அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி குடும்பம் என்றால் என்ன? பிறப்பு, தத்து எடுப்பது, திருமணம் ஆகிய உறவுகள் காரணமாக நீண்ட காலமாக ஒன்றாக வாழ்ந்து வரும் நபர்கள், அவர்களி்ன் உறவை குடும்பம் என்று அழைக்கலாம். சட்ட அங்கீகாரம் இல்லாமலும் மனிதர்கள் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களையும் குடும்பம் எனலாம். மாற்றுப்பாலினத்தவர்களை இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம். அமெரிக்காவில் குடும்ப அமைப்பு எப்படி மாறிவருகிறது? இப்போதும் திருமணம் செய்துகொண்டு வாழ்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஒற்றைப் பெற்றோர் அதிகரித்து வருகிறார்கள். இன்னொருபுறம், திருமணம் செய்யாமலேயே வாழ்பவர்களும் இருக்கிறார்கள். தனிமனித சுதந்திரத்தை அதிகம் எதிர்பார்க்கும் சமூகம், அமெரிக்காவுடையது. எனவே, இங்கு திருமணம் செய்வதும், அதேபோல இணக்கம் இல்லாதபோது விவாகரத்து பெறுவதும் இயல்பானது. கிழக்கு நாடுகளில் நிலைமை வேறுபட்டுள்ளது. குடும்ப அமைப்பு குழந்தைகளை எப்படி பாதிக்கிறது? ஒற்றைப் பெற்றோர் வளர்க்கும் குழந்தைகள், பொதுவாக இருவர் வளர்க்கும் பிள்ளைகளை விட அதிகமாக நெருக்கடிகளை எதிர்கொள்கிறார். வறுமை, குறைந்த கல்வி, எளிதா...