இடுகைகள்

தனுஷ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நம்பிக்கை நாயகர்கள்- கார்த்திக் ஆர்யன், பா ரஞ்சித், தனுஷ், புவன் பாம்

படம்
கார்த்திக் ஆர்யன் எப்போதுமே புதுசுதான்!  கார்த்திக் ஆர்யன் இந்தி நடிகர் கார்த்திக் ஆர்யன், தனது 20 வயதில் முதல் படத்தில் நடித்தார். 2011இல் வெளியான பியார் கா பன்ச்னாமா என்ற படம் அது. அதனை பார்த்தவர்கள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். லவ் ரஞ்சன் இயக்கிய நவீனமான காதல் கதைப்படம் அது.  குவாலியரில் பிறந்த கார்த்திக் ஆர்யன் பிறகுதான் பிரபலமாகத் தொடங்கினார். இத்தனைக்கும் அவருக்கு சினிமா பின்புலம் ஏதும் கிடையாது. பதினெட்டு வயதில் மும்பைக்கு வந்தவர் கார்த்திக்.  எனக்கு எந்த இரண்டு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஒரே வாய்ப்புதான். அதில் என்னை நிரூபிக்க வேண்டியிருந்தது என்பவர் சொல்லியபடியே இரண்டு பன்ச்னாமா பாகங்களில் நடித்தார். பிறகு சோனு கி டிட்டு கி ஸ்வீட்டி என்ற படத்திலும் நடித்து நமது மனதை கவர்ந்தார்.  பிறகு நடித்த லூக்கா சூப்பி, பதி, பத்னி ஆர் வோ ஆகிய படங்கள் மெல்ல ரசிகர்களின் எண்ணிக்கையை கூட்டியது. வெற்றி பெற்றுக்கொண்டிருக்கும் போது கூட புதிய இயக்குநர்களோடு பணியாற்றவே மெனக்கெடுகிறார். வண்டி நன்றாக ஓடும்போது எதற்காக இந்த ரிஸ்க் என பலரும் கார்த்திக்கிடம் கேட்கிறார்கள்தான். ஆனால் அவர் அதைப்பற்றி கவ

ஆணவக்கொலையால் மீளமுடியாத கற்பனையில் சிக்கும் மனைவியை மீட்கும் கணவன்! அட்ரங்கி ரே - ஆனந்த் எல் ராய்

படம்
  அட்ரங்கி ரே - கலாட்டா கல்யாணம் அட்ரங்கி ரே - கலாட்டா கல்யாணம் ஆனந்த் எல் ராய் ஏ.ஆர். ரஹ்மான் டிஸ்னி  கட்டாய கல்யாணம் செய்து வைக்கப்படும் தமிழகத்தைச் சேர்ந்த விசு, தனது மனைவியை மெல்ல விரும்பத் தொடங்குகிறான். ஆனால் அவள் வேறு ஒருவரை விரும்புகிறாள். அதுயார், அந்த காதலை நிறைவேற்ற விசு உதவினானா என்பதுதான் படத்தின் கதை.  பீகார் பையன் வேண்டாம் வேறு யாராவது ஒரு பையனை பிடித்து வைத்து கல்யாணம் பண்ணிக் கொடுத்துடலாம் என குடும்பமே முடிவு செய்து ரிங்குவை தயார் செய்கிறார்கள். உணவில் மயக்க மருந்து கொடுத்து அவளை கல்யாணத்திற்கு தயார்படுத்துகிறார்கள். அந்த பொண்ணுக்கு மாப்பிள்ளையாக மருத்துவ மாணவர் மதுசூதனை பார்க்கிறார்கள். ஆனால் இருட்டில் தவறுதலாக விசு(தனுஷ்) பிடித்துக்கொண்டு வந்து கல்யாணம் செய்விக்கிறார்கள். மணப்பெண்ணுக்கு மயக்க மருந்து என்றால் மாப்பிள்ளைக்கு நைட்ரஸ் ஆக்சைடு கொடுக்கிறார்கள். இதனால அவர் சிரித்துக்கொண்டே வேறுவழியின்றி கல்யாணம் செய்கிறார்.  இன்னொரு விஷயம், மருத்துவ மாணவராக விசு தனது துறைத் தலைவரின் மகளை கல்யாணம் செய்யும் நிலையில் இருக்கிறார். இதற்கான நிச்சயம் ஒருவாரத்தில் நடக்கவிருக்கும்போ