கண்டுபிடிப்பாளரின் வாழ்க்கையை மாற்றும் கிறிஸ்மஸ்! - ஜிங்கிள் அண்ட் ஜாங்கிள்
ஜிங்கிள் அண்ட் ஜாங்கிள் 2020
Directed by | David E. Talbert |
---|---|
Produced by |
|
Written by | David E. Talbert |
Starring | |
Music by | John Debney |
Cinematography | Remi Adefarasin |
படம் கிறிஸ்மஸ் சிறப்பைச் சொல்லும் நன்னெறி சார்ந்த படம்.
படத்தில் வரும் ஜெரோனிகஸ் என்ற கண்டுபிடிப்பாளர், முக்கியமான பாத்திரம். இவரின் கண்டுபிடிப்புகள்தான் அங்குள்ள நகரவாசிகளுக்கு முக்கியமான பொழுதுபோக்கு விஷயமாக உள்ளது. அங்கு வேலை செய்யும் கஸ்டாஃப்சன், தானும் கண்டுபிடிப்பாளராக முயல்கிறார். ஆனால் அவருக்கு அதில் உள்ள பிரச்னையை புரிந்துகொள்வது கடினமாக உள்ளது. அவருக்கு ஜெரோனிகஸ் புகழ்பெறுவது பொறாமையைத் தூண்டுகிறது. அப்போது பார்த்து ஜெரோனிகஸ் கண்டுபிடிக்கும் பேசும் எந்திர மனிதன் இந்த பொறாமையை சாதுரியமாக பயன்படுத்திக்கொள்ள கஸ்டாப்சனை தூண்டுகிறான்.
இதனால் ஜெரோனிகஸ் பல்லாண்டுகளை உழைத்து கண்டுபிடித்த எந்திர வடிவமைப்பு களை கொண்ட நூலை கஸ்டாப்சன் திருடிக்கொண்டு மாயமாகிறான். ஜெரோனிகஸ்சுக்கு பொருட்களை உருவாக்கத் தெரியுமே தவிர அதனை தன்னுடையது என்று சொல்லிக்கொள்ளவேண்டும் என தெரியாது. எனவே கஸ்டாப்சன் திருடியது தன்னுடைய பொருட்கள் என அவரால் நிரூபிக்க முடியாமல் போகிறது. மேலும் அந்த நம்பிக்கைத் துரோகம் அவரால் ஜீரணிக்க முடியாமல் போக தொழில் வாழ்க்கையில் சரிவைச் சந்திக்கிறார். மறுபுறம் கஸ்டாப்சன் ஏணியில் மேலேறி உயரத்திற்கு செல்கிறார்.
ஜெரோனிகஸின் கடை நஷ்டமாகிறது. கடன் தொல்லையால் அவரது குடும்பம் அவதியுறுகிறது. இதனால் ஜெரோனிகஸின் மனைவி நோயுற்று இறக்கிறாள். அவர் தனது மகளை சரியாக வளர்க்க முடியாமல் வேறு இடத்திற்கு அவளை அனுப்பி வைக்கிறார். அவளை நிலைமை சரியானபிறகு திரும்ப அழைப்பதுதான் எண்ணம். ஆனால் 30 ஆண்டுகள் துயரத்தில் மூழ்கியவருக்கு ஒரே ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. ்புதிய விளையாட்டுப் பொருளை தயாரிக்கவேண்டும். வங்கி அவரது கடன்களை தள்ளுபடி செய்ய அதுபோதும். ஆனால் அப்படி ஒன்றை அவரால் நம்பிக்கை இழந்த நிலையில் தயாரிக்க முடிந்ததா? அவரைப் பார்க்க வந்த பேத்தி ஜர்னி அதற்கு எப்படி உதவுகிறாள்? கஸ்டாப்சன் நிலைமை என்ன ஆனது என்பதற்கான பதில்களை படத்தில் சொல்லுகிறார்கள்.
குழந்தைகளுக்கு பாட்டி கதை சொல்லுகிறார். அதன் வடிவில் இசைப்படமாக படம் உருவாகிறது. படத்தில் கிராபிக்ஸ் விஷயங்கள் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளன. படம் மனித வாழ்க்கையில் ஒருவருக்கு கிடைக்கும் காதல், துரோகம், நம்பிக்கை, விரக்தி, இழப்பு, கொண்டாட்டம் என பல்வேறு விஷயங்களைப் பேசுகிறது.
நம்பிக்கைதான் வாழ்க்கை
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக