கோவிட் -19, வெறுப்பு பேச்சு, இனவெறியை ஜவாகர்லால் நேரு சமாளித்திருப்பாரா? 132ஆவது நேரு பிறந்த தினம் (14.11.2020)

 

The truth about Nehru and new India's tryst with fake ... 
 

நேருவின் 132ஆவது பிறந்ததினம், இந்த ஆண்டு கடந்திருக்கிறோம். நவீன சிற்பிகளில் ஒருவரான நேருவைப் போல நடப்பு ஆண்டில் தூற்றப்பட்டவர் யாரும் கிடையாது. இந்த நேரத்தில் அவரின் செயல்பாடுகளை நினைவுகூர்வோம்.


நேரு 1964ஆம் ஆண்டு மே மாதம் மறைந்தார். அவரது பல்வேறு நடவடிக்கைகளை இன்று கடுமையாக விமர்சிக்கும் புருஷோத்தம் அகர்வால் அன்று சிறுபையனாக இருந்தவர். நேருவின் பல்வேறு செயல்பாடுகளை நான் கடுமையாக விமர்சித்து இருக்கிறேன். ஆனால் இந்திய நாட்டிற்காக தன்னையே வைத்துக்கொண்ட அந்த மனிதனின் நாட்டுப்பற்றை நான் மறக்கவே முடியாத. சீனா செய்த நம்பிக்கை துரோகம் நேருவின் இழப்பிற்கு காரணமாகியது. என்று பேசுகிறார்.


அகர்வால் ஹூ இஸ் பாரத்மாதா என்று நூலை எழுதியுள்ளார். இதில் நேரு, வல்லபாய் படேல், வாஜ்பாய் ஆகியோரைப் பற்றிய தகவல்களை எழுதியுள்ளார். உண்மையில் சிறந்த தலைவராக செயல்பட்ட மனிதரை இழந்துள்ளோம். திறந்த புத்தகமாக இருந்து செயல்பட்டவரும் நானும் பல்வேறு விஷயங்களை கலந்தாலோசித்து இருக்கிறோம். நேர்மையாக செயல்பட்ட தலைவர் அவர் என வல்லபாய் படேல் நேருவின் 60ஆவது பிறந்தநாளில் ஆற்றிய உரையை கேட்பவர்களுக்கு கண்ணில் நீரை வரவழைக்கும்.


நேரு சடாரென கோபமுறும் தன்மை கொண்டவர். அவர் பீகாரில் ஆற்றிய சொற்பொழிவில் மக்கள் கூட்டத்தை எப்படி அமைதிபடுத்தினார் என்பதை விரிவாக விளக்கியுள்ளார். நேரு, பன்முகத்தன்மை வாய்ந்த இந்தியாவைப் புரிந்துகொண்ட ஜனநாயகத்தன்மையை தழைக்கச்செய்த தலைவர் என்பதை இச்சம்பவம் பிறருக்கு எடுத்துக்காட்டும்படி அமைந்துள்ளது. இந்தியக்கலாசாரம் மற்றும் வரலாறு மீது ஆர்வம் கொண்ட மதச்சார்பற்ற தலைவராகவே அவர் இறுதிவரை வாழ்ந்தார். ராமச்சந்திர குஹாவும் கூட அவரின் ஜனநாயகத்தன்மையை தனது காந்திக்குப் பிறகு இந்தியா என்ற நூலில் எழுதியுள்ளார்.. இந்த நூலன்றியும் பல்வேறு கட்டுரைகளில் நேருவைப் பற்றிய எழுதியுள்ள எழுத்தாளர் இவர்.


ஒருமுறை நேரு பேச சென்ற கூட்டத்தில் பாரத் மாதா கீ ஜே என்ற கோஷம் எழுந்தது. அவர் பேசும் இடங்களில் இப்படி கோஷங்கள் எழுவது வழக்கம். அதுபோன்ற இடங்களில் சிலசமயம் அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்பார். அப்படி ஒருமுறை கேட்டபோது ஜாட் விவசாயி ஒருவர் எழுந்து, எங்களைச்சுற்றியுள்ள நிலத்தைத்தான் சொன்னோ்ம என்று பதில் அளித்தார். அதற்கு நேரு, பல கோடி இந்திய மக்கள்தான் பாரத மாதா. அவளுக்கு வெற்றி என்பது அம்மக்களின் வாழ்க்கை மேம்படுவதில்தான் இருக்கிறது என்று கூறினார்.


நேரு தன்னை மன்னரைப் போல கருதிக்கொண்டவரல்ல. மக்கள் பணியாளர் என்பதை மனதில் இருத்திக்கொண்டவர். அதனால், அவர் தான் சரியாக செயல்படாதபோத வாக்களித்த மக்கள் என் காதுகளைப் பிடித்து திருகி, நான் வகிக்கும் பதவியிலிருந்து என்னை விலக்கக் கொள்ளவேண்டும் என்று துணிச்சலுடன் கூறினார். வெறுப்பு அரசியல் பரவும் வேளையில் அதனை நேரு துணிச்சலாக சமாளிப்பார் என்றே யூகிக்கமுடியும்.


கோவிட் -19 நோய்த்தொற்று பரவும் வேளையில் அவர் பிரதமராக இருந்திருந்தால், அறிவியலாளர்களுடன் கலந்தாலோசித்து பசுவின் சிறுநீரை மருந்தாக பயன்படுத்துவதை விட சிறப்பான யோசனைகளை முன்வைத்து பேசியிருப்பார். நேரு, கேம்பிரிட்ஜ் பல்கலையில் இயற்கை அறியவியலில் பட்டம் பெற்றவர் என்பதால் இதெல்லாம் சாத்தியம்தான்.


ஜெர்மனியின் ஏஞ்சலா மேர்கல், தைவானின் முன்னாள் துணை அதிபரும், நோய்தொற்று வல்லுநருமான சென் சியான் ஜின் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு பிற நாடுகளை பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தியுள்ளனர். இதெல்லாம் யாரும் செய்யமுடியாதது அல்ல.


இந்தியா பெருந்தொற்றை ஏன் சமாளிக்க முடியவில்லை என்றால் உள்நாட்டு உற்பத்தியில் 1.5 சதவீத நிதியை மட்டுமே ஒதுக்குவது முக்கியமான காரணம். நேரு இப்போது பிரதமராக இருந்தால், மக்களின் கருத்தைக்கேட்டு தொடக்கநிலை சுகாதார திட்டங்களுக்கு அதிக நிதியை ஒதுக்கியிருப்பார் என்கிறார் வரலாற்று ஆய்வாளரான ராமச்சந்திர குஹா. பொருளாதார வல்லுநர்கள் ஜீன் ட்ரெஸ், அமர்த்தியாசென் ஆகியோர், ஐந்தாண்டுத் திட்டங்களை கடுமையாக விமர்சித்து வந்தவர்கள். இவர்களும் கூட அரசு கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்கு அதிக நிதியை ஒதுக்காதது குறித்து கேள்வியை எழுப்பியுள்ளனர்.


நேரு காலத்தில் பாதுகாப்பு விஷயங்களுக்காக செலவிடுவது மிகவும் குறைவாகவே இருந்துள்ளது. காரணம் அப்போது இருந்த நாட்டின் நிதிநிலைமைதான். இதனால் பெரும்பாலான ஆயுதங்களை இந்தியா இங்கிலாந்து நாட்டிடமிருந்து இரண்டாம் உரிமையாளராவவே வாங்கிக்கொண்டிருந்து.. இதுவும் சீனாவை இந்தியா எதிர்கொண்டு தோற்றுப்போக முக்கியமான காரணம்.


இந்தியாவையும், சீனாவையும் சேரும் சகோதரத்துவம் கொண்ட, கலாசார, வியாபார நேசம் கொண்ட நாடுகளாக பார்த்தார். அதுவே வெளியுறவு கொள்கையிலும் பிரதிபலித்தது. இந்த வகையில் 1962ஆம் ஆண்டு போர் நடைபெற்றது. இப்போது முப்படைகளின் தலைவர் ராவத், சீனாவுடனான போர் என்பது தொடர்ச்சியாக நடைபெறும் படி இருக்கும் என்று கூறிய

இருக்கிறார். சீனா, நேரு காலத்தில் இருந்ததை விட பெருமளவு முன்னேறியிருக்கிறது. அதன் நிலப்பரப்பு பெரிதாகியுள்ளது. அன்று ராணுவ வீரர்களுக்கு ஸ்வெட்டர்களை மக்கள் தைத்துக் கொடுத்தனர். தங்கத்தைக் கூட கொடுத்தனர். இன்று டிவிக்கள் இந்தி திரைப்பட உலகத்தைப் பற்றி சொல்லும் கிசுகிசுக்கள், செய்திகளிடம் மயங்கி கிடக்கின்றனர். சீனா அன்றை விட இன்று தன் நிலப்பரப்பை அதிகரித்துக்கொள்ள நிலம், நீர் என அனைத்து இடங்களிலும் ஆக்ரோஷம் காட்டி வருகிறது. இந்தியாவில் இந்தியாவில் தயாரிப்போம் என்ற பெயரில் விற்றுக்கொண்டிருப்பதை அனைத்துமே சீன செல்போன் நிறுவனங்களின் செல்போன்கள்தான்.


வாக்களிக்கும் உரிமை பற்றித்தான் முதல் தேர்தலில் நேரு பேசினார். காங்கிரசுக்கு வாக்களியுங்கள் என்று கூட அவர் சொல்லவில்லை. அதேவேளையில் தேர்தல் வெற்றி என்பதை விட நாட்டை கட்டுமானம் செய்வதே முக்கியம் என நேரு நினைத்தார். அதை இன்று ஒப்பீடு செய்தால், அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்களை பிரபலப்படுத்த தனி நிறுவனத்தை நம்பியுள்ளனர். சமூக வலைத்தளங்களிலும் அதற்கேற்ப பதிவுகளை உருவாக்கி வருகி்ன்றனர். நேரு நாட்டின் மாநில முதல்வர்களுக்கு எழுதிய கடிதங்களை அவர் டிவிட்டரில் எழுதி வெளியிட்டிருப்பார். நேருவை சிலர் கூறுவதைப் போல, அவரைப் போன்றவர்கள் மனிதர்கள் என்றே நம்பமுடியாது என்பது உண்மையாகியிருக்கும்.


லிவ் மின்ட்


ராகுல் ஜேக்கப்.



கருத்துகள்