சினிமா, நாடகம், குறும்படம், ஓடிடி தளம் என எதில் நடித்தாலும் கதைதான் முக்கியம்! -ராதிகா ஆப்தே, நாடக, சினிமா நடிகை
ராதிகா ஆப்தே
நாடக, சினிமா நடிகை
ஓடிடி தளம்தான் உங்களுக்கு பெரிய பிளாட்பாரமாக அமைந்தது. படத்தை விட ஓடிடி பெரியதாக உள்ளதாக நினைக்கிறீர்களா?
சினிமாவிலிருந்து ஓடிடி பக்கள் வெட்கப்ப்டாமல் சென்ற நடிகர்களில் நானும் ஒருத்தி. சேகர்டு கேம்ஸ், ராட் அகேலி ஹை என்ற படங்கள் கொடுத்த பிரபலம் சினிமாவை விட அதிகம் என்பேன். நான் நாடகம், ஓடிடி, படம், குறும்படம் என எதையும் தீர்மானித்து இயங்குவதில்லை. அதிலுள்ள கதைதான் முக்கியம்.
ஓடிடி தளங்கள் நாம் படம் பார்க்கும் முறையை மாற்றியுள்ளதாக நினைக்கிறீர்களா?
பெரிய படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்கும். ஆனால் சிறிய படங்களுக்கு அப்படி கிடைக்க அதிக வாய்ப்புகள் இல்லை. தியேட்டருக்கு சென்று பார்க்குமுடியாத மக்களுக்கு ஓடிடி தளங்கள் உதவுகின்றன. நீங்கள் என்ன பார்க்கிறீர்களோ அதற்கு பணம் கொடுத்தால் போதும். எப்போது படம் பார்க்கவேண்டுமோ அப்போது பார்த்துக்கொள்ளலாம். இதெல்லாம் உங்களுடைய தேவையைச் சார்ந்ததுதான்.
அசாக்தா கலாமன்ச் மூலம் நடத்தப்பட்ட நாடகங்களில் உங்களை பார்த்தோம். நாடக மேடை நடிப்பை இப்போது எப்படி பார்க்கிறீர்கள்.
சினிமாவில் சில விஷயங்கள் மாறும். ஆனால் அடிப்படையில் கதாபாத்திரத்தை எப்படி உள்வாங்குவது என்பதை நான் நாடகத்திலிருந்துதான் கற்றேன்.
அண்மையில் 35ஆவது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறீர்கள்? நீங்கள் தேர்ந்தெடுக்கும் கதைதான் உங்கள் வாழ்க்கையை தீர்மானிப்பதாக நினைக்கிறீர்களா?
கடந்த பத்தாண்டுகளில் நிறைய மாற்றங்களை நான் சந்தித்து வந்துள்ளேன். நான் நான் 25 வயதில் 40 வயதில் இப்படிப்பட்ட படங்களை செய்திருக்கவேண்டும் என்று நினைததில்லை. எதற்கு எதிர்காலத்தை நினைத்து பயப்பட வேண்டும். நம் கைகளிலுள்ள நிகழ்காலம் நழுவிக்கொண்டிருக்கிறது. நான் இப்போது செய்யும் வேலையை ரசித்துச்செய்கிறேன்.
சுகானி சிங்
இந்தியா டுடே
கருத்துகள்
கருத்துரையிடுக