சந்தைக்குப் புதுசு! - காலேஜ் கேம்பஸிற்குள் ஜாலியாக ஓட்ட மின் சைக்கிள்
சந்தைக்குப் புதுசு!
கோ சைக்கிள் ஜிஎக்ஸ்
ஏழு மணிநேரம் சார்ஜ் செய்தால் 65 கி.மீ தூரம் செல்லும் எலக்ட்ரிக் சைக்கிள் இது. காலேஜின், பல்கலைக்கழகத்தின் கேம்பஸிற்குள் ஜாலியாக ஒட்டிச்செல்ல ஏற்ற வண்டி இது. மூன்று ஸ்பீடு செட்டிங்குகள் உள்ளன. மணிக்கு 25 கி.மீ வேகத்தில் விரையலாம். எரிபொருளின் அளவை எளிதாக மானிட்டர் செய்துகொள்ளலாம். வேகம் பற்றிய தகவலையும் எளிதாக சரிபார்த்து ஓட்டலாம்.
விலை 3299 டாலர்கள்
சிப்போலா ஒன்
வீட்டுச்சாவி, போன் தொலைந்துவிட்டால் இந்த ஆப் மூலம் தேடிக் கண்டுபிடித்துவிடலாம். இதற்கென நாம் செல்லும் அனைத்து இடங்களையும் மானிட்டர் செய்து கண்காணிக்கிறது. எனவே, சாவியை தொலைத்தாலும் சிப்போலோ ஒன்னை உசுப்பி கண்டுபிடித்துவிடலாம். எனவே சர்வ அஜாக்கிரதையாக இருங்கள். தப்பில்லை.
விலை 27. 50 டாலர்கள்.
லாசி மொபைல் டிரைவ்
எப்போது வேலை செய்தாலும் நாம் அடிக்கடி மறப்பது, அதனை சரியானபடி பேக்அப் செய்து வைப்பதுதான். அதைத்தான் செய்ய மொபைல் டிரைவ் செய்ய உதவுகிறது. ஐந்து டெராபைட் அளவுக்கு தகவல்களை சேகரித்து வைக்கலாம். 5 லட்சம் புகைப்படங்கள், 165 மணிநேரங்கள் வீடியோக்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.
விலை 94.99 டாலர்கள்.
ஜேபிஎல் லிங்க் போர்ட்டபிள்
விலை 179.95 டால்ர்கள்
வைஃபை ப்ளூடூத் என எதிலும் இணைத்து 360 டிகிரி ஒலியை கேட்டு மகிழலாம். ஸ்பாட்டிஃபை, ஆப்பிள், யூடியூப் என எதிலும் இணைத்து இசைவெள்ளத்தில் நனையலாம். இதில் குரல் மூலம் பாடல்களைத் தேடி கேட்கும் வசதியையும் இணைத்திருக்கிறார்கள். சார்ஜ் செய்தால் எட்டு மணி நேரம் குளுகுளு இசையைக் கேட்டு நெஞ்சுருகலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக