தன்னைதானே மம்மியாக செய்துகொள்ள முடியுமா? பதில் சொல்லுங்க ப்ரோ? வின்சென்ட் காபோ
பதில் சொல்லுங்க ப்ரோ?
வின்சென்ட் காபோ
ஆக்டோபஸ் ஆபத்தானவையா?
ஆக்டோபஸ்கள் சிறியதாக இருந்தால் அதில் விஷம் கூடுதல் நச்சுத்தன்மையுடன் இருக்கும். பெரும்பாலும் தான் உணவாக கொள்ளும் இரை மீது விஷத்தை பாய்ச்சுகிறது. இதனால் இரை செயலிழந்து போவதோடு அதனை எளிதாக சாப்பிடும்படி மென்மையாகவும் மாறுகிறது. பத்து சென்டிமீட்டர் நீளமுள்ள நீள வளைய ஆக்டோபஸால் மனிதனைக் கொல்லவும் முடியும்.
ஆக்டோபஸிற்கு அதன் கரங்களை விட வில்லன்கள் வாழ்க்கையில் உண்டு. எனவே நிறம் மாற்றி த் தப்பும் குரோமாடோபோர்ஸ் அம்சங்களை கூட வைத்திருக்கிறது. ஆக்டோபஸ் இனத்திற்கு பெரும்பாலும் தோலுக்கு கீழே அதன் டெக்ஷரை மாற்றி தப்பிக்கும் தொழில்நுட்பம் உள்ளது. பிற உயிரினங்களைப் போல தன்னை மாற்றிக்கொண்டு தப்பிக்கும் டெக்னிக்குகளையும் இந்த உயிரினம் கையாளுகிறது. இதுவும் வேலைக்குஆகாதபோது, மெலனின் நிறத்தை நீரில் பரப்பிவிட்டு எஸ்கேப்பாகிவிடும். இதனால் இரையை வாசனை பிடித்து வரும் சுறாக்கள் கூட குழம்பிப் போய்விடும்.
கோகோ பீன்ஸ்கள் எங்கெங்கு விளைகின்றன?
கானா, நைஜீரியா, கேமரூன், இந்தோனேஷியா, பிரேசில், ஐவரிகோஸ்ட் ஆகிய பகுதிகளில் கோகோ பீன்ஸ்கள் அதிகளவு விளைகின்றன. 1830ஆம் ஆண்டு ஜான் கேட்பரி சிறியளவிலான சாக்லெட் பேக்டரியைத் தொடங்கினார். இது தொடக்கத்தில் வெற்றிகரமாக போகவில்லை. இவரது மகன்களில் ஒருவரான ஜார்ஜ் கேட்பரி வந்தபிறகுதான் தொழில் சூடு பிடித்து வேகம் தொட்டது. போர்ன்வில்லே என்ற பகுதியில் தொழிற்சாலையை தொடங்கினார். அதேபெயரில் சாக்லெட்டுகளை தயாரித்து சாதனை படைத்தார்.
நம்மை நாமே மம்மியாக்கிக்கொள்ள முடியுமா?
விபரீதமான சிந்தனை. இதற்கும் வரலாற்றில் ஆதாரங்கள் உண்டு. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த துறவிகளின் குழு ஒன்று உள்ளது. இதன் பெயர் சோகுசின்புட்சு. இவர்கள் விதைகள், பருப்புகளை மட்டுமே உணவாக பல்லாண்டுகள் எடுத்துக்கொள்கிறார்கள். பின்னர் யுரிசி எனும் மரத்தின் சாற்றை குடித்து வருகிறார்கள். இதனைக் குடிப்பவர்களுக்கு வாந்தி வரும். இதனால் சாப்பிட்ட அனைத்தும் வெளியேறுவதால், உடல் எடை குறையும். மெல்ல சவக்குழியில் படுத்து நாட்பட காத்திருந்து இறக்கிறார்கள். இதுதான் தானாகவே தன்னை ம ம்மியாக்கிக்கொள்ளும் வழிமுறை.
கருத்துகள்
கருத்துரையிடுக