பெமினா பெண் சாதனையாளர்கள் ! - இந்தியாவின் மருத்துவக் கொள்கைகளை மாற்றியமைத்த சாதனைப் பெண்மணி
பெமினா
பெண் சாதனையாளர்கள்
சுதா மூர்த்தி
இதுவரை 40 நூல்களை எழுதியுள்ளார். ஆங்கிலம், கன்னடம் ஆகிய மொழிகளில் குறிப்பிடத்தக்க நூல்களை எழுதி பங்களித்துள்ளார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மூர்த்தி கிளாசிக்கல் நூலகம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். பல்வேறு சமூக பிரச்னைகளைப் பற்றி எழுதி வருவதோடு, நிதியும் அளித்து வருகிறார். இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார்.
இன்போசிஸ் பவுண்டேஷனின் தலைவர். பொறியியல் மாணவர்களுக்கான ஆசிரியர். டெல்கோ நிறுவனத்தில் முதல் பொறியியலாளர் சுதா மூர்த்திதான். இதைக்கூட ஏன் எப்போது ஆண்களே பொறியியலாளர்கள் உங்கள் நிறுவனத்தில் இருக்கவேண்டுமா என்று கேள்வி கேட்டுத்தான் பெற்றார். பெங்களூருவில் உள்ள பள்ளிகளில் பரவலாக கணினிகளை கொண்டுபோய் சேர்த்த பெருமை சுதா மூர்த்திக்கு உண்டு.
ஜியா மோடி
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வழக்குரைஞர்.
டாடா குழுமம், ஆதித்ய பிர்லா குழுமம், ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பல்வேறு இணைத்தல், பிரித்தல் விவகாரங்களை கையாண்டு வெற்றி கண்டவர். இவர் அஇசட்பி அண்ட் பார்ட்னர்ஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கி நடத்தி வருகிறார். இந்தியாவின் செல்வாக்கு பெற்ற பெண்களின் பட்டியல் ஒன்றை உருவாக்கினால் அதில் ஜியாவுக்கு முக்கியமான இடம் உண்டு.
சானியா மிர்சா
டென்னிஸ் விளையாட்டு வீரர்
பெண்கள் டென்னிஸ் அசோசியேஷன் அமைப்பின் நெ. 1 டென்னிஸ் விளையாட்டு வீரர், சானியா மிர்சாதான். இணையத்தில் தேடப்பட்டு விளையாட்டையும் மீறி பிரபலமான வீராங்கனை சானியா மிர்சா. முன்னாள் இரட்டையர் பிரிவில் நெ. 1 வீரர். ஆறு கிராண்ட்ஸ்லாம் விருதுகளை வென்றுள்ளார். அர்ஜூனா விருது வென்றுள்ளவர், உடை சார்ந்த பிரச்னைகளையும் சமாளித்து பத்து லட்சத்திற்கும் அதிகமாக சம்பாதித்தார்.
மருத்துவர் ஸ்வாதி பிரமல்
1982ஆம் ஆண்டு தொடங்கி போலியோ பாதிக்கப்பட்ட பகுதிகள், பல்வேறு நோய்களை தனது பிரமள் பவுண்டேஷன் மூலம் தீர்த்து வைத்து பெருமைக்குரிய மும்பை பெண்மணி. இதன் காரணமாக பல்வேறு பொது நிறுவனங்களின் போர்டுகளில் இடம்பிடித்தார். இவரது மருத்துவப்பணிகள் காரணமாக அரசின் சுகாதார கொள்கைகள் மாற்றம் பெற்றன. 2010ஆம் ஆண்டு அசோசெம் அமைப்பின் தலைவராக பொறுப்பேற்று சாதனை படைத்தார். அதன் 90 ஆண்டு வரலாற்றில் பெண் தலைவராக இடம்பெற்றது கிடையாது.
அறிவியல், வணிக கௌன்சில்களில் இடம்பெற்று பிரதமருக்கு துறைசார்ந்த பல்வேறு பரிந்துரைகள் வழங்கியுள்ளார் ஸ்வாதி. அனைவரும் ஒருங்கிணைந்தால்தான் சாதனை படைக்க முடியும் என்பவர் பல்வேறு கண்டுபிடிப்புகளை தனது நிறுவனத்தில் உருவாக்கி வருகிறார். பிறருக்கு ஊக்கம் தந்து வருகிறார்.
கருத்துகள்
கருத்துரையிடுக