இடுகைகள்

இருள் உலகம லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இணையத்தின் இருள் உலகம்- என்ன நடக்கிறது?

படம்
இருள் உலகம் இணையத்தில் சாதாரணமாக கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட் ஆகியவற்றில் நாம் தேடுவது நான்கு சதவீத தகவல்கள்தான். இதைத்தாண்டி உள்ளது அரசு அமைப்புகள், ஆராய்ச்சி அமைப்புகள் சார்ந்த ஆவணங்கள். இவற்றை இணையத்தில் கூகுளிட்டு நீங்கள் பெறமுடியாது. இப்படி நாம் எளிதில் அணுக முடியாத ஆவணங்களின் அளவு 90 சதவீதம். இதைத்தாண்டி உள்ளதுதான் இணையத்தின் இருள் உலகு. இதில் நீந்த உங்களுக்கு ஸ்பெஷல் மென்பொருட்கள் தேவை. இங்கு போதைப்பொருட்கள், ஆபாச தளங்கள் என வெளியுலகின் சட்டதிடங்களுக்கு அப்பாற்பட்ட உலகு இயங்குகிறது. அனைத்தும் சூப்பராக பாதுகாப்புடன் என்கிரிப்ஷன் செய்யப்பட்டு இயங்குகிற இந்த உலகில் உள்ளே செல்வது அவ்வளவு எளிதல்ல. இங்குள்ள தகவல்களின் அளவு 6 சதவீதம். டார் ப்ரௌசரை வைத்து நார்மலாக கூகுள் உள்ளிட்ட தளங்களை அடைவது சிரமம். இதன்மூலம் பல்வேறு பிட்காயின் கைமாற்றங்களை, செய்தி பரிமாற்றங்களைச் செய்யலாம். இதில் குக்கீஸ்களை அனுமதிக்கும் முறை கிடையாது என்பதால், எந்த இணையதளம் சென்றாலும் உடனே அத்தளம் நமக்கு எச்சரிக்கை செய்தியை அனுப்பும். டார் உலாவியிடமிருந்து எந்த தகவலும் இணையதளத்தில் பதிவாகாது.