இடுகைகள்

பேதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உடலில் இருந்து நச்சுகளை நீக்க என்ன செய்வது? - டீ டாக்ஸ் உணவுகள்

படம்
    டீ டாக்ஸ் உணவுகள் உடலை, மனதை சுத்தம் செய்துகொள்ளுங்கள் என நிறைய உணவுகள் கூறிக்கொண்டு சந்தையில் விற்று வருகின்றன. உண்மையில் அவை நமக்கு நன்மை செய்கின்றனவா என்று கேட்டால் முழுமையாக ஆம் என்றும் இல்லை என்றும் கூற முடியாது. கல்லீரலை சுத்திகரிக்கும் சில உணவுப்பொருட்கள் உள்ளன. அவற்றைத்தான் டீடாக்ஸ் எனக் கூறி தனி உணவுமுறையாகவே வடிமைக்கிறார்கள். வெளிப்படையாகச் சொன்னால், டீ டாக்ஸ் என்பது உடலிலுள்ள நச்சுகளை நீக்கும் இயல்பான முறை. உடலில் வியர்வை சுரப்பது, மலம் கழிப்பது, சிறுநீர் கழிப்பது ஆகியவையும் நச்சு நீக்க செயல்கள்தான். விஷயம் என்னவென்றால், கல்லீரலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் அதிகளவு நீரைக் குடித்து முடிந்தால், உண்ணாவிரதம் இருப்பது சிறந்த டீ டாக்ஸ் செயல் எனலாம். உண்ணாவிரதம் இருக்கும்போது வெந்நீர் குடித்து வந்தால் வயிறு சுத்தமாகும். இதை ஒருவர் ஒருவேளை இருவேளை என தொடங்கி சில நாட்களுக்கு கடைபிடிக்கலாம். இந்த காலத்தில் உடலில் இருந்து மலம், சிறுநீர் வழியாக நச்சுகள் முழுமையாக வெளியேறும். இதன் விளைவாக உடலுக்கு ஒவ்வாமை ஏற்படுத்திய நச்சுகள் மெல்ல களையப்படும்.   மாவுச்சத்து உணவு, வறுத