தினசரி வாழ்க்கையில் பயன்படும் எளிமையான ஆப்கள் இவை!
ஆப்கள்
ஓட்டெர் வாய்ஸ் மீட்டிங் நோட்ஸ்
இது ஒரு டிக்டேஷன் ஆப். எனவே யார் பேசினாலும் நீங்கள் அதனை ரெக்கார்ட் செய்து வைத்து பயன்படுத்திக்கொள்ளலாம். நேர்காணல், ஆசிரியரின் உரைகள், சந்திப்புகள் என அனைத்தையும் ஆடியோ டூ எழுத்தாக கூட மாற்றிக்கொள்ளும் வசதியை தருகிறார்கள்.
கூகுள் ஸ்டோரில் இலவசமாக கிடைக்கிறது.
மன்த்லி பட்ஜெட் பிளானர், டெய்லி எக்ஸ்பென்ஸ் டிராக்கர்.
தலைப்பில் சொல்லிவிட்டோமே அதுதான் விஷயம். நாயர் கடையில் டீ குடித்துவிட்டு மிச்ச சில்லறைக்கு சென்டர் பிரஷ் வாங்குவது வ்ரையில் அனைத்து விஷயங்களையும் இதில் பதிவு செய்து கணக்கு பார்த்து பட்ஜெட் போடலாம். ஆக்ட் ஆப் காட் என்று பழி சொல்லாதபடி கணக்கு வழக்குகளை சுத்தமாக கணக்கு போட்டு காட்டுகிறது இந்த ஆப்.
பிளே ஸ்டோர்
கிராமர்லி ஆப்
இலக்கணத்திற்கான உதவியாளர். நீங்கள் எழுதும் வார்த்தைகள் ஆங்கிலத்தில் சரியானபடி உள்ளதா என கண்டுபிடித்து பாலீஷ் போட்டு நம் மாண்பைக் காக்கிறது. நீங்கள் செய்யும் அசைன்மெண்டுகளில் உள்ள பிழைகளைக் கண்டுபிடித்து சொல்லுகிறது.
பிளே ஸ்டோர்
ஆன்டி சோசியல்
போன் அடிக்ஷன்
நீங்கள் செய்யும் வேலைகளைக் கண்காணித்து உங்களை எச்சரிக்கிறது. இதனால் டெட்லைன் தவறாமல் உங்கள் பணிகளை கவனிக்க முடியும். சமூக வலைத்தளங்களில் செய்யும் வெட்டிவேலைகளையும் மேப் போட்டு தேவையா என்று கேட்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக