ஓடிடி பிளாட்பாரங்களுக்கான தணிக்கை தடை பாதிப்பை ஏற்படுத்துமா? டேட்டா கார்னர்

 

 

 

 

 

Top 10 OTT Platforms in India

 

 

 

 

நவம்பர் 9 அன்று, இணையத்தில் வெளியாகும் படங்கள், பாடல்கள், பேச்சு உள்ளிட்ட அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனை தகவல்தொடர்பு மற்றும் ஒளிபரப்புத்துறை கட்டுப்படுத்தும். இதன் கீழ் இனி அனைத்து ஓடிடி சேவை வழங்கும் நிறுவனங்களும், சமூக வலைத்தளங்கள், இணையதளங்கள் வரும்.


இந்த நிறுவனங்கள் இருக்கும் வெளிநாட்டு முதலீடுகளுக்கும் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வகையில் 26 சதவீதம் வெளிநாட்டு முதலீடுகள் மட்டுமே இவற்றில் இருக்கும். மேற்கண்ட முதலீட்டிற்கு மேல் உள்ள செய்தி நிறுவனங்ளள் இதுபற்றிய விவரங்களை மத்திய அரசுக்கு வழங்கவேண்டும். இதில் நிறுவனத்தின் இயக்குநர், தலைவர், உறுப்பினர்கள் என பல்வேறு விவரங்கள் இருக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அக்டோபர் 15, 2021ஆம் ஆண்டிற்குள் வெளிநாட்டு முதலீடுகள் 26 சதவீதமாக்கப்படவேண்டும் என்ற மத்திய அரசு காலவரம்பு நிர்ணயித்துள்ளது.


இதுபற்றி டிஜிபப் நிறுவனம், மத்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து ஊடகங்களை கட்டுப்படுத்த நினைக்கிறது. அரசின் இதுபோன்ற கட்டுப்பாடுகள், விதிகளால் வேலையிழப்பு அதிகமாகும் வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளது. அரசு டிஜிட்டல் ஊடகங்களை வேறுமாதிரி பார்க்கிறது. அச்சு, டிவி நிறுவனங்கள் அரசில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் டிஜிட்டல் ஊடகங்கள் அப்படி இயங்குவதில்லை. எனவே, அவற்றுக்கு கட்டுப்பாடுகள் தேவை என்று மத்திய அரசு நினைக்கிறது. டிஜிலல் ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கான சட்டம் 2019இல் தயாராகிவிட்டது. இதுபோன்ற சட்டங்கள் மூலம் போலிச்செய்தியை எளிதாக தடுக்க முடியும் என்ற அரசு நினைக்கிறது.


ராய்ட்டர்ஸ் இன்ஸ்டிடியூட் இதுபற்றி செய்த ஆய்வில், மக்கள் 57 சதவீதம்பேர் டிஜிட்ட்ல ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் எது உண்மை, பொய் என்று தெரியாமல் தடுமாறுவதாக தெரியவந்துள்ளது.


2024ஆம் ஆண்டு ஓடிடி வருமானம் 21,598 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


இந்தியாவில் கடந்த ஆண்டு தொடங்கி ஓடிடி தளங்களின் வளர்ச்சி வேகம் 300 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடுகிறார்கள். ஐந்து ஆண்டுகளில் இதன் மதிப்பு 708 மில்லியனாகும்.


இந்தியாவிலுள்ள ஓடிடி மார்க்கெட்டில் இதற்காக சந்தாதார ர்களின் வளர்ச்சி 93 சதவீதமாக உள்ளது.


2019ஆம் ஆண்டில் 21 மில்லியன் ஓடிடி வீடியோக்களுக்கான சந்தாக்களை பத்து மில்லியன் மக்கள் செலுத்தியுள்ளனர்.


இந்தியாவில் 40க்கும் மேற்பட்ட ஓடிடி நிறுவனங்கள் உள்ளன.


2019ஆம் ஆண்டு தொடங்கிய ஓடிடி தளங்கள் இதுவரை 1600 மணிநேரங்களுக்கான வீடியோக்களை உருவாக்கியுள்ளன.


பத்திரிக்கையில் 26 சதவீதமும், டிஜிட்டல் ஊடகத்தில் 26 சதவீதமும், டிவியில் 49 சதவீதமும் அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது.


282 மில்லியன் பயனர்கள் ஜூன் 2019இல் செய்திகளை தேடியுள்ளனர். மொத்தம் 90 மில்லியன் நிமிடங்கள் இப்படி செலவழித்துள்ளனர். 2018இல் 250 பயனர்கள் 20 மில்லியன் நிமிடங்களை செலவழித்திருந்தனர்.


indiatoday


கருத்துகள்