கொரானோ நோய்த்தொற்று உருவாக்கிய சொற்கள்!

 

 

கொரானோ நோய்த்தொற்று உருவாக்கிய சொற்கள்!



கொரானோ நோய்த்தொற்று நம் வாழ்க்கையை மாற்றியுள்ளதோடு, நாம் தினசரி வாழ்வில் பயன்படுத்தும் புதிய பல்வேறு சொற்களும் உருவாக காரணமாக அமைந்துள்ளது.


பெருந்தொற்று காரணமாக, மக்களது தினசரி வாழ்க்கை என்பது இன்று தொழில்நுட்ப ஆதிக்கம் நிறைந்ததாக மாறியுள்ளது. மேலும், நாம் பயன்படுத்தும் பல்வேறு புதிய சொற்களையும் உருவாக்க காரணமாக அமைந்துள்ளது. Body mullet, maskhole, covideo, domino distance, herd immunity, covidiot, oronageddon ஆகிய புதிய சொற்கள் நடைமுறையில் உருவாகியுள்ளன. மேற்சொன்ன சொற்களை முந்தைய ஆண்டு இதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டால் யாருக்கும் தெரியாது. ஆனால் இந்த ஆண்டு அனைவருக்கும் இந்த சொற்களுக்கான அர்த்தத்தை அறிந்துகொண்டு விட்டார்கள். வார்த்தைகளை புழக்கத்திற்கு கொண்டு வந்ததில் ஃபேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு முக்கிய பங்குண்டு.


நாம் செல்லும் இடங்களில் அதிகம் பயன்படுத்தும் வார்த்தையாக சமூக இடைவெளி என்பதை கூறலாம். பெருந்தொற்று காலத்தில் மளிகைக் கடை முதல் மால்கள் வரை புகழ்பெற்ற வார்த்தை இதுதான். இனக்குழுரீதியான பரவல், எதிர்ப்புமருந்து, தடைசெய்யப்பட்ட பகுதி, ஜூம், கொரானோ பரவல் குறை்வு என ஏராளமான வார்த்தைகள் நாளிதழ்களில், டிவிகளி்ல் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு பரவலாயின. ஏப்ரல்- ஜூலை ஆகிய மாதங்களில் ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் நிறுவனம், மக்களிடையே பயன்பாட்டில் உள்ள 32 பெருந்தொற்று சொற்களை தனது பட்டியலில் சேர்ப்பதாக கூறியுள்ளது.


இப்போது உலகிலுள்ள தொழில்துறைகள், நமது வாழ்க்கை அனைத்துமே பெருந்தொற்றுக்கு முன்னர், பின்னர் என இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனை புதிய எதார்த்தம் (The New Normal) என குறிப்பிடலாம். இந்த சொல் கூட 2004இல் வெளியான The New Normal: Great Opportunities in a Time of Great Risk என்ற நூலில் வெளியானதுதான். தீவிரவாதம், ஊழல்கள், அவுட்சோர்ஸ் வேலைவாய்ப்புகள் ஆகியவற்றைக் குறிப்பிட பத்தாண்டுகளாக நியூ நார்மல் என்ற சொல் பயன்பட்டு வருகிறது. ‘’இதனை எதிர்மறையாக பார்க்கவேண்டியதில்லை. இந்நிலைமைதான் ஏராளமான வாய்ப்புகளை நமக்கு வழங்கியிருக்கிறது’’ என்கிறார் நூலின் எழுத்தாளர் மெக்நாமி.


1811ஆம் ஆண்டு நடைபெற்ற அல்புவேரா போர் மூலம் டைஹார்ட் என்ற சொல் உலகில் பரவலாக புழக்கத்திற்கு வந்தது. வீரர்களை ஊக்குவிக்க கூறும் சொல் இது. இதுபோலவே, வொர்க் ஃப்ரம் ஹோம் என்பது 1995ஆம் ஆண்டு முதலே புழக்கத்தில் உள்ளது.் ஆனால் இன்றுள்ளதைப் போல பரவலாக இல்லை. இத்தகவல்களை ஆக்ஸ்போர்டு அகராதியில் உள்ள கட்டுரை (Social Change and Linguistic Change: The Language of Covid-19) பல்வேறு தகவல்களைத் தருகிறது. ‘’உலகில் நடைபெற்ற போர் மற்றும் பெருந்தொற்று ஆகியவை மொழிக்கு நிறைய புதிய சொ்ற்களை கொடுத்துள்ளது’’ என்கிறார் டில்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மொழி வல்லுநர் பிரனாப் பாகர்தி.


தகவல்

FE











கருத்துகள்

பிரபலமான இடுகைகள்