இடுகைகள்

காய்ச்சல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நோய் எதி்ர்ப்பு சக்தி செயல்படுவதை அறிந்துகொள்ளுங்கள்!

படம்
                  நோய் எதிர்ப்பு சக்தி செயல்படுவது எப்படி ? வைரஸ் பாக்டீரியா , பூஞ்சை என அனைத்து நுண்ணுயிரிகளையும் எதிர்ப்பது நோய் எதிர்ப்பு சக்திதான் . தடுப்பூசி என்பது கூட நோய் எதிர்ப்பு சக்தி அமைப்புக்கு நோய் கிருமிகள் பற்றி அறிமுகப்படுத்தி வைப்பதுதான் . இதனால் மறுமுறை நோய்க்கிருமிகள் உடலில் தட்டுப்பட்டால் எளிதாக எதிர்கொள்ள முடியும் . உடலில் பரவி வரும் வியாதிகளுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி செயல்படும் விதம் உள்ளது . இதனைப் புரிந்துகொண்டால் நோ்ய்களைப் பற்றி எளிதாக அறிந்துகொண்டு உடல்நலம் காக்கலா் . ம் . உடலிலும் உடலுக்கு வெளியிலும் ஏராளமான நுண்ணுயிரிகள் உள்ளன . இவற்றை எதிர்த்து தாக்கி உடலைக் காப்பது என்பது எளிதான பணியல்ல . இந்த நோய் எதிர்ப்பு பணியில் உடலிலுள்ள பல்வேறு பாகங்களும் செயலாற்றுகின்றன . குறிப்பாக தோல் முதல் வயிற்றிலுள்ள நுண்ணுயிரிகள் வரை நோய்த்தடுப்பில் உதவுகின்றன . ஆனால் இது நிலையாக இப்படித்தான் செயல்படும் என்று கூற முடியாது . நோய் எதிர்ப்பு சக்திக்கு உள்ள நினைவுத்திறன்தான் நோயை எதிர்க்க பெரும்பாலும் பயன்படுகிறது . தோல் பற்றி முன்னமே எழுதியது ப

உடலின் வெப்பநிலை அளவுகள் மாறிவருகின்றன!- பழங்குடிகளிடம் செய்த ஆய்வில் தெரிய வரும் உண்மைகள்!

படம்
      சட்டென மாறுது உடலின் வெப்பநிலை ! சராசரியாக கருதப்பட்ட 37 டிகிரி செல்சியஸ் உடல் வெப்பநிலை , தற்போது உலக நாடுகளில் வாழும் மக்களிடையே மாற்றம் காணத் தொடங்கியுள்ளதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர் . அமெரிக்கா , இங்கிலாந்து ஆகிய நாடுகளில் வாழும் மக்களின் சராசரி உடல் வெப்பநிலை , மெல்ல 37 டிகிரி செல்சியலிருந்து மாற்றம் கண்டு வருகிறது . பொலிவியா நாட்டில் பழங்குடி மக்களின் உடல்நிலை பற்றிய ஆராய்ச்சி 16 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது . இதுதொடர்பான ஆய்வு அறிக்கை சயின்ஸ் அட்வான்சஸ் இதழில் வெளியாகியுள்ளது . இதிலுள்ள பல்வேறு அம்சங்களைப் பொருத்திப்பார்த்தால் பொதுமக்களின் உடல்வெப்பநிலை மாறுபடுவதற்கான காரணங்களை புரிந்துகொள்ள முடியும் . 1851 ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த மருத்துவர் கார்ல் ரெய்ன்கோல்டு ஆகஸ்ட் வொண்டர்லிச் , 25 ஆயிரம் நோயாளிகளை ஆராய்ச்சி செய்து தெர்மாமீட்டருக்கான அளவீட்டை உருவாக்க முயன்றார் . 1868 ஆம் ஆண்டு கார்ல் எழுதி வெளியிட்ட நூலில் , மனிதரின் சராசரி உடல் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் என்று உறுதி செய்து கூறினார் . அண்மையில் வெளியான பல்வேறு

விமானத்தில் செல்லும்போது அழுகை வருவது ஏன்? பதில் சொல்லுங்க ப்ரோ? - வின்சென்ட் காபோ

படம்
    pixabay       பதில் சொல்லுங்க ப்ரோ ? வின்சென்ட் காபோ காய்ச்சலில் இருக்கும்போது சாப்பிடாமல் இருப்பதும் , சளிப்பிடித்திருக்கும்போது சாப்பிடுவதும் சரியா ? சளி பிடித்திருக்கும்போது சாப்பிடுவது பொதுவானதுதான் . நோய்த்தொற்றை எதிர்கொள்ள உடலில் பலம் தேவை . எனவே நோயுற்றிருக்கும்போது ஏதாவது உணவை சாப்பிடுவது அவசியம் . உடலில் நீர்ச்சத்து குறைந்திருக்கும்போது , சூப் தயாரித்து குடிப்பதை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர் . 2002 இல் செய்த ஆராய்ச்சிப்படி ஆராய்சியாளர்கள் சளிப்பிடித்திருக்கும்போது உணவை முறையாக எடுத்துக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கிறது என்று கூறினர் . இதில் கலந்துகொண்டவர்கள் குறைவானர்கள்தான் . மேலும் பசித்தால் சாப்பிடாமல் கட்டாயப்படுத்தி சாப்பிடுவது சரியானதல்ல . கிரேக்கத்தில் காய்ச்சல் அடிக்கும்போது எதையும் சாப்பிடாமல் பட்டினி கிடப்பது புழக்கத்தில் இருந்து வந்த து . இது காய்ச்சலை குணப்படுத்தும் என்று கூறமுடியாது . உணவு எடுத்துக்கொள்வதை விட முழுமையாக ஒய்வெடுப்பது முக்கியமானது . விமானத்தில் படங்களை பார்க்கும்போது கண்ணீர் வருவது ஏன் ? தனி

சளி பிடித்திருக்கும் நிலையில் உடற்பயிற்சி செய்யலாமா?

மிஸ்டர் ரோனி சளி பிடித்திருக்கும்போது உடற்பயிற்சி செய்யலாமா? சளி பிடித்திருக்கும்போது அதனை விரட்டும் பணியில் உடல் இருக்கும். அப்போது பார்த்து நீங்கள் டம்பெல், பென்ச் பிரஸ் என செய்தால் உடல் வெப்பநிலை அதிகரிக்கும், உடல்நிலை இன்னும் மோசமாகும். எளிதான உடற்பயிற்சிகளைச்செய்யலாம் தவறில்லை. பாத் பல்கலைக்கழக அறிக்கைப்படி, சளி பிடித்து உடல்வெப்பநிலை காய்ச்சல் வரும் நிலையில் இருக்கும்போது, ஓய்வு எடுப்பதே நல்லது. இல்லையெனில் உடலை ஐசியுவில் வைத்து பராமரிக்கும்படி ஆகிவிடும் வாய்ப்பு உள்ளது. நன்றி - பிபிசி

காய்ச்சலின்போது உடல் நடுங்குவது ஏன்?

படம்
Pexels.com ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி காய்ச்சலின் போது உடல் குளிருவது ஏன்? காய்ச்சலின்போது உடலின் வெப்பநிலை அளவுக்கு அதிகமாக அதிகரிக்கிறது. அதாவது இயல்பு வெப்பநிலைக்கும் அதிகமாக. நீங்கள் கடினமாக புஷ்அப் எடுக்கிறீர்கள் என்றால் வெளிப்புற வெப்பநிலையை விட உடல் வெப்பநிலை அதிகரிக்கும். ஆனால் இயல்பு வெப்பநிலை என்பது 36.8 டிகிரி செல்சியசாகவே இருக்கும். உடற்பயிற்சியின்போது ஏற்படும் உடல் வெப்பநிலை தற்காலிகமானது. ஆனால் காய்ச்சலின்போது ஏற்படும் உடல்வெப்பநிலை இதிலிருந்து மாறுபட்டது. உடல்வெப்பநிலை 36.8 டிகிரி செல்சியசிற்கு கீழே குறையும்போது உடல் நடுங்கத்தொடங்கும். இதனால்தான் கைகள் அறுபது வயது தாத்தா போல நடுங்குகிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தி, உடலின் வெப்பத்தை அதிகரிக்க காரணம், நோய் ஏற்படுத்திய பாக்டீரியாவின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி நோயை விரட்டவே. உடலின் கழிவுகள் வெளியேறினாலே காய்ச்சல் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். ஆனால் அதுவரை காய்ச்சலின் நடுக்கத்தை பாதிப்பை நம்மால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. காரணம், உடலின் பலவீனமே ஆகும். நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்