விளையாட்டுப்பொருட்களின் தலைமையிடமாக இந்தியா!- சீனாவை முந்தும் திறன் இந்தியாவிடம் உள்ளதா? ஒரு அலசல்
விளையாட்டுப்பொருட்களின் தலைமையிடமாக இந்தியா!
உலகளவில் உள்ள விளையாட்டுப் பொருட்களின் சந்தை 7 லட்சம் கோடி. அதில் இந்தியாவின் பங்கு 7 ஆயிரம் கோடியாக உள்ளது.
பிரதமர் மோடி, இந்தியா விளையாட்டுப் பொருட்கள் தயாரிப்பில் உலகளவில் முன்னணி வகிக்க பல்வேறு தொழில்நிறுவனங்கள் உதவ வேண்டும் என்று கூறியிருந்தார். பொதுமுடக்க தளர்விலிருந்து வெளிவந்திருக்கும் நிறுவனங்கள், பிரதமரின் கோரிக்கைப்படி உற்சாகமாக வேலை செய்யத் தொடங்கியுள்ளன. அரசு உத்தரவுப்படி பிஐஎஸ் சான்றிதழ் வாங்கும் பொம்மைகள் மட்டுமே, இனி சந்தையில் கிடைக்கும் என்ற விதி, புதிய சிக்கலாகியுள்ளது.
‘’’அரசு உத்தரவுப்படி விளையாட்டுப் பொருட்களைத் தயாரிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.’’ என்கிறார் அனைந்திந்திய விளையாட்டுப் பொருட்கள் தயாரிப்பு அசோசியேஷனின் தலைவரான குக்ரேஜா. 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை பிஐஎஸ் சான்றிதழ் பெற நிறுவனங்களுக்கு அவகாசம் உள்ளது.
கொரானோ காலத்திற்கு பிறகு இப்போதுதான் விளையாட்டுப் பொருட்களின் தயாரிப்பு 40% இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. பிஐஎஸ் சான்றிதழுக்கான கட்டணங்களை சிறு நிறுவனங்கள் உடனடியாக செலுத்துவது கடினமாகவே இருக்கும். மேலும் அவை தொழிற்சாலைகளை மூடாமல் இருப்பது முக்கியம். அனைத்து தொழிற்சாலைகளிலும் ஆய்வகங்களை அமைப்பதை விட மத்திய அரசு பொதுவாக பிஐஎஸ் ஆய்வகங்களை உருவாக்கினால், சான்றிதழ்களைப் பெறுவதற்கு தாமதமாகாது.
இந்தியாவில் விற்கப்படும் மூன்றில் இருபங்கு விளையாட்டுப் பொருட்கள் தரம் குறைந்தவையாகவும், நச்சுப்பொருட்களைக் கொண்டதாகவும் இருப்பதால், தரச்சான்றை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இந்தியாவில் 4 ஆயிரம் விளையாட்டுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. இதில் பெருநிறுவனங்கள் 3%, நடுத்தர நிறுவனங்கள் 22%, சிறு நிறுவனங்கள் 75% ஆகும். இந்திய நிறுவனங்கள் பிளாஸ்டிக், மரம், இரும்பு, கல்விசார்ந்தவை, மென்மையான பொம்மைகள் என பல்வேறு வகையில் விளையாட்டுப் பொருட்களை தயாரித்து வருகின்றன. முறைப்படுத்தப்பட்ட இந்திய சந்தை மதிப்பு 3,500 முதல் 4,500 கோடி ஆகும். சிறந்த கலைஞர்கள், ஆதார பொருட்கள், மனிதவளம் ஆகிய பலமான ஆதார கட்டமைப்பு இந்தியாவுக்கு உண்டு. இவற்றைக் கொண்டு இந்தியா உலகச்சந்தையில் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உண்டு.
தகவல்
ET
Wind the toy can india be a toy hub of the world as the pm has exhorted? it’s tough game
prerna katiyar
thanks
dinamalar pattam
கருத்துகள்
கருத்துரையிடுக