சர்ச்சை பிளஸ் சாகசம் = மாரடோனா!

 

 

 

 

கால்பந்து வீரர் மாரடோனா காலமானார் - என்ன நடந்தது? - BBC ...

 

 

 

தங்கச் சிறுவன் மாரடோனா!


அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர் டியாகோ மாரடோனா 60 வயதில் மாரடைப்பால் காலமானார். 1986ஆம் ஆண்டு அர்ஜென்டினாவுக்கு உலகப்கோப்பை பெற்றுத்தந்த வீரர் என மாரடோனா புகழப்படுகிறார். இப்போட்டியில் காலிறுதிச்சுற்றில் இங்கிலாந்து அணியை வீழ்த்திய ஹேண்ட் ஆப் காட் கோல் முறை அனைத்து ஊடகங்களிலும் புகழப்பட்டு, நூற்றாண்டிற்கான கோல் என வரலாற்றில் இடம்பிடித்தது. இதுதொடர்பாக உருவான ஆவணப்படத்தில் அந்த கோல், ஃபாக்லாந்து போரில் இங்கிலாந்து பெற்ற வெற்றிக்கான பழிவாங்கல் என்று குறிப்பிட்டார் மாரடோனா.


கால்பந்து மைதானத்திலும், நிஜ வாழ்க்கையிலும் கலககாரராக மாரடோனா இருந்தார். மாஃபியா குழுக்களோடு தொடர்பு, பெண்களிடம் அதீத ஈர்ப்பு, கோகைன், மதுபானம் ஆகியவற்றின் மீதான பிரியம் எப்போதும் ஊடக வெளிச்சம் இவர்மீது படும்படியாகவே வாழ்ந்தார். மாரடோனாவுக்கு நான்கு மனைவிகள் மூலம் ஐந்து பிள்ளைகள் உள்ளனர்.


ப்யூனோ ஏர்ஸின் வெளிப்புறத்தில் வில்லா டேவடோ என்ற இடத்தில் மாரடோனா வளர்ந்தார். வறுமையான சூழலில் மூன்று வயதில் கால்பந்தை பரிசாக பெற்றார். கால்பந்து விளையாட்டின் மீதான ஆர்வம் காரணமாக, பத்து வயதில் இளம் வீரர்களின் கிளப்பான Los Cebollitas இல் தேர்வானார். அந்த அணியில் சேர்ந்து விறுவிறுப்பாக விளையாடியதால் தங்கச்சிறுவன்('El Pibe de Oro' ) என்ற பட்டப்பெயர் கிடைத்தது. 1976ஆம் ஆண்டு அக்.20இல் அர்ஜென்டினாவில் ஜூனியர் அணிகள் சார்பாக முதன்முறையாக களம் கண்டார். அப்போது அவருக்கு 15 வயது. பதினாறாவது பிறந்தநாளுக்கு முன்னதாகவே சீனியர்கள் அணியில் சேர்ந்து தொழில்முறையில் விளையாடத் தொடங்கினார். பின்னர், போகோ ஜூனியர், பார்சிலோனா, நெபோலி என 491 முறை தொழில்முறை ஆட்டங்களில் சாதித்தார். இதில் 91 முறை தேசிய அணிகளில் விளையாடியுள்ளார் மாரடோனா. 1979ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் முதல் சர்வதேச கோலை அடித்தார்.


1980ஆம் ஆண்டின் மத்தியில் போதைப்பொருட்களைப் பயன்படுத்த தொடங்கினார். அப்போது நெபோலி அணிக்காக விளையாடியவர், ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் (UFEA) அந்த அணி முதன்முறை வெல்ல காரணமாக இருந்தார். இதனால் பிரபல ஐகான் என்ற நிலையிலிருந்த மாரடனோவை கடவுளாக ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கினர்.


1991ஆம் ஆண்டில் கோகைன் பயன்பாடு, விநியோகம் ஆகிய சர்ச்சையில் மாரடோனா சிக்கினார். பரிசோதனையில் போதைப்பொருட்கள் பயன்பாடு உறுதியாக, கால்பந்து விளையாட 15 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது. 1994ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் உற்சாகமாக பங்கேற்றார். ஆனால் தடை செய்யப்பட்ட ஐந்து மருந்துப்பொருட்களை பயன்படுத்தியதால் போட்டியிலிருந்து விலக்கப்பட்டார். 1998ஆம் ஆண்டுக்குப் பிறகு தொழில்முறை கால்பந்து போட்டிக்கு விடைகொடுத்தார். பின்னர், மாரடோனா நிருபர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதற்காக 2 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். அதற்குப்பிறகு உடல் எடை அதிகரிப்பு, அதைக் குறைக்கும் சிகிச்சை, மஞ்சள் காமாலை, குடலிறக்க அறுவை சிகிச்சை என நோய்களால் கடுமையாக அவதிப்பட்டு இப்போது அமைதியில் உறைந்திருக்கார் மாரடோனா.


15 ஆண்டுகளுக்கு முன்னர் இவரை நேர்காணல் செய்த பத்திரிகையாளர், உங்கள் கல்லறையில் என்ன வாசகத்தை பொறிக்கவேண்டும் என்று கேட்டார். ‘’’கால்பந்துதான் எனக்கு மகிழ்ச்சியையும் சுதந்திரத்தையும் கொடுத்தது. என் கையால் நான் வானத்தை தொடுவது போல உணர்ந்தேன். கால்பந்துக்கு நன்றி என்ற வாசகத்தை கல்லறையில் பொறிக்க விரும்புகிறேன்’’ என்றார் மாரடோனா.


https://www.dailymail.co.uk/sport/football/article-8986821/Diego-Maradona-died-suffering-cardiac-arrest-according-reports.html




கருத்துகள்