யூத இனத்தைச் சேர்ந்த மூன்று போராட்டக்காரர்கள்! இன ஒழிப்புக்கு எதிர்ப்பு, மரங்களைக் காக்கும் முயற்சி, எல்ஜிபிடியினருக்கான கஃபே!

 

 

 

 

 

D4704DBF-86CC-4613-A6D1-2497FBE9A599.jpg

 

 

 

 

தாலியா வுடின்


இவர் சூழல் மற்றும் சமூக நீதிக்காக போராடி வருகிறார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது இவர் மரத்தில் வசித்து வருகிறார். இங்கிலாந்து அரசு அதிவேக ரயில் சேவைக்காக இருப்புப்பாதை அமைக்கவிருக்கிறார்கள். காலன் வேலி எனும் அந்த இடத்தில் பிற சூழலியலாளர்களுடன் இணைந்து தொன்மையான மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கும் முயற்சியில் தாலியா ஈடுபட்டுள்ளார்.


லண்டனுக்கு வெளியிலுள்ள இந்த இடத்தில் கடந்த ஐந்து மாதங்களாக மரங்கள் வெட்டப்படுவதை தடுத்து வருகிறார்கள். தாலியா வுடனின் பெற்றோர் இருவருமே சூழலியல் போராட்டக்கார ர்கள். இதனால் இளம் வயதில் சூழல் தொடர்பான அக்கறை தாலியாவுக்கு வந்துவிட்டது. சூழலியல் தொடர்பான அக்கறை தனியாக எதையும் கற்பது போல இல்லை. அது என்னுடைய வாழ்வினூடே இருந்து வந்தது. நான்குவயதில் தாலியாவின் தந்தை நுரையீரல் புற்றுநோய்க்கு பலியானார். இத்தனைக்கும் அவர் புகைப்பழக்கம் இல்லாதவர். இதனால் தாலியா காற்று மாசுபாடு பற்றிய கவனம் கொண்டார். இங்கிலாந்தில் மட்டும் 64 ஆயிரம் பேர் காற்று மாசுபாட்டிற்கு பலியாகிறார்கள். இவரது தந்தை கூட மாசுபாடு பற்றிய புள்ளியலாளர்தான். காரணம் தனிப்பட்டது என்றாலும், அதுவே சமூகம் பற்றி அக்கறைக்கு வித்திட்டது.

தாலியாவின் அக்கறை பெற்றோர் காரணமாக மட்டுமல்ல, இவரது கொள்ளுத்தாத்துவும் கூட யூத கம்யூனிஸ்ட். அவர் சைபீரீய சிறையில் இருந்து தப்பி இங்கிலாந்திற்கு வந்திருக்கிறார். இவர் அனைத்து போராட்டங்களிலும் கேமராவும் கையுமாகத்தான் இருக்கிறார். இவர்கள் செய்யும் அனைத்து போராட்டங்களையும் புகைப்படம், வீடியோ வடிவில் ஆவணமாக்குகிறார்கள். பல்வேறு சூழல் பதிவுகளால் சமூக வலைத்தள கணக்கு நிறைந்துள்ளது.


எக்ஸ்டிங்ஷன் ரெபெல்லியன் யூத் எனும் இளைஞர்கள் அமைப்பின் ஊடக ஒருங்கிணைப்பாளராக தாலியா செயல்பட்டுள்ளார். இப்படி 2019இல் பல்வேறு செயல்பாடுகளை செய்திகளாக்கியுள்ளார்.



Welcome to Pink Peacock, Glasgow's queer Yiddish anarchist ...

மோர்கன், ஜோ


இவர்கள் இருவரும் யூதர்கள் என்பதோடு கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் பிங்க் பீகாக் என்ற கஃபே ஒன்றை நடத்தி வருகிறார்கள். இதில் வீகன் வகை உணவுகள் வழங்கப்படுகின்றன. இங்கு ஆல்கஹால் வழங்கப்படுவதில்லை. க்ரவுட் ஃபண்டிங் முறையில் இந்த கஃபேயை தொடங்கி நடத்தி வருகிறார்கள்.


அழிந்துவரும் மொழியாக யித்தீஷ் என்பதை அழியாமல் காப்பாற்ற முயன்று வருகிறார்கள். கிழக்கு ஐரோப்பாவில் ஒருகாலத்தில் பேசப்பட்ட பழமையான மொழி இது. இங்கிலாந்தில் யித்திஷ் மொழியில் செயல்படும் ஒரே கஃபே இதுதான். இது மிக குறைவான ஆதாரங்கள், வளங்கள் கொண்ட மொழி என்கிறார் மோர்கன். நடப்பு உலகிற்கு இந்த மொழியை பாலமாக அமைக்க நினைக்கிறார்கள். இந்த கஃபே எல்ஜிபிடியினருக்கான இடமாகவும் உள்ளது. இப்பிரிவினர் சந்திப்பிதற்கான இடத்திற்கான தேவையை கஃபே நிறைவு செய்கிறது. இங்கு சாப்பிட வருபவர்கள் அனைவருக்கும் கட்டணம் என்பது பொதுவான விதிமுறையாக இல்லை. யாரும் விரும்பினால் பணம் கொடுக்கலாம். ஆனால் இவர்கள் வழங்கும் உணவில் குறையில்லாமல் பார்த்துக்கொள்கிறார்கள். இங்கு திரைப்படம் திரையிடப்படுவது, பல்வேறு திறன்களை பரிமாறிக்கொள்வது, மொழியைக் கற்றுக்கொள்வதற்கான வகுப்பு என பல்வேறு விஷயங்கள் நடக்கும் இடமாக உள்ளது. உணவைப் போலவே இங்கு நடைபெறும் வகுப்புகளுக்கான கட்டணங்களும் ஜீரோதான். பிங்க் பீகாக் போல உங்களால் முடிந்த கட்டணத்தை செலுத்தி உணவை சாப்பிடுவதற்கான உணவகங்கள் நிறைய தொடங்கப்படவேண்டும் என்பதுதான் ஜோ, மோர்கனின் விருப்பம்.


3

ஆண்ட்ரூ

https://i.redd.it/wmr44hbssw951.jpg

இவர் சீனாவில் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகும் உய்குர் முஸ்லீம்களை காக்க லண்டனில் பதாதைகளை ஏந்தி நின்று போராட்டம் செய்து வருகிறார். இவர் யூத இனத்தில் ஹரேடி ஆர்த்தடாக்ஸ் பிரிவைச் சேர்ந்தவர். பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட உய்குர் முஸ்லீம்கள் முகாம்களில் அடைத்து வைக்க்ப்பட்டு உள்ளனர். இவர்களின் குழந்தைகள் அவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர். சீன அதிகாரிகள் இவர்கள் பற்றிய உண்மையை இன்று வரை சொல்ல மறுத்து வருகின்றனர்.


ஆண்ட்ரூ உய்குர் முஸ்லீம்கள் பற்றிய செயற்கைக்கோள் படங்களைப் பார்த்து உடனே பதறியிருக்கிறார். என்னால் வீட்டில் சும்மா உட்கார்ந்து இதனைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்று ஆவேசமாகிறார். 2019ஆம் ஆண்டு சீனாவின் தூதரகத்தின் முன்னே நின்று போராடத் தொடங்கியிருக்கிறார். கிடைக்கும் வார விடுமுறையில் இதனை செய்திருக்கிறார். இப்போது செவ்வாய்க்கிழமை மாலைவேளையில் சிறு குழுக்களாக உய்குர் மக்களை படுகொலை செய்யாதே என பதாகை ஏந்தி போராடி வருகின்றனர். ஆண்ட்ரூ வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாலைவேளையில் பதாகை ஏந்தி போராடி வருகிறார்.


உலகில் நிறைய பிரச்னைகள் உள்ளன ஆனால் ஏன் உய்குர் முஸ்லீம்கள் பிரச்னை மீது கவனம் செலுத்துகிறீர்கள் என்று கேட்டோம். அதற்கு இப்படித்தான் நாஜிக்கள் யூதர்களை தனியாக பிரித்து வைத்து முகாம்களில் அடைத்து கொன்றார்கள். ஆனால் அப்போது அதற்கு உலகம் எந்த பதிலும் சொல்லவில்லை. எதிர்ப்புகள் கிளம்பவில்லை. பெர்லின் ஒலிம்பிக் போட்டியின் ஒரு பகுதிபோல படுகொலைகளை பார்த்தார்கள் என்று அமைதியாக பேச வார்த்தைகள் கூர்மையாகின்றன. சீனாவில் அதுபோல ஏதும் நடந்துவிடக்கூடாது என நினைக்கிறேன் என்கிறார்.


மேற்கண்ட மூன்று நபர்களும் யூத இனத்தைச் சேர்ந்தவர்கள்.

ரீடர்ஸ் டைஜெஸ்ட்



கருத்துகள்