அடைய முடியாத லட்சியங்களால் மனமகிழ்ச்சி குறைகிறது! உளவியலாளர் ரீ குன் ஹூ

 



மொழிபெயர்ப்பு நேர்காணல்

எழுத்தாளர் ரி குன் ஹூ


2024ஆம் ஆண்டு ரி குன் ஹூ எழுதிய இஃப் யூ லிவ் டு 100, யூ மைட் ஏஸ் வெல் பி ஹேப்பி என்ற நூலை எழுதி வெளியிட்டார். இந்த நூல் பெங்குவின் பதிப்பகத்தில் கிடைக்கும். ரி குன் ஹூவுக்கு வயது 90. தன் வாழ்க்கையில் இரண்டாம் உலகப்போர், கொரிய போர், வறுமை, டைபாய்டு, வங்கி திவால் ஆவது, சிறைவாசம் என நிறைய அனுபவங்களை சந்தித்து கடந்து வந்தவர். ரி, தனது இருபதுகளில் முதல் தென் கொரிய அதிபரான சிங்மன் ரீக்கு எதிராக ஜனநாயக போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டு பத்து மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். உளவியலாளராக தொழில் செய்யும் ரீ, நாடு முழுக்க பல்வேறு மருத்துவமனைகள், மனநல மையங்களில் வேலை செய்திருக்கிறார். உளவியல் ரீதியான செயல்பாடுகளை சீர்திருத்தி மாற்றங்களை உருவாக்கியிருக்கிறார். ரீக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் பிறந்தனர். இன்று அவருக்கு பேரப்பிள்ளைகளமும் உண்டு. 


நீங்கள் உங்களுடைய எழுபதாவது வயதில் எழுதத் தொடங்கியிருக்கிறீர்கள். நூல்கள் வெளியாகி சிறந்த எழுத்தாளராகவும் அறியப்படுகிறீர்கள். வாழ்வில் பிந்தைய காலத்தில் எழுதுவது எப்படி இருக்கிறது?

எழுதுவதில் எனக்கு தொடக்கத்திலேயே ஆர்வம் இருந்தது. கல்லூரியில் படிக்கும்போது கவிதை கிளப்புகளில் உறுப்பினராக இருந்தேன். நான் உளவியல் மருத்துவராக பட்டம் பெற்றபிறகே எழுத தொடங்கினேன். அப்போது தென்கொரியாவில் பாலியல் கல்வி, குடும்பக் கட்டுப்பாடு, உளவியல் பற்றிய கல்வி இல்லை. என்னுடைய வழிகாட்டி, உளவியல் பற்றிய ஆராய்ச்சி அறிக்கைகளை எழுத ஆலோசனை கூறினார். உளவியல் கொள்கை, கோட்பாடுகளை எளிதான மொழியில் எழுத தொடங்கினேன். அந்தவகையில் நான் பதினைந்து நூல்களை எழுதிவிட்டேன். 2013ஆம் கொண்டு காலியன் என்ற பதிப்பகம், குறிப்பிட்ட மையப்பொருளில் நூலொன்றை எழுத அறிவுறுத்தியது. அப்படி எழுதியதுதான், ஐ வான்ட் டு ஹேவ் ஃபன் டில் தி டே நூல். அந்த நூல் வெளியாகி நன்றாக விற்று புகழைப் பெற்றது. அதற்குப் பிறகு நிறைய இடங்களில் இருந்து உரையாற்ற, எழுத வாய்ப்புகள் வந்தது. 

எழுத்து தொழிலாக தொடங்கியது இப்படித்தான். நான் எழுதுவது என் வாழ்க்கையில் எதிர்கொண்ட அனுபவங்கள், உளவியல் கோட்பாடுகள், அதில் நான் கற்றவை, உளவியல் சிகிச்சையில் நோயாகளிடம் இருந்து பெற்றவை ஆகியவற்றைத்தான். நான் முதலில் உளவியல் மருத்துவர்தான். உளவியல் சார்ந்து வாசகர்களுக்கு ஏதாவது தெரிய வேண்டுமென்றால் என்னுடைய அறிவை அனுபவத்தை அவர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். 


உலகில் மகிழ்ச்சி குறைந்து வருவதாக கருதுகிறீர்களா?


உலகில் மகிழ்ச்சியற்ற நிலையோ, மகிழ்ச்சியோ இல்லாமல் இல்லை. இதில், பெரும்பாலான இடங்களில் நாம் நம்மை ஏற்றுக்கொள்வதில்லை. அப்படி ஏற்றுக்கொண்டால் நிறைய வாய்ப்புகளில் நம்மை நாமே புரிந்துகொண்டு மகிழ்ச்சியைப் பெற முடியும். சாதிக்கவே முடியாத லட்சியங்களை வாழ்க்கையில் அமைத்துக் கொள்கிறார்கள். ஆசைகளும் உள்ளது. எனவே, விரக்தி, அதிருப்தி ஏற்படுகிறது. இது மகிழ்ச்சியற்ற நிலை அல்ல. உங்களுக்கு அதிருப்தி தரக்கூடியவற்றின் மூலாதாரத்தை அகற்றிவிட்டால் போதுமானது. அவற்றோடு நீங்கள் இணையாமல் இருந்தாலே போதுமானது. 


வாழ்க்கையில் உள்ள வேடிக்கை, மகிழ்ச்சி பற்றி கூறியிருக்கிறீர்கள். உங்களது தினசரி வாழ்க்கை பற்றி கூற முடியுமா?


மகிழ்ச்சி என்பது ஒரு கண்டுபிடிப்பு. அது உலகில் இல்லாமல் இல்லை. ஆனால், சிலர் அதை வேறுவிதமாக எதிர்பார்க்கிறார்கள். புரிந்துகொள்கிறார்கள். நாம் நமது வரம்புகளை, எல்லைகளைப் புரிந்துகொண்டு சிக்கலான ஆசைகளைக் கைவிட வேண்டும். எடுத்துக்காட்டாக எனக்கு ஒரு நண்பர் இருந்தார். அவர் செட்டாக நிறைய புத்தகங்களை கடையில் வாங்கி வருவார். ஆனால், அவற்றை அவரால் முழுமையாக படிக்க முடியவில்லை. அது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. நான் அவருக்கு சிறிய நூலை ஒன்றை எடுத்து படித்து நிறைவு செய்யுங்கள் என்று கூறினேன். இதுதான் விரக்தியின் மூலாதாரத்தை அகற்றுதல் என்பது. இனி அவர் தான் செய்ய முடியாதது பற்றி வருத்தம் கொள்ள மாட்டார். விரக்தி மனதில் இருந்து அகலும்போது மகிழ்ச்சி கிடைக்கிறது. அதன் வழியாக சாதனைகளுக்கும் நாம் செல்ல முடியும். 


நீ்ங்கள் உங்களது பேரப்பிள்ளைகளுக்கு மின்னஞ்சல்களை எழுதுவதாக கூறினீர்கள். இதை பிற பெற்றோருக்கும், தாத்தா பாட்டிகளுக்கும் பரிந்துரைப்பீர்களா?


கடந்த காலத்தில் வயதானவர்கள் வழிகாட்டுகளாக கருதப்பட்டனர். தற்போதைய தலைமுறையினர், சூழலுக்கு ஏற்ப தம்மை வேகமாக மாற்றிக்கொண்டு வருகிறார்கள். இளைய தலைமுறையினரை புரிந்துகொள்வது இன்று அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. நாம் அவர்களுடைய வாழ்க்கை முறை, மதிப்புகளை அறிந்துகொள்வது அவசியம். 


நாம் ஒன்றாக குடும்பமாக வாழும்போது ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வதாக நினைப்போம். எதிர்பார்ப்போம். ஆனால், அனைவருக்கும் வேலை, பள்ளி, கல்லூரி உள்ளது. அதில் ஏராளமான வேலைகள் உண்டு. நாம் ஒன்றாக செலவழிக்கும் நேரம் என்பது குறைவு. ஆண்டுக்கு ஒருமுறை குடும்பமாக சந்திக்கிறோம். வசந்தகாலம், இலையுதிர்காலத்தில் குடும்பமாக வார இறுதியில் விருந்துகளை நடத்துவது ஆகியவற்றைச் செய்கிறோம். நாங்கள் நேரடியாக சந்திக்காத போதும், மின்னஞ்சல் வழியாக உரையாடி வருகிறோம். ஒரே வீட்டில் இருந்தாலும் மின்னஞ்சல் வழியாக உரையாடுவது எளிதாக உள்ளது. நான் என் குடும்பத்தினரோடு மின்னஞ்சல் வழியாக உரையாடி வருகிறேன். அது வசதியாக உள்ளது. நாம் அருகில் வசிக்காதபோது தொழில்நுட்பத்தை ஏன் பயன்படுத்தக் கூடாது?.


நூலில் நீங்கள் உங்கள் மனைவி பற்றி கூறியிருந்தீர்கள். நீங்கள் தாம்பத்திய உறவில் காதல்மயமானவரா?


நான் என்னையே காதல்மயமானவன் என்று கூறிக்கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. நானும் எனது மனைவியும் சிறுவர்களாக இருக்கும்போதிலிருந்தே தெரியும். சிறுவயதில் இருந்தே ஒன்றாக வளர்ந்ததால், காதல் உணர்வுகள் உருவாக சிறிது காலம் பிடித்தது. எங்களுடைய உறவில் முக்கியமான அம்சம், ஒருவரையொருவர் எப்படி ஆதரித்து உதவிக்கொண்டோம் என்பதே. அதாவது, ஒருவருக்கு பல்வேறு விதமான கருத்துகள் லட்சியங்கள் இருந்தபோதிலும்..நாங்கள் இருவரும் மென்மையான மனம் கொண்ட துணைவர்கள் என்று கூறலாம்.  



நன்றி

தி இந்து ஆங்கிலம்

எ கொரியன் மாஸ்டர்ஸ் கைட் டு எ ஹேப்பி லைஃப்

நேகா மெக்ரோத்ரா

#நீண்ட ஆயுள், #ரீ குன் ஹூ #கொரியா #மின்னஞ்சல் #புதிய தலைமுறை, #மகிழ்ச்சி, #உளவியல், #காதல், #திருமணம்

#korean #longevity #psychiatrist #rhee kun hoo #happy #mind #goals #source #romantic #war #jail #ageing #wisdom #joy #books


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?