ஆன்லைனில் உள்ள நடிப்பு பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றேன்! - இந்தி திரைப்பட நடிகர் ராஜ்குமார் ராவ்
ராஜ்குமார் ராவ் |
சிறு நகரத்தை பையனாகவே நான் பத்துக்கு ஆறு படங்களில் நடித்து பெண்களை காதலித்தாலும் அவை கதை அடிப்படையில் வேறுபட்டவை. இந்தியாவில் இதுபோல ஏராளமான கதைகள் உண்டு. பெருநகரம், கிராமம், சிறுநகரம் என எங்கு கதைகள் நடந்தாலும் எனது பாத்திரம் சுவாரசியமாக இருக்கிறதா என்பதையே நான் பார்க்கிறேன்.
உங்கள் நடிப்பை செட்டில் மேம்படுத்துவீர்களா?
நிச்சயமாக. நான் நடிக்கும் இயக்குநர்களும் அதற்கான இடத்தைக் கொடுக்கிறார்கள். நடிக்கும்போது வேறு சில விஷயங்களை சேர்க்கவேண்டும் என்று தோன்றினால் நான் இயக்குநரிடம் சொல்லி அதனை சேர்த்துக்கொள்வேன். இதுபோன்ற ஐடியாக்கள் தீப்பொறி போல தோன்றும்.
பொதுமுடக்க காலத்தில் என்ன செய்தீர்கள்?
நான் நிறைய நூல்களைப் படித்தேன். ஓடிடி தொடர்களைப் பார்த்தேன். திரைப்படங்களை பார்த்தேன். அதுபோலவே நடிப்பு பயிற்சிக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றேன். நான் தொலைக்காட்சி, சினிமா இன்ஸ்டிடியூட்டில் படித்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே என்னை நானே மேம்படுத்திக்கொள்ளவேண்டிய தேவை இருந்தது.
படங்களை நடிப்பதற்கான திட்டம் என்று ஏதாவது உள்ளதா?
என்னிடம் ஐந்தாண்டு திட்டம் என்று ஏதுமில்லை. அப்போது நடிக்கும் படத்தில் கவனம் செலுத்தி நடிப்பேன் அவ்வளவுதான். 2021ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. நடிக்க ஒப்புக்கொண்ட சில படங்கள் உள்ளன. அவற்றில் நடித்து வருகிறேன்.
படங்களுக்கான கதை எழுதி வருகிறீர்கள் என்று கேள்விப்பட்டோம்.
என்னிடம் சில கதைகள் தோன்றின. அவற்றை எழுதி வைத்துள்ளேன். திரைக்கதை என்றால் சில பக்கங்கள்தான் எழுதியுள்ளேன். இந்தவேலைக்கு அதிக பொறுமையும் நேரமும் தேவைப்படுகிறது. விரைவில் அதனை மெல்ல செய்துமுடிப்பேன் என்று நம்புகிறேன். இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை என்பதை நான் உணர்ந்துள்ளேன்.
லிவ் மின்ட்
உதிதா ஜூன்ஜூன்வாலா
கருத்துகள்
கருத்துரையிடுக