இடுகைகள்

டூரிங் விருது லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Time 100 செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் ஆராய்ச்சியாளர்!

படம்
           யோசுவா பென்ஜியோ செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர் yoshua bengio யோசுவா, 2018ஆம் ஆண்டு டூரிங் விருதை தனது செயற்கை நுண்ணறிவு விருதுக்காக பெற்றார். இவருடன் ஹின்டன், யான் லெகன் ஆகியோரும் இந்த விருதை இணைந்து பெற்றனர். யோசுவா, செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியை பல்லாண்டுகளாக செய்து வருகிறார். இவரது ஆராய்ச்சியின் விளைவாக, ஆழ்கற்றல் நுட்பம் புகழ்பெற்றுள்ளது. செயற்கை நுண்ணறிவு வெகுஜனத்தன்மை கொண்டதாக மாறுவதில் யோசுவா முக்கிய பங்காற்றியுள்ளார். செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியை செய்துவிட்டு புகழ்பெற்றுவிட்டு விருதுகளைப் பெற்றுவிட்டு சென்றுவிடவில்லை. அதன் இன்னொரு பக்கம், பாதகமான விஷயங்களைப் பற்றியும் எச்சரிக்கை செய்து வருகிறார். இந்த வகையில், இங்கிலாந்தில் உள்ள செயற்கை நுண்ணறிவு தொடர்பாக அமைக்கப்பட்ட மாநாடுகளுக்குக் கூட பல்வேறு ஆலோசனைகளை அளித்து வருகிறார். வட அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா என உலகின் பல்வேறு நாட்டு அரசுகளுக்கும் தனது ஆக்கப்பூர்வமான பங்களிப்பை அளித்து வருகிறார். டைம் 100 ஜியோஃப்ரீ ஹின்டன்