உடலின் வெப்பநிலை அளவுகள் மாறிவருகின்றன!- பழங்குடிகளிடம் செய்த ஆய்வில் தெரிய வரும் உண்மைகள்!

 

 

 Fever Thermometer, Digital, Fever, Health



சட்டென மாறுது உடலின் வெப்பநிலை!





சராசரியாக கருதப்பட்ட 37 டிகிரி செல்சியஸ் உடல் வெப்பநிலை, தற்போது உலக நாடுகளில் வாழும் மக்களிடையே மாற்றம் காணத் தொடங்கியுள்ளதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.


அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் வாழும் மக்களின் சராசரி உடல் வெப்பநிலை, மெல்ல 37 டிகிரி செல்சியலிருந்து மாற்றம் கண்டு வருகிறது. பொலிவியா நாட்டில் பழங்குடி மக்களின் உடல்நிலை பற்றிய ஆராய்ச்சி 16 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதுதொடர்பான ஆய்வு அறிக்கை சயின்ஸ் அட்வான்சஸ் இதழில் வெளியாகியுள்ளது. இதிலுள்ள பல்வேறு அம்சங்களைப் பொருத்திப்பார்த்தால் பொதுமக்களின் உடல்வெப்பநிலை மாறுபடுவதற்கான காரணங்களை புரிந்துகொள்ள முடியும்.


1851ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த மருத்துவர் கார்ல் ரெய்ன்கோல்டு ஆகஸ்ட் வொண்டர்லிச், 25 ஆயிரம் நோயாளிகளை ஆராய்ச்சி செய்து தெர்மாமீட்டருக்கான அளவீட்டை உருவாக்க முயன்றார். 1868ஆம் ஆண்டு கார்ல் எழுதி வெளியிட்ட நூலில், மனிதரின் சராசரி உடல் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் என்று உறுதி செய்து கூறினார். அண்மையில் வெளியான பல்வேறு ஆய்வுகளில் மேற்சொன்ன வெப்பநிலை அளவீடு 36.5, 36.6, 36.7 டிகிரி செல்சியஸ் என மாறுபாடுகளை அடைந்துள்ளது. அமெரிக்காவில் கடந்த இரு நூற்றாண்டுகளாக மக்களின் உடல்வெப்பநிலை சராசரி வெப்பநிலையை விட சரிவைச் சந்தித்துள்ளது.

Influenza, Flu, Fever, Grippe, Cold, Bed, Disease

பொலிவியா நாட்டில் 5,500 பழங்குடி மக்களின் உடல் வெப்பநிலையை சோதித்து 18 ஆயிரம் மாதிரிகளை சேகரித்துள்ளனர். திசிமானே என்ற பழங்குடி மக்களின் உடல்வெப்பநிலை 36.5 டிகிரி செல்சியஸாக உள்ளது. இது ஒப்பீட்டளவில் அமெரிக்கா, இங்கிலாந்து நாட்டில் மக்களுக்கு ஏற்படும் உடல் வெப்பநிலை மாறுபாட்டை விட அதிகம். ’’இம்மக்களுக்கு ஏற்படும் காசநோய், சளி, இருமல், நிம்மோனியா, கொக்கிப்புழு பாதிப்பு ஆகியவை காரணமாகவே உடல்வெப்பநிலை மாறுபாடு ஏற்பட்டுள்ளது’’ என்கிறார் கலிபோர்னியா பல்கலைக்கழக மானுடவியலாளரான மைக்கேல் கர்வென்.


பழங்குடிமக்களுக்கு மருத்துவ வசதிகள் எளிதாக கிடைப்பதில்லை. ஆனால் நகர மக்கள் தரமான மருத்துவ வசதிகளைப் பெற்றிருப்பதோடு, பெருமளவு நோய்த்தொற்று அணுகாமலும் வாழ்கிறார்கள். இதுவும் நகர மக்களின் உடல் வெப்பநிலை குறைந்து வருவற்கு காரணம். ஒருவர் ஆரோக்கியமான உடலைக் கொண்டிருக்கும்போது, நோய்த்தொற்றை எதிர்ப்பதற்காக உடல் வெப்பநிலை அதிகரிக்காது. அறையை குளிரூட்டும், கதகதப்பூட்டும் வசதிகள் உடல்வெப்பநிலையில் மாற்றம் ஏற்படுத்துகின்றன. உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான உடல் வெப்பநிலை கிடையாடு என்பதை மருத்துவர்கள் அறிவர். மேற்சொன்ன பல்வேறு அம்சங்கள், உடல்வெப்பநிலை மாறுவதற்கு முக்கியமான காரணங்கள் என தெரியவந்துள்ளன.


தகவல்

IE


98.8 vs new normal why body temperature decling over time?

indian express

30 oct 2020

thanks

dinamalar pattam





கருத்துகள்

பிரபலமான இடுகைகள்