இடுகைகள்

சுற்றுலா கட்டுப்பாடு! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சுற்றுலாதளங்களை அழிக்கும் சுற்றுலாபயணங்கள்!

படம்
ஐரோப்பாவை அழிக்கும் சுற்றுலா !   இந்தியாவின் தாஜ்மஹால் டெல்லியில் அதிகரிக்கும் மாசுக்களால் பொலிவிழந்து வருவது நாம் அனைவரும் அறிந்த நியூஸ்தான் . அதில் அறியாதது , வரலாற்று பொக்கிஷமான தாஜ்மஹாலின் சிதைவுக்கு அதிகரிக்கும் உள்நாட்டு , வெளிநாட்டு சுற்றுலாபயணிகளும் முக்கிய காரணம் என்பதுதான் . வருவாய் மோகத்தில் ஆழ்ந்துள்ள இந்தியா இதுகுறித்து பெரியளவு ஆர்வம் காட்டவில்லை. ஆனால் மேற்குல நாடுகள் சுற்றுலா பயணிகளை கட்டுப்படுத்த பல்வேறு விதிகளை விதிக்கத் தொடங்கியுள்ளன . அதிதிகளுக்கு கட்டுப்பாடு! இந்திய அரசு , இன்கிரடிபிள் இந்தியா என டூரிஸ திட்டங்களை தீட்டி ' அதிதி தேவோ பவ ' என சுலோகன்களை சொல்லி ஹாப் ஆன் ஹாப் ஆஃப் பஸ்களில் பாரினர்களை ஏற்றி அரவணைப்பதில் தவ றேதுமில்லை. ஆனால் இந்தியாவுக்கு அபரிமிதமாக வரும் வெளிநாட்டு பயணிகளால் ஏற்படும் சூழல்கேடுகள் பற்றி கவலைப்பட வேண்டிய நேரமிது . இத்தாலி , பிரான்ஸ் , குரோஷியா , நெதர்லாந்து ஆகிய நாடுகள் டூரிஸ்டுகளால் ஏற்படும் பாதிப்புகளை உணரத்தொடங்கி உஷாராக சட்டங்களை உருவாக்கத் தொடங்கிவிட்டன . அப்படி என்ன பாதிப்புகள் ஏற்பட்டுவி