வங்கிகளின் வகைகள் என்ன, அதன் தகுதி, திறன்கள்!
பணம் கையாளப்பழகுவோம்
வங்கிகளின் புதிய பிரிவுகள் மற்றும் வணிக நிறுவனங்கள்
பாரம்பரியமான வங்கிகள் மட்டுமன்றி, நவீன காலத்திற்கேற்ப நிதி வங்கிகள், சிறிய வங்கிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. இவ்வகை நிறுவனங்கள் பாதுகாப்பான சூழலில் மக்களுக்கு சேவைகளை வழங்கி வருகின்றன.
நிதி வங்கி
வாடிக்கையாளர்களிடம் ரூ.1லட்சம் அளவுக்ககு மிகாமல் டெபாசிட் பெறலாம்.
ஏடிஎம், டெபிட் கார்டுகளை வழங்கலாம். கிரடிட் வழங்க முடியாது.
கடன்களை வழங்க முடியாது.
நிதி வங்கிகள் மியூசுவல் பண்ட் மற்றும் காப்பீடு தொடர்பான சேவைகளை வழங்குகிறார்கள்.
சிறு வங்கிகள்
இவை சிறு, குறு தொழில்நிறுவனங்கள் மற்றும் விவசாயிகளுக்கு ரூ.25 லட்சம் வரை கடன்களை வழங்குகின்றன. முறைப்படுத்தாத துறை சார்ந்து சிறு வங்கிகள் செயல்படுகின்றன.
வணிகப் பிரதிநிதி
இவர் வங்கி சார்ந்து அதன் பிரதிநிதியாக செயல்படுபவர். தொலைதூர கிராமங்களில் உள்ள வாடிக்கையாளர்களை தேடிச்சென்று அவர்களுக்கு தேவையான வங்கிச் சேவைகளை வழங்குவார்.
பிரதிநிதியின் பணிகள்
வங்கிக்கணக்கு தொடங்க உதவுவது
தொகையை டெபாசிட் செய்ய, எடுக்க உதவுவது
பிறரது கணக்கிற்கு தொகையை பரிமாற்றம் செய்வது
கடன் விண்ணப்பங்களைப் பெறுவது
சிறு அளவிலான கடன்களை வழங்குவது
கவனத்திற்கு..
அருகிலுள்ள வங்கி கிளையை அணுகி, அதன் வணிக பிரதிநிதிகள் உங்கள் பகுதியில் செயல்படுகிறார்களா என்று கேளுங்கள்.
வணிகப்பிரதிநிதி பற்றிய சந்தேகம் இருந்தால், வங்கியிடம் கேள்விகளைக் கேட்டு தெளிவு பெறுங்கள்
www.iba.org.in/bcregistry/to வலைத்தள முகவரியில் உங்கள் பகுதி பிரதிநிதியை சோதித்து பாருங்கள்.
வணிகப் பிரதிநிதி தரும் சேவை சரியில்லை என்றால் நீங்கள் வங்கியிடம் முறையிடலாம்.
டிஜிட்டல் பணப்பரிமாற்றம்
வங்கியில் NEFT, RTGS, IMPS என மூன்று வழிகளைப் பயன்படுத்தி பணத்தை பிறருக்கு அனுப்ப, பெற முடியும். இந்த வசதிகளை வங்கி வலைத்தளத்தில் அல்லது செயலி வழியாக (internet banking, mobile banking ) பயன்படுத்த முடியும்.
NEFT, RTGS, IMPS
பணப்பரிமாற்ற காலம் சிலமணிநேரம் உடனே உடனே
வேலை நேரம் 24/7 7am-6pm 24/7
(வார இறுதி, (வார இறுதி, (வார இறுதி
வங்கி விடுமுறை சனிக்கிழமை) வங்கி விடுமுறை
நாட்களிலும்) நாட்களிலும்)
குறைந்தபட்சதொகை ஏதுமில்லை ரூ.2 லட்சம் ஏதுமில்லை
அதிகபட்சம் வரம்பில்லை வரம்பில்லை ரூ.2லட்சம்
கருத்துகள்
கருத்துரையிடுக