ஆண்களின் மேலாதிக்கத்தை, சுகத்தை ஆதரித்துப் பேசும் அராபிய காமசூத்திர நூல் - நறுமணத்தோட்டம்
நறுமணத் தோட்டம் நெஃப் சுவாஹி ஆங்கில மொழிபெயர்ப்பு - ரிச்சர்ட் பர்ட்டன் தமிழில் பெரு முருகன் இந்த நூல் அராபிய காமசூத்திரம். இதை மொழிபெயர்ப்பாளர் தமிழுக்கு மொழிபெயர்த்து முக்கிய இலக்கியப் பங்காற்றியுள்ளார். நூல் எப்படிப்பட்டது என்றாலும் அதன் வழியாக அரபு நாடுகளில் உள்ள சமூக நிலைமை, ஆண், பெண் பாகுபாடு, மேலாதிக்கம் போன்றவற்றை அறிய முடிகிறது. அதுவே முக்கியமான விஷயம். நூலில் அரபு நாட்டு ஆண்கள் எப்படிப்பட்ட பெண்களை உறவு கொள்ள விரும்புகிறார்கள் என்பதை திட்டவட்டமாக வரையறுத்துவிடுகிறார்கள். உடல் பருமனான, இடுப்பில் மடிப்புகள் விழும் பெண்கள். இவர்கள்தான் ஆண்களுக்கு சுகத்தை தருபவர்கள். உண்மையில் பாலுறவு என்பதில் பங்குகொள்ளும் இருவருக்குமே இன்பம் பகிரப்படுகிறது. ஆனால், இந்த நூலைப் பொறுத்தவரை முழுக்க ஆண்களுக்கான பார்வையில் எழுதப்பட்டுள்ளது. ஆண்களுக்கு பெண்கள் எப்படி இருக்கவேண்டும், உடல் பருமனாக, யோனி அகலமாக, உடலுறவின்போது பெண் வாசனை திரவியங்களை பூசிக்கொண்டு எழுச்சி திரும்ப திரும்ப உருவாக்கும் வகையில் இருக்கவேண்டும் என கூறப்படுகிறது. நூல் எழுதப்பட்ட காலம் பெண்களை அடிமைகளாக வைத்து...