான். பறவைகளுக்கு குரல் கொடுப்பதற்கென உள்ள உறுப்பின் பெயர் சைரின்க்ஸ். இது மனிதர்களின் குரல் அமைப்பான லாரினக்ஸ் என்பது போலத்தான். நுரையீரலிருந்து கிளம்பும் காற்று தசை, மற்றும் சைரின்க்ஸ் இழைகளின் வழியாக வெளிப்படுகிறது. சில பறவைகள் பறக்கும்போது கூட பாடுவது உண்டு. ஆனால் அப்படி செயல்படும் பறவைகளின் எண்ணிக்கை மிக குறைவு. ஸ்டார்லிங் எனும் பறவை தான் கேட்கும் ஒலியை அப்படியே நகல் செய்து ஒலிக்கும். உதாரணமாக காரின் ஹார்ன் ஒலி போலீஸ் வாகன சைரன் ஒலி, டெலிபோன் ரிங்டோன். அவை பாடும் இசையும் பிரமாதமாக இருக்கும்.

பூனைகள் கருப்பு வெள்ளை நிறத்தை மட்டுமே பார்க்குமா?

முதலில் அப்படி நினைத்து வந்தனர். ஆனால் இப்போது அறிவியல் வளர்ந்துவிட்டது. எனவே, ஆராய்ச்சி மூலம் பூனைகள் சில குறிப்பிட்ட நிறங்களை பார்க்கமுடியும் என்பதை உறுதிசெய்துள்ளனர். சிவப்பு, நீலம், மஞ்சள், பச்சை, சிவப்பு ஆகிய நிறங்களை அவை அடையாளம் கண்டு கொள்கின்றன. மனிதர்களைப் போல பூனைகளுக்கு நிறம் அவ்வளவு துல்லியமாக தெரியாது. அப்படி தெரியவேண்டும் என்கிற அவசியமும் கிடையாது. ஐந்து அல்லது இருபது அடி தூரத்தில் பொருட்கள் இருக்கும்போது அவற்றை தெளிவாக பூனைகள் பார்க்க முடியும்.

கருப்பு, பழுப்பு ஆகிய நிறங்களை பூனைகள் தெளிவாக பார்க்கின்றன. பூனையின் கண்களில் டேப்டம் லூசிடம் எனும் இழை உள்ளது. இது ரெட்டினாவுக்கு பின்னால் உள்ளது. இதுவே ஒளியை எலக்ட்ரிகல் துடிப்புகளாக மாற்றிக்கொடுக்கின்றன. இதுவே பூனைகள் குறைந்த வெளிச்சத்தில் வேட்டையாட உதவுகின்றன. இதனை இருட்டில் பார்க்கும்போதுதான் பச்சை அல்லது தங்க நிறமாக நமக்குதோன்றுகிறது.

பூக்கள் எப்படி தம் நிறத்தைப் பெறுகின்றன?

பூக்கள் தம் நிறத்தை பெறுவதற்கு ஆந்தோசயானின் என்ற வேதிப்பொருள் காரணம். இந்த ஆந்தாசயானின் கரையும் வேதிப்பொருட்கள் கொண்டவற்றை பிளேவ்னாய்டு என்று குறிப்பிடலாம். ஆந்தோசயானின் எனும் நிறச்சேர்க்கை பொருள் தாவரங்கள், விலங்குகளுக்கு நிறத்தை அளிக்கிறது. குளோரோபில் தாவரங்களுக்கு பச்சை நிறத்தை அளிக்கிறது.ஹீமோகுளோபின் நம்முடைய ரத்தசெல்களுக்கு சிவப்பு நிறத்தை அளிக்கிறது. கரோட்டின் என்ற நிறமி கேரட்டுக்கு ஆரஞ்சு நிறத்தையும் தக்காளிக்கு சிவப்பு நிறத்தையும் அளிக்கிறது.

பாம்புகள் ஒருவரை கடிப்பது ஏன்?

இதற்கு பல காரணங்கள் உண்டு. முக்கியமான காரணம், தம்மை காப்பாற்றிக்கொள்ளத்தான். தனது இடம், முட்டைகளை காப்பாற்றவும், தப்பிக்க வழியில்லை என்பதை உணரும் போதும் பாம்புகள் பிற உயிர்களை தீண்டுகின்றன.

பாம்பில் 3 ஆயிரம் வகைகள் இருந்தாலும், அதில் 25 சதவீதம் மட்டுமே விஷம் கொண்டவை. பெரும்பகுதி பாம்பு கடிகள் ஏற்படுவது, மனித தவறுகளால்தான். மனிதர்களை பாம்புகள் அரிதாகவே கடிக்கின்றன. பாம்புகளின் விஷத்தை தடுக்கும் நச்சு முறிவு மருந்து பிரான்சில் 1895ஆம்ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.



கருத்துகள்